சினிமா

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும்

பொறுப்புத் துறப்பு: ஆங்கில வார்த்தைகளை அள்ளித் தூவித் திரைபாடல்கள் எழுதுவதை வரவேற்பவன் அல்லன் நான். என்றாலும் அப்படியான பாடல்களே அளவு கணக்கற்று வெளியாகின்றன – அவைதாம் இளையோரை ஈர்க்கின்றன என்ற வாதத்தோடு. சரி, அப்படி ஈர்க்கப்படுபவர்களிடத்தில் அஃதை வைத்தே தமிழ் பேசலாம் என்ற நினைப்பில் முகநூலில் எழுதிய பதிவு இது: சிலம்பரசன் ‘புல்லட்டு சாங் (bullet song)’ பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பாடியிருக்கிறார். அது பற்றி வேடிக்கையான ஓர் அறிவிப்புக் காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள் […]

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும் Read More »

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது? எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன். ‘அலை பாயுதே’ படத்தில் வரும் ‘ஸ்நேகிதனே’ பாடலை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன். அதன் ஆரம்பத்தில் வரும் ‘கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கருவம் அழிந்ததடி’ என்ற வரி தமிழின் மிகப்பழம்பெரும் பா வடிவமான குறள் வெண்பாவின் இலக்கண அமைப்புக்குள் அடங்கக் கூடியதாய் இருப்பதை நேற்றுத்தான் எதேச்சையாகக் கவனித்தேன்.

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா Read More »

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும்

மணிரத்னம் ஒரு epic filmmaker. எந்த அர்த்தத்தில் என்றால் அவர் சொல்ல விழைகிற கதைகள் காவியக் கருப்பொருள் கொண்டவை. தளபதி, ராவணா நேரடியாக இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டு மறு ஆக்கம் செய்யப்பட்ட கதைகள். அக்னி நட்சத்திரத்தின் கார்த்திக், மௌன ராகத்தின் ரேவதி ஆகியோரின் மனக்கொந்தளிப்புகளும் கூட எனக்கு முறையே கர்ணன்/விதுரனையும் அம்பையையும் நினைவு படுத்துபவை. காவியச்சுவை கொண்ட கதைகளை நாடுகின்ற மனப்பாங்குதான் மணிரத்னத்துக்கும் ஜெயமோகனுக்கும் ஒத்திசைவைத் தந்திருக்கக் கூடும் என்றும் நான் எண்ணிக்கொள்வதுண்டு. செக்கச் சிவந்த வானத்தைத்

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும் Read More »

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை

நிறையவே பாடுபட்டு ஒரு மலை உச்சியை அடைந்து விடுகிறீர்கள். அடுத்து என்ன? உச்சியை அடைந்தவருக்கு இனிமேல் எட்டுவதற்கு என்று ஓர் உயரம் இருக்காது. கீழே இருப்பது அதல பாதாளம். ஓர் ஆட்டத்தில்  வெற்றி அடைந்த பிறகு அடுத்து என்ன செய்வது என்பது சிக்கலான கேள்வி. வெற்றி என்ற மலையுச்சியை அடைந்து விட்டவர் எதிர் நோக்கும் அபாயம் பற்றித் தாவோயிசம் பேசுகிறது. வெற்றியின் போதை நமது கூர்மதியை மழுங்கச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை Read More »

×