மொழி

ஆங்கிலம் – தமிழ்: ஒலிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள்

கேள்வி: ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது இலங்கையில் ஒரு வகையாகவும் தமிழகத்தில் வேறொரு முறையிலும் எழுதுகிறார்களே! எடுத்துக்காட்டாக: Doctor என்பதை இலங்கையில் டொக்டர் என்று எழுதுகிறார்கள். தமிழகத்தில் டாக்டர் என்று எழுதுகிறார்கள். Do எப்படி ‘டா’ ஆக முடியும்? டொக்டர் என்று எழுதுவது தானே சரி? விடை: நாம் கற்ற ஆங்கில ஒலிப்பை வைத்து, நாம் ஒலிபெயர்க்கும் முறையே சரியானது என்று நம்புகிறோம். ஆனால் மேலை நாட்டவர் பேசும் ஆங்கிலத்தைத் தமிழில் அப்படியே ஒலிபெயர்க்க முடியாது என்பதே […]

ஆங்கிலம் – தமிழ்: ஒலிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் Read More »

பனிநிலங்களில் தமிழ் வயல் உழுதல்: மேலை நாடுகளில் தமிழ்க்கல்வி

இங்கே இங்கிலாந்திலே இணையவழியில் என்னிடம் தமிழ் படிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயார் நேற்று வகுப்பு முடிந்த பின் அனுப்பி வைத்த புலனச் செய்தி படத்திலே உள்ளது. பிள்ளைகள் மட்டுமல்ல; அவ்வம்மையாரும் இங்கே பிறந்து வளர்ந்தவர் தான். தமிழரென்றபோதும் தமிழ் பேச வராது. “மற்றுமோர் அருமையான பாடம். நன்றி. பதினெட்டு வயதில் இருந்து தமிழ் பேச முயன்று வருகிறேன்.. … முதன்முறையாக நம்பிக்கை வந்திருக்கிறது” என்பது ஆங்கிலத்தில் அவர் அனுப்பி வைத்த செய்தியின் சாரம். பாடங்கள் நடக்கும்போது கூட

பனிநிலங்களில் தமிழ் வயல் உழுதல்: மேலை நாடுகளில் தமிழ்க்கல்வி Read More »

ஊக்கம்: புதுச்சொல் புனைதல் குறித்த சில சிந்தனைகள்

Motivation என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் எது? ஊக்கம்! செயலூக்கம், சிந்தையூக்கம் என்று புதிய முன்னடைகளிட்டு மொழிபெயர்க்கலாம் என்று முனைவர் குமாரவேல் கணேசன் என்பாரது முக நூல் பக்க உரையாடலில் இன்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. நான் இக்கருத்தில் இருந்து மாறுபடுகிறேன். மேற்சொன்ன உரையாடலில் பகிர்ந்தவற்றைக் கீழே தொகுத்திருக்கிறேன்: முனைவர் குமாரவேல் கணேசன்:Motivational speech- செயலூக்க உரை (எனக்கு இன்றுதான் இந்தச் சொல் கிடைத்தது, நன்றி) — மதுரன் தமிழவேள்:ஊக்கம் என்பதே செயலை நோக்கியதுதான்… செயல் என்ற முன்னொட்டு இன்றியே

ஊக்கம்: புதுச்சொல் புனைதல் குறித்த சில சிந்தனைகள் Read More »

அருஞ்சொல்: திணைக்களம்

இலாகா/துறை/பிரிவு ஆகிய சொற்களுக்கு இணையாக இலங்கையில் ‘திணைக்களம்’ என்ற தொடர் பயன்பாட்டில் உள்ளது. இவ் அருஞ்சொல் எவ்விதம் தோன்றியது என்று பன்னாள் சிந்தித்ததுண்டு. இன்று திருக்குறள் ‘இறைமாட்சி’ அதிகாரத்தின் (பொருட்பால் – அரசியல்) குறட்பாக்களுக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய உரையைப் படித்துக்கொண்டிருக்கும்போது ‘அரசியல் திணைக்களங்கள்’ என்று அதே பொருளில் அவர் எடுத்தாண்டிருப்பதைக் கண்டேன்! இராசேந்திர சோழனின் செப்பேடுகளிலும் உள்ளமை தேடிப்பார்த்தபோது தெரிந்தது: ‘புரவுவரித் திணைக்களத்து வரிப்பொத்தக நாயகன்’

அருஞ்சொல்: திணைக்களம் Read More »

×