கம்பன்

காட்சிக் கலைஞன் கம்பன்: வீரகேசரியில் வெளியாகும் தொடர் (5ஆம் வாரம்)

இது காட்சி ஊடகங்களின் காலம். இணையம் கோலோச்சும் இன்றைய காலத்தில் அசையும் படிமங்களே நமது நினைவை நிறைக்கின்றன. அறிவைச் சமைக்கின்றன. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை பிறந்த தலைமுறையை Gen Z என்று அழைக்கிறார்கள். இந்த Gen Z தலைமுறையைச் சேர்ந்தவர்களில் 91% ஆனவர்கள், (அச்சுப் பனுவல்களைக் காட்டிலும்) யூட்யூப் முதலான தளங்கள் வழியாகக் காணொளிகளைப் பார்த்துக் கற்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது கடந்த ஆண்டு வெளியான ஹப்ஸ்பாட் (Hubspot) வலைத்தளத்தின் […]

காட்சிக் கலைஞன் கம்பன்: வீரகேசரியில் வெளியாகும் தொடர் (5ஆம் வாரம்) Read More »

கம்பரும் கார்ல் மார்க்சும் களவு போன ஒரு காரும்

(வீரகேசரி நாளிதழில் வாரந்தோறும் வெளியாகும் தொடர்) சில மாதங்கள் முன்பு எமது கார் (Car) களவு போனது. நள்ளிரவு நேரம் வந்த கள்வர்கள் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின் காலதர்க் கண்ணாடியை உடைத்து, உள் நுழைந்து, அதை ஓட்டிச் சென்றிருக்கிறார்கள். காருக்குத் தமிழிலே ‘மகிழுந்து’ என்று பெயர். ‘வினைத்தொகை’ என்ற அருமையான இலக்கணக் கருத்துருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கலைச்சொல் அது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணர்த்த்த வல்லது வினைத்தொகை (மகிழ்ந்த, மகிழ்கின்ற,

கம்பரும் கார்ல் மார்க்சும் களவு போன ஒரு காரும் Read More »

கலீல் ஜிப்ரான், கணியன் பூங்குன்றன், கம்பன்

“கடலுடன் கலக்கப்போகும் நொடியில் ஓர் ஆறு அச்சத்தால் கலங்குவதாகச் சொல்லப்படுகிறது. மலையுச்சிகளில் தோன்றி, வளைந்து நீண்ட பாதைகளின் வழி காடுகளையும் ஊர்களையும் கடந்து வந்ததை அது திரும்பிப் பார்க்கிறது. இத்துணை பெரிய ஆழியுடன் கலந்து விடுவது என்பது, என்றைக்கும் இல்லாமல் போவதே அன்றி வேறு என்ன என்று தன்முன்னே பரந்திருக்கும் கடலைப் பார்க்கும்போது அதற்குத் தோன்றுகிறது. ஆனால் அங்கே வேறு வழி கிடையாது. ஆற்றினால் திரும்பிப்போக முடியாது. எவராலும் திரும்பிப்போக முடியாது . திரும்பிப்போவது என்பது இருப்பிலே

கலீல் ஜிப்ரான், கணியன் பூங்குன்றன், கம்பன் Read More »

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்: தமிழின் ஐவகை இலக்கணம் உணர்த்தும் சூட்சுமம்

— – செழும்பொருளும் பெருஞ்சுவையும் நிரம்பிய இராம காதையை – ‘தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதையை’த் தந்த கம்பன், தான் பாடிப் பரவும் பரம்பொருளான திருமாலை, ‘நடையில் நின்று உயர் நாயகன்’ என்று பாயிரப் பாடலில் போற்றுகிறான். இங்கே நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள். ஆங்கிலத்திலே அதற்கு அணுக்கமான சொல்: discipline என்பதாகும். மனிதரை, மற்றை உயிர்களை, எண்ணில்லா உலகங்களை – இந்தப் பேரண்டத்தைப் – படைத்தான் என்பதற்காக இறைவனை வணங்குகிறோம். தொழுது போற்றுகிறோம்.

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்: தமிழின் ஐவகை இலக்கணம் உணர்த்தும் சூட்சுமம் Read More »

வீரகேசரி வாரவெளியீட்டில் புதிய தொடர்: காலம் தோறும் வாழும் கம்பன்

வீரகேசரி – இலங்கையின் பழம்பெருஞ் செய்தி நாளேடு. மகாகவி பாரதியார் தனது உரைநடை வாரிசு என்று பாராட்டிய வ.ரா முதலானோரை ஆரம்பகால ஆசிரியன்மாரில் ஒருவராகக் கொண்ட சிறப்பை உடையது. வீரகேசரி வாரவெளியீட்டில் ‘காலம் தோறும் வாழும் கம்பன்‘ என்ற தலைப்பில் ஒரு புதிய தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன். கம்பன் திருவுளப்படி தொடர் நடைபயிலும். இவ்வாரப் பத்தி – மதுரன் தமிழவேள் இலண்டனில் கம்பனைக் கண்ட கதை: — – ‘கம்பனடி காப்பாம்’ என்று எழுதிவிட்டு மனம் சிலிர்த்தபடி

வீரகேசரி வாரவெளியீட்டில் புதிய தொடர்: காலம் தோறும் வாழும் கம்பன் Read More »

×