போட்டி மனப்பான்மை அவசியமா?

  • 1 நிமிட வாசிப்பு –

போட்டி போடுவது என்பது முதிராத நிலையில் இருந்த முதலாளித்துவம் தன்னை முன் தள்ளுவதற்காக மனிதர்களிடையே வளர்த்து விட்ட மனப்பண்பு. ஓயாத மனித உழைப்பு அசுரத்தனமாகப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாயை.

நுண்மனமும் கூர் அறிவும் கொண்டவர்களுக்கு இன்றைய நவீன உலகில் போட்டி மனப்பான்மை உபயோகம் தராத ஒன்று. இன்று அவசியமானது கூட்டு நன்மைக்காக ஒவ்வொருவரும் தத்தமது தனி ஆற்றலை – தனித்துவமான ஆற்றலை – ஒருங்கிணைத்துச் செயல்படுவது. விளைவாகக் கிடைக்கும் கூட்டு நன்மை அவரவர் தனிப்பட்ட நன்மைக்கும் உரமாகும்.

நீங்கள் ஒவ்வொரு முறை ஓடும்போதும் உங்களை நீங்களே முந்த முயலுங்கள் – முன்னிருந்ததிலும் பார்க்க மேம்பட்ட மனிதராக வரும்படி உங்கள் ஆன்மாவை உந்தித் தள்ளுங்கள். மற்றவர் எப்படி ஓடுகிறார் என்று பார்ப்பது உங்கள் வேகத்தைக் குறைக்கும்.

பரீட்சை வைத்து முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று மாணவர்களைத் தரப்படுத்தும் முறையை அறவே ஒழித்து விட்டது சிங்கப்பூர்.

ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒரு சிறப்புத் தேர்ச்சி அல்லது திறமை இருக்கும். அந்த ஆற்றலை அடையாளம் கண்டு பயன் கொள்வதில்தான் வளர்ச்சி தங்கியிருக்கிறது.

புகழ் பெற்ற ஒரு மேற்கோள் இருக்கிறது:

எல்லோரும் மேதைகள் தான். ஆனால் ஒரு மீனை அதன் மரம் ஏறும் ஆற்றலைக் கொண்டு மதிப்பிட்டீர்கள் என்றால் வாழ்க்கை பூராவும் அது தன்னை முட்டாள் என்று நினைத்து வருந்திக்கொண்டிருக்கும்.

Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×