பாவலர் மதுரன் தமிழவேளின் யாப்பிலக்கண வகுப்புகள் – இதுவரை கற்றோர் என்ன சொல்கிறார்கள்?

அருமையான கற்பித்தல்

விமலா வாசன்

சிவநெறிப் பேச்சாளர், அருப்புக்கோட்டை தமிழ்நாடு 

*

எழுத்து, அசை, சீர், தளை எல்லாம் தெரிந்து கொண்டேன். எளிமையான முறையில் அறியும் படி கற்பிக்கிறார். அருமையாக உள்ளது.

ஊக்கம் பிறக்கிறது

தென்றல் கோவிந்தராசன்

மருத்துவர், சென்னை, தமிழ்நாடு

*

நல்ல வளமையான கருத்துக்களின் வழி எடுத்துக்காட்டுக்களோடு வழங்கப்படும் பாவிலக்கணப் பயிற்சி விளங்கச் செய்கிறது. சிறப்பான பாட விளக்கங்கள். நல்ல தமிழ்க் கவிதைகள் படைக்க ஊக்கம் பிறக்கிறது! 

அடைந்த பயன்கள் பல

பாலா மாணிக்கம்

கணித முதுகலைப் பட்டதாரி, தகவல் தொழினுட்ப முகாமையாளர், Avon, Indiana, USA

*

இந்தக் கற்கை நெறி மூலம் நான் அடைந்த பயன்கள் பல. 

செய்யுள்கள்/பாக்கள் இயற்றுவதற்கான விதிமுறைகளோடு, எண்ணத்தை ஒருமைப் படுத்திச் சரியான வார்த்தைகளைக் கோத்துப் பாக்கள் புனையவும் கற்றேன். 

ஆசிரியர் கற்பித்த விதம் சிறப்பு. 

ஒலி பற்றிய சிந்தனையில் தொடங்கி, யாப்பிலக்கண விதிகளை முறையாக அறிமுகப் படுத்திப் பயிற்சிகளின் மூலம் தேர்ச்சி பெற வைத்தார். 

வகுப்பின் போதும், வாட்ஸ்அப் வழியாகவும் எண்ணற்ற வினாக்களுக்குத் தெளிவு தந்தார்.

இரண்டடிப் பாக்கள் இயற்றுவது கூட ஆரம்பத்தில் மலையளவு கடினமாகத் தெரிந்தாலும், அவரது ஊக்குவிப்பும் வழிகாட்டலும் தன்னம்பிக்கையை வளர்த்தன. 

இன்னும் நிறையத் தமிழ் செய்யுட்களைப் படிக்கவும், நிறைய வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளவும் ஆர்வத்தைத் தூண்டுகிறார். மிக அடிப்படையான கேள்விகளையும் தயக்கமின்றிக் கேட்டு உரையாட முடிகிறது. மிகவும் சிறப்பான வகுப்புகள். நன்றி.  

மிக நேர்த்தியான முறையில் கற்பிக்கும் திறன்பெற்ற ஆசிரியர்

முனைவர் மா.வசந்தகுமாரி

தமிழியல் ஆய்வாளர், தாரமங்கலம், தமிழ்நாடு 

*

செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், அடி, தளை, தொடை  முதலியன குறித்த விதிமுறைகளை விரிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் வகுப்புகள் அமைந்திருந்தன.  

இக்கற்கை நெறியின் ஆகச் சிறந்த விடயமாக ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் தரப்படும் பயிற்சிகளைக் கூறலாம். இப்பயிற்சிகளே மென்மேலும் யாப்பியல் விதிமுறைகளை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வழிவகுத்தன..  

மிக நேர்த்தியான முறையில் கற்பிக்கும் திறன்பெற்ற ஆசிரியரிடம் கல்விக் கற்ற பயனைப் பெறமுடிந்தது. சிறந்த பயிற்சி முறைகள், வகுப்பில் ஏற்படும் ஐயங்களைச் சரியான முறையில் களைதல் போன்றவை ஆசிரியரிடம் யாம் பெற்ற பயன்.

தமிழின் செழுமையை உணர்வதற்கான ஆரம்பம்

சேயோன் கவின்

தகவல் தொழினுட்பப் பொறியியலாளர், தஞ்சாவூர், தமிழ்நாடு

*

தமிழின் செழுமையை உணர்வதற்கான ஒரு ஆரம்பமாக இந்தக் கற்கை நெறி அமைந்தது. மரபுக்கவிதைக்குரிய கட்டமைப்பில் எவ்வளவு நுட்பங்கள் உள்ளன – இவற்றைப் பயன்படுத்தி நம் தமிழ்க் கவிகள் எவ்வளவு சிறப்பான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள் – என்பதை உணரும் விதமாக ஆசிரியர் நமக்குப் போதிக்கிறார். 

ஆசிரியரின் அர்ப்பணிப்பும், அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு அவர் காட்டும் முனைப்பும் சிறப்பு. 

நிகரில்லாச் சிறப்பு

கு. நித்திலன்

அரசாங்க மேற்பார்வையாளர், வவுனியா, இலங்கை

*

இப்போது செய்யுள்கள் எழுத முடிகிறது என்னால். வைரமுத்துவையும் பாரதியையும் மட்டுமே இரசித்த எனக்குக் கம்பனையும் இரசிக்க முடிகிறது.  

யாப்பிலக்கண நுட்பங்களை உங்களைப் போன்று இவ்வளவு எளிமையாக வேறு ஒருவரால் விளங்கப்படுத்த முடியுமா என்பது ஐயமே ஐயா!

கற்பனைக் கதைகளும் இலக்கியச் சான்றுகளும் சுவாரசியம்!

. அம்பிகா

தமிழ் ஆசிரியர், சென்னை, தமிழ்நாடு

*

முகிழ் நிலை வகுப்பில் யாப்பு இலக்கணத்தின் அடிப்படை முதல் கற்பிக்கப் பட்டது. ஆசிரியரின் பொறுமையும் கற்பிக்கும் விதமும் கற்பவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. கற்பனைக் கதைகளும் இலக்கியச் சான்றுகளும் கூறி வகுப்பை சுவாரசியமாகக் கொண்டு சென்ற பாங்கு மனமார்ந்த பாராட்டுக்குரியது. 

ஒரு மாணவியாக மதுரன் தமிழவேள் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ஐயா. 

பயனுள்ள வகுப்பு

தேவி பாலா

வழக்கறிஞர் & ஆவண எழுத்தர், விருது நகர், தமிழ்நாடு

*

நேரடிக் கற்கை பயனுள்ளதாக உள்ளது. பயிற்சியும், பாட விளக்கங்களும் உதாரணங்களுடன் தெளிவாக அறியத் தரப்படுகிறது. இந்த வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

கட்டுக்குள் இருந்தபடி கவிதை புனையக் கற்கிறேன்

பூங்கா ஞானம்

தேசிய சுகாதார சேவைப் பணியாளர், London, Great Britain

*

கவிதை எழுதுகிறேன் என ஏதோ கிறுக்கிக்கொண்டு இருந்த என்னை யாப்பிலக்கண அறிவூட்டலினூடாக ஒரு கட்டுக்குள் எழுதுவதற்குப் பயிற்றுவித்திருக்கிறார் ஆசிரியர். இலகுவாக விளங்கக்கூடிய  வகையில் உதாரணங்களை எடுத்துக்காட்டியும், சந்தேகங்கள் இருப்பின் தெளிவுபடுத்தியும் சிறப்பாகக் கற்றுக்கொடுக்கிறார். இந்தக் கற்கை நெறியினால் நான் மிகுந்த பயனடைந்தேன்  

தேடல் அதிகரித்துள்ளது

கோணேஸ்வரி திசரூபன்

இளங்கலைப் பட்டதாரி (யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்), Bradford, Canada

*

வணக்கம்! 

உங்களிடம் கற்றதன்  பயனாக எனது தேடல் இன்னும் அதிகரித்துள்ளது.  நமது  மொழியில் எழுதப்பட்ட பாக்கள் எந்த எந்த வகை என்று அறிந்துகொண்டேன். நீங்கள் கடல் போல் இருக்கிறீர்கள். அதில் ஒரு துளியாகத்தான் என் அறிவு இருந்தது. இப்போதுதான் வாசிக்கத் தொடங்கி உள்ளேன். என்னையும் உங்கள் வகுப்பில் இணைத்தமைக்கு மிக்க நன்றி பாவலரே!

முயன்றால் முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது

லக்ஷ்மணன் குலசிங்கம்

 St.paul, Alberta, Canada

*

பாட நெறி நல்லமுறையில் இருந்தது. புதிய உதாரணங்கள்…நடைமுறை சார்ந்த விளங்கப்படுத்தல் பயனுள்ளதாய் இருந்தது. பயிற்சிகள் ஊக்கியாய் இருந்தன. முயன்றால் செய்யுள் எழுத முடியும் என்ற நம்பிக்கையை மனசுக்கு தந்தது. 

வித்தியாசமான, எளிமையான கற்பித்தல் முறை

சுரேந்தர், 

கல்லூரி மாணவர், கடலூர், தமிழ்நாடு

*

இலக்கணக் கவிதைகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது எனக்கு. இந்த வகுப்புகளின் பயனாக இப்போது அத்தகைய கவிதைகளை ஆராய்ந்து பார்க்கவும் முடிகிறது.  “எழுத்து என்றால் என்ன” என்பது முதலான அடிப்படைகளில் ஆரம்பித்து விளக்கங்கள் தருவது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது .  

அதுமட்டுமின்றி, ஐயாவின் கற்பிக்கும் விதம் வித்தியாசமாகவும் எளிமையாகவும் இருக்கும், எந்த கேள்விகளுக்கும் பொறுமையாக விளக்கம் சொல்பவர்.  

ஆசிரியர் அல்லர், நல்ல நண்பர்

இல. தாமோதரன்

இயந்திரவியல் பொறியாளர், Dubai, UAE

*

திசையற்று விசை மட்டும் கொண்டு ஓடியவன் இன்று எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று ஒரு தெளிவு பெறுகிறேன். ஆசிரியர் கற்பிப்பதை பற்றிச் சொல்ல இயலாது, ஏனென்றால் அவர் ஆசிரியர் அல்லர். நல்ல நண்பராகச் சொல்லித் தருகிறார். கடைசி நிமிடம் பரீட்சைக்கு முன் சொல்லித் தரப்படும் அரும் பாடம் போல விளக்கங்கள் மிகத் தெளிவாகப் பதிகின்றன. 

×