குறும்பதிவு

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை

அமிதசாகரர் 11ம் நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்பெறும் யாப்பிலக்கண நூல் ‘யாப்பருங்கலக்காரிகை’. தமிழ் யாப்பின் தலையாய நூல்களுள் ஒன்று இது. இந்த நூல் அடங்கிய சிதைவுண்ட ஏட்டுச்சுவடியின் (1800-1850 காலப்பகுதிக்குரியது) எண்ணிமப்படியை பிரித்தானிய நூலக வலைத்தளத்தில் இன்று கண்டேன். யாழ்ப்பாணம், கோண்டாவிலில் இருந்து மீட்கப்பட்ட ஏட்டுச்சுவடியை நூலக நிறுவனம் (noolaham.org) எண்ணிமப்படுத்தியிருக்கிறது (Digitization). அழியும் ஆபத்துள்ள பனுவல்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய நூலகத்தின் பெருந்திட்டத்தின் கீழ் 1500க்கும் மேற்பட்ட தமிழ் ஏட்டுச்சுவடிகள் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இசுபானியம் (Spanish), ஆங்கிலம் (English), […]

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை Read More »

அசை யாப்பிலக்கணம்

இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம்

அஞ்சலி (13), சித்தார்த் (9) இருவரும் போன ஆண்டு கோவையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து சென்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். ஆங்கில வழியில் கல்வி கற்பவர்கள். ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பது தமிழார்வம் மிக்க அவர்தம் தந்தையாரது பெருவிருப்பு. பேரா மயில்சாமி மோகனசுந்தரம் ஐயா அவர்கள் அறிமுகப்படுத்தியதன் பேரில் குழந்தைகள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களாக இணையம் வழியாகத் தமிழ் சொல்லித் தருகிறேன். எழுத்திலக்கண அடிப்படைகளோடு சேர்த்து யாப்பிலக்கணமும் கற்பித்து வருகிறேன்.

இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம் Read More »

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம்

Gossip எனப்படும் வீண்பேச்சை அறவே தவிர்க்க வேண்டும் என்பதைப் பத்துக் குறள்களில் வலியுறுத்துகிறார் வள்ளுவர் (பயனில சொல்லாமை). இரண்டு குறட்பாக்கள்: நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பிற்சொற் பல்லா ரகத்து பொருள்: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். (மு.வ) நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம் Read More »

போரின் புதிய முகங்கள்: வே. தொல்காப்பியன்

நேற்று இத்தளத்தில் வெளியான ‘தனிமைக்கு எதிராக எழுதுதல்‘ மொழிபெயர்ப்புப் பற்றி வந்த மின்னஞ்சல் கீழே. வே. தொல்காப்பியன் அவர்கள் எழுதியது. கூடவே தனது தளத்தில் எழுதிய பதிவொன்றையும் பகிர்ந்திருந்தார். உலக அமைதி குறித்து அக்கறை கொண்டுள்ள எல்லோரும் சிந்தையில் பதிக்க வேண்டிய முக்கியமான கருத்துகள் சிலவற்றை அதில் முன்வைத்திருந்தார். அப்பதிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன். முழுமையான பதிவைப் படிப்பதற்கான இணைப்பும் முடிவில் தரப்பட்டுள்ளது. அன்புள்ள ஐயா, வணக்கம். மொழிபெயர்ப்பு கடினமான பணி. முற்போக்கு, இடதுசாரி சிந்தனையாளர்களின்

போரின் புதிய முகங்கள்: வே. தொல்காப்பியன் Read More »

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும்

பொறுப்புத் துறப்பு: ஆங்கில வார்த்தைகளை அள்ளித் தூவித் திரைபாடல்கள் எழுதுவதை வரவேற்பவன் அல்லன் நான். என்றாலும் அப்படியான பாடல்களே அளவு கணக்கற்று வெளியாகின்றன – அவைதாம் இளையோரை ஈர்க்கின்றன என்ற வாதத்தோடு. சரி, அப்படி ஈர்க்கப்படுபவர்களிடத்தில் அஃதை வைத்தே தமிழ் பேசலாம் என்ற நினைப்பில் முகநூலில் எழுதிய பதிவு இது: சிலம்பரசன் ‘புல்லட்டு சாங் (bullet song)’ பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பாடியிருக்கிறார். அது பற்றி வேடிக்கையான ஓர் அறிவிப்புக் காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள்

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும் Read More »

மொழிக்கல்வி: இன்றைய தேவை

வைதீக மேலாதிக்க மரபு போலப் புலவர்/பண்டிதர் மேலாதிக்க மரபு என்ற ஒன்றும் நம்மிடையே உண்டு. ஞானத்துக்கான முற்றதிகாரம் கொண்டவன் நானே – கடவுளை அடைவதற்கும் கருவறைக்குள் நுழைவதற்குமான உரித்து எனக்கு மட்டுமே உளது என்று எப்படி வைதீக மரபின் பூசாரி வாயிலை அடைத்துக்கொண்டு நிற்பாரோ, அப்படியே ‘மொழி நுணுக்கங்கள் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் உனக்கென்ன அருகதை இருக்கிறது?’ என்று கேட்டபடி தமிழ் மரபின் இலக்கணப் புலவரும் உங்களிடத்துத் தாழ்வுணர்ச்சியை உண்டு பண்ணவும் ஏளனம் செய்யவும் முனைந்து கொண்டே

மொழிக்கல்வி: இன்றைய தேவை Read More »

அருஞ்சொல்: திணைக்களம்

இலாகா/துறை/பிரிவு ஆகிய சொற்களுக்கு இணையாக இலங்கையில் ‘திணைக்களம்’ என்ற தொடர் பயன்பாட்டில் உள்ளது. இவ் அருஞ்சொல் எவ்விதம் தோன்றியது என்று பன்னாள் சிந்தித்ததுண்டு. இன்று திருக்குறள் ‘இறைமாட்சி’ அதிகாரத்தின் (பொருட்பால் – அரசியல்) குறட்பாக்களுக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய உரையைப் படித்துக்கொண்டிருக்கும்போது ‘அரசியல் திணைக்களங்கள்’ என்று அதே பொருளில் அவர் எடுத்தாண்டிருப்பதைக் கண்டேன்! இராசேந்திர சோழனின் செப்பேடுகளிலும் உள்ளமை தேடிப்பார்த்தபோது தெரிந்தது: ‘புரவுவரித் திணைக்களத்து வரிப்பொத்தக நாயகன்’

அருஞ்சொல்: திணைக்களம் Read More »

wellness, reed, relaxation-3318709.jpg

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது..

1 நிமிட வாசிப்பு இலங்கையின் தற்போதைய சூழலை முன்வைத்து: கர்மா – புத்தரின் வார்த்தையில் சொல்வதென்றால் கம்மா – என்பது நம்மில் அநேகர் நினைப்பதுபோல் ‘கெட்டது செய்தால் கெட்டது நடக்கும்’ என்பதான நேர்வழிச் சூத்திரம் அன்று. ஒவ்வொருவர் செய்யும் நற்செயலையும் தீச்செயலையும் வானத்தில் இருக்கும் ஒரு சித்திரகுப்தனார் கணக்கெடுத்து வைத்துக்கொண்டு தக்க நேரத்தில் ஆகூழையும் போகூழையும் விதிப்பதும் இல்லை. உண்மையில் நமது ஆழ்மனமே அந்தச் சித்திரகுப்தனார். தனக்குச் சாதகமான சூழலில் கொடுங்குற்றமொன்றை முழுச்சுதந்திரத்தோடு (with total immunity)

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது.. Read More »

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது? எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன். ‘அலை பாயுதே’ படத்தில் வரும் ‘ஸ்நேகிதனே’ பாடலை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன். அதன் ஆரம்பத்தில் வரும் ‘கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கருவம் அழிந்ததடி’ என்ற வரி தமிழின் மிகப்பழம்பெரும் பா வடிவமான குறள் வெண்பாவின் இலக்கண அமைப்புக்குள் அடங்கக் கூடியதாய் இருப்பதை நேற்றுத்தான் எதேச்சையாகக் கவனித்தேன்.

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா Read More »

பாரதியின் ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின் அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக்-களித் தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ! அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை ஆசன விளிம்பில் உங்களைக் கொண்டு வந்து வைக்கின்ற ஓர் investigative crime thriller; அடுக்குகள் நிறைந்த ஆழமான கவிதை; ஞானத்தை நோக்கிய மானச யோகம் – இவை மூன்றிலும் பொதுவாகக் கிடைக்கக் கூடிய அனுபவம் என்ன? இதோ – அறுதியான முடிவை, எல்லாவற்றுக்கும்

பாரதியின் ஊழிக்கூத்து Read More »

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும்

மணிரத்னம் ஒரு epic filmmaker. எந்த அர்த்தத்தில் என்றால் அவர் சொல்ல விழைகிற கதைகள் காவியக் கருப்பொருள் கொண்டவை. தளபதி, ராவணா நேரடியாக இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டு மறு ஆக்கம் செய்யப்பட்ட கதைகள். அக்னி நட்சத்திரத்தின் கார்த்திக், மௌன ராகத்தின் ரேவதி ஆகியோரின் மனக்கொந்தளிப்புகளும் கூட எனக்கு முறையே கர்ணன்/விதுரனையும் அம்பையையும் நினைவு படுத்துபவை. காவியச்சுவை கொண்ட கதைகளை நாடுகின்ற மனப்பாங்குதான் மணிரத்னத்துக்கும் ஜெயமோகனுக்கும் ஒத்திசைவைத் தந்திருக்கக் கூடும் என்றும் நான் எண்ணிக்கொள்வதுண்டு. செக்கச் சிவந்த வானத்தைத்

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும் Read More »

போட்டி மனப்பான்மை அவசியமா?

1 நிமிட வாசிப்பு – போட்டி போடுவது என்பது முதிராத நிலையில் இருந்த முதலாளித்துவம் தன்னை முன் தள்ளுவதற்காக மனிதர்களிடையே வளர்த்து விட்ட மனப்பண்பு. ஓயாத மனித உழைப்பு அசுரத்தனமாகப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாயை. நுண்மனமும் கூர் அறிவும் கொண்டவர்களுக்கு இன்றைய நவீன உலகில் போட்டி மனப்பான்மை உபயோகம் தராத ஒன்று. இன்று அவசியமானது கூட்டு நன்மைக்காக ஒவ்வொருவரும் தத்தமது தனி ஆற்றலை – தனித்துவமான ஆற்றலை – ஒருங்கிணைத்துச் செயல்படுவது. விளைவாகக் கிடைக்கும்

போட்டி மனப்பான்மை அவசியமா? Read More »

மொழி பற்றிய சில சிந்தனைகள்

ஜூன் 13, 2021 முகநூலில் எழுதியது: தமிழனாக இருப்பதொன்றே பெருமை என்று நான் நினைப்பதில்லை. தமிழ் பற்றிய எனது பெருமிதத்துக்கு அந்த மொழிவழி சிந்திக்கும்தோறும் அடைகிற அக அனுபவத்தின் செழுமை காரணமாகிறது. அதனது விரிவும் ஆழமும் ஆழிபோல் மிகுந்திருக்க, என்னால் அறிந்து கொள்ள முடிவது கடுகளவு என்பதை உணரும்போது உருவாகும் வியப்பால் பெருகுவது அப் பெருமிதமும் உடன்வரும் உவகையும். அதன் ஆழத்தையும் விரிவையும் உணரும் பொருட்டு ஒரு துரும்பைத்தானும் கிள்ளிப்போடாமல் தமிழன் தமிழன் என்று மார்தட்டுவதால் நன்மை

மொழி பற்றிய சில சிந்தனைகள் Read More »

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே?

எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆளரவமற்ற ஓர் இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பிட்சு விரும்பினார். மடாலயத்திலிருந்து புறப்பட்ட அவர் தூரத்தில் இருந்த குளத்தடிக்குச் சென்று கரையிலிருந்த படகில் ஏறினார். தானே துடுப்பு வலித்தவாறு குளத்தின் மையப்பகுதிக்குச் சென்றார். தனிமையில் கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். சுற்றி வர எவருமில்லை. அடுத்த சில மணி நேரம் நிசப்தம் மட்டுமே சூழலை நிறைத்தது. ஆழ்ந்த தியானம். மெய் மறந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரம் திடீரென்று

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே? Read More »

×