மொழி பற்றிய சில சிந்தனைகள்
ஜூன் 13, 2021 முகநூலில் எழுதியது: தமிழனாக இருப்பதொன்றே பெருமை என்று நான் நினைப்பதில்லை. தமிழ் பற்றிய எனது பெருமிதத்துக்கு அந்த மொழிவழி சிந்திக்கும்தோறும் அடைகிற அக அனுபவத்தின் செழுமை காரணமாகிறது. அதனது விரிவும் ஆழமும் ஆழிபோல் மிகுந்திருக்க, என்னால் அறிந்து கொள்ள முடிவது கடுகளவு என்பதை உணரும்போது உருவாகும் வியப்பால் பெருகுவது அப் பெருமிதமும் உடன்வரும் உவகையும். அதன் ஆழத்தையும் விரிவையும் உணரும் பொருட்டு ஒரு துரும்பைத்தானும் கிள்ளிப்போடாமல் தமிழன் தமிழன் என்று மார்தட்டுவதால் நன்மை …