அகவற்பா

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள்

(உரையாடற் பின்னணி: ஆங்கிலப் பெருங்கவிஞன் ஷெல்லியின் To a Skylark என்ற கவிதையை அண்மையில் இமயவரம்பன் (இரா. ஆனந்த்) அழகுறத் தமிழ்ப்படுத்தியிருந்தார். ஆற்றொழுக்குப் பிசகாத அகவற்பாவாக (அகவற்பா = ஆசிரியப்பா) அத்தமிழாக்கம் அமைந்திருந்தது.  இப்பாடலில் வெண்டளை மிகையாக வருவதன் பொருத்தப்பாடு குறித்து முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் புலனக் குழுமம் ஒன்றில் உரையாடலைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து மரபின் மைந்தன் திரு முத்தையா, முனைவர் நா கணேசன் ஆகியோரும் வெவ்வேறு கோணங்களை முன்வைத்தனர். எனது தரப்பாக முன்வைத்த […]

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள் Read More »

ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்)

பாரதியின் மனம் கவர்ந்த மகாகவிஞன் ஷெல்லி. ஆங்கிலத்தில் ஷெல்லி இயற்றிய ‘To a Skylark’ என்னும் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு டாக்டர். கணேசன் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க நான் எழுத முயன்ற மொழிபெயர்ப்பை இங்கே அளிக்க விரும்புகிறேன். இமயவரம்பன் (இரா. ஆனந்த்) English Original : https://www.poetryfoundation.org/poems/45146/to-a-skylark ஒரு வானம்பாடிக்கு – தமிழ் மொழிபெயர்ப்பு (நிலைமண்டில ஆசிரியப்பா) 1. கட்டிலாக் களிப்பின் உயிர்ப்பே வாழி! பறவையென் றுன்னைப் பகர்தற் கரியாய்!

ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்) Read More »

×