மீ நிலைத் தமிழ்

பாவலர் மதுரன் தமிழவேளுடனான ஓராண்டு காலக் கற்கை

பாடத்திட்டம்
 
எழுத்திலக்கண அடிப்படைகள்
5 மணி நேரம்
சொல்லிலக்கண அடிப்படைகள்
40 மணி நேரம்
யாப்பிலக்கணம் (மரபுக் கவிதை இலக்கணம்)
உறுப்பியல், செய்யுளியல்
45 மணி நேரம்
திருக்குறள் (133 அதிகாரங்களும்)
70 மணி நேரம்
ஒலியும் உணர்வும் அக ஒருமைப்பாடும்
திருப்புகழ்ச் சந்தம்
15 மணி நேரம்
மாணிக்கவாசகர்
10 மணி நேரம்
கம்பன் கவிதை
15 மணி நேரம்
இருபதாம் நூற்றாண்டின் யாப்புக் கவிதை
பாரதி, பாரதிதாசன், முடியரசன்,
தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர்,
கண்ணதாசன், து. உருத்திரமூர்த்தி, நீலாவணன்
15 மணி நேரம்
யாப்பை மீறிய கவிதை / புதுக்கவிதை
15 மணி நேரம்
திரையிசைப் பாடல்கள்
10 மணி நேரம்

உங்கள் ஐயங்களும் பாவலர் பதில்களும்

மொழியே நமது உணர்வாகிறது; அடையாளமாகிறது. நுண்மையான மொழியுணர்வும் அறிவும் அகச்செழுமைக்கும் சிந்தனை ஆழத்துக்கும் வித்திடுகின்றன. 

தமிழ் மந்திரத் தன்மை வாய்ந்த மொழி.

மொழி-ஒலி வழி அகத்தைச் செம்மை செய்யலாம் என்றறிந்த எனது வாழ்வனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் பயன்பெறச் செய்வதுமே இக்கற்கை நெறியின் நோக்கம்

பாவலர் மதுரன் தமிழவேள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கற்கை நெறி:

  • தமிழ் இலக்கண அடிப்படைகளை அறிந்து கொள்ள விரும்புவோர்க்கானது.
  • மொழியின் ஒலி நுட்பங்களை அறிந்துகொள்ள விரும்புவோர்க்கானது.
  • கவிதை இலக்கணம் பயின்று பாப்புனைய ஆர்வம் கொண்டோர்க்கானது.

தமிழில் சரளமாக எழுதவும் வாசிக்கவும் இயலும் திறன் பெற்றிருத்தல், வாசிப்புப் பழக்கம், தமிழ் கற்கும் ஆர்வம் முதலானவை மாணவரிடத்தில் எதிர்பார்க்கப்படும் பண்புகள்.

அகவை ஒரு தடையில்லை. எவ்வயதினரும் இணைந்து கொள்ளலாம்.

இது 12 மாத காலக் கற்கை நெறி. 

ஒரு மாதத்தில் 12 வகுப்புகள் நடைபெறும். மொத்தமாக 15-18 மணி நேரங்களை உள்ளடக்கியிருக்கும்.

இதுபோக மாணவர் ஒருவர் அன்றாடம் மொழிப்பயிற்சிக்காக 20 மணித்துளிகள் (நிமிடங்கள்) ஒதுக்க வேண்டியிருக்கும்.

வகுப்புகள் மாலை வேளை (இந்திய நேரம்) 7.30 மணிக்குப் பிறகு கூகுள் மீட் வழி நடைபெறும். மாணவர் தொகை, அவர் வாழும் இடம் என்பவற்றுக்கு ஏற்ப வேறு நேரங்களும் ஒழுங்கு செய்யப்படலாம். 

முதல் வகுப்பு ஆகஸ்ட் 10, 2022 அன்று நடைபெறுகிறது. விண்ணப்ப முடிவு நாள்: ஆகஸ்ட் 6, 2022

ஆம். மாதாந்தக் கட்டணம் உண்டு. மாணவர் வாழும் இடம், வாழ்க்கைச்சூழல் என்பவற்றுக்கு ஏற்ப கோரப்படும் தொகை மாறுபடும். நீங்கள் பங்களிக்கும் தொகை ஆசிரியரின் நேரத்தை ஈடு செய்வதற்கும் மொழியகத்தின் பணிகளை முன்னெடுப்பதற்கும் பயன்படுத்தப்படும்.  

நீங்கள் வகுப்பில் பங்கேற்பது இன்றியமையாதது. ஒரு மாதத்தில் 70%க்கும் அதிகமாக வரவை உறுதிசெய்து, தரப்பட்ட பயிற்சிகளைச் செவ்வனே செய்வோருக்கு விடுபட்ட வகுப்புகளைக் காணொளிப் பதிவாகப் பார்க்கக்கூடிய வசதி செய்துதரப்படும்

இல்லை. குறித்தவொரு தொகை மாணவர்களையே இம்முறை ஏற்றுக்கொள்ள இயலும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். தமிழறிவும் மொழியுணர்வும் கொண்ட குழாமொன்று உருவாக வேண்டும் என்பதே இக்கற்கை நெறியின் நோக்கம். விண்ணப்பத்தில் இதற்கான தகைமையைத் தெளிவாக வெளிப்படுத்துபவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும். 

ஆம், தமிழ் ஆழமும் அகலமும் அறிய முடியாத நெடுங்கடல் போன்ற முதுமொழி. இம்மொழியின் நுண்மைகளைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான இன்றியமையாத பயிற்சிகள் எவை என்பதைத் தன்னனுபவத்தின் அடிப்படையில் பகுத்தாய்ந்து இப்பாடத் திட்டத்தை வடிவமைத்துள்ளோம். 

நான் ஆழ்ந்து கற்றுவரும் நூல்கள், ஆர்வம் கொண்டிருக்கும் துறைகள் முதலானவை இக்கற்கை நெறியின் அடித்தளமாக அமைந்துள்ளன. வருங்காலங்களில் வேறு பகுதிகள் உள்ளடக்கப்படலாம்.

×