கமல்ஹாசனின் விக்ரம் – NOT A REVIEW

கமல்ஹாசன் என்ற அசுர நடிகனின் விசிறியாக இருந்து பார்த்தால் ‘விக்ரம்’ ஏமாற்றம் தரும் படம்.

ராஜ்கமல் படத்தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கமல்ஹாசன் பக்கம் இருந்து யோசித்தால் ‘விக்ரமி’ன் வெற்றிப்பாதை மலைப்புத் தருவதுதான்.

பகுதி நேர அரசியல்வாதி, பகுதி நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்றாகி விட்டாலும் எல்லா நேரமும் பெருங்கனவொன்றைக் கண்டு கொண்டிருக்கும் மன நுட்பமும் அதைச் செயலாக்கிக் காட்டக்கூடிய வினைத்திட்பமும் கொண்ட கமல்ஹாசனாரிடம் லோகேஷ் கனகராஜ் இலாபகரமான முன்மொழிவொன்றை வைக்கிறார்:

“சார், கமல்ஹாசன் என்ற brand ஐ மட்டும் பயன்படுத்திக்கொள்கிறேன். உங்களைச் சுற்றித்தான் கதை நகரும். ஆனால் மற்றப்படங்களைப் போல நீங்கள் மாய்ந்து மாய்ந்து நடிக்கத்தேவையில்லை. அதை ஃபஹாட் ஃபாசிலும் விஜய் சேதுபதியும் நரேனும் பார்த்துக்கொள்வார்கள். செலவாகும் நேரம் சிறிதாகவும் வரவு பெரிதாகவும் இருக்கும்”

இடைவேளைக்குப் பின்னான இரண்டாம் பகுதியில் காட்சிச் சட்டகங்கள் பார்வையாளர்களைத் திகைப்பில் ஆழ்த்த வேண்டும் என்று மினக்கெட்டதில் லோகேஷுக்குக் கதையின்பால் கொண்டிருந்திருக்க வேண்டிய கவனம் கொஞ்சம் பிசகி விட்டதைப் போலத் தோன்றியது.

கமல்ஹாசன் என்ற நடிகன் விக்ரம் படத்தில் அறவே இல்லை என்று சொல்கிறீர்களா என்று கேட்பவர்களுக்கு…

இல்லனு எங்க சொன்னேன்… இருந்திருந்தா நல்லா இருக்கும்ணுதான் சொல்றேன் 😃

Leave a Comment

Your email address will not be published.