கவிதை

பாரதி மீது இரு வெண்பாக்கள்

பாட்டுத் திறத்தாலே பாழாம் அடிமைகைப்பூட்டுத் திறந்த புலவன்,ஒளி – காட்டிஎனையாண்ட நாதன் இனியார் அகத்தைத்தனையாள ஏற்கும் தமிழ் காணிநிலம் கேட்ட கவிஞனுக்குப் பூவனைத்தும்பேணி ஒளிசெய்யும் பேறளித்தாய் – வாணீ!நினைத்தலை சாய்த்துப் பணிகின்றேன் நின்தாள்நினைத்தலைச் செய்கஎன் நெஞ்சு (2004) பாரதி – எட்டயபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, ஏட்டியல் புரத்துக் கலைவாணி வாணீ – விளி என்பதால் நீண்டது.. வருக்க எதுகை வாராத ஓசைக்காகக் குறுக்கிப் படித்தாலும் குறையன்று. – மதுரன் தமிழவேள்

ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம்

ஆறாத அனல்சுட்ட காயம் – நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்?ஆறாத அனல்சுட்ட காயம் – நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்? கந்தகம் படிந்த வெந்தணல் நதியில்கரைந்ததோ எங்களின் கனவுசந்ததம் நெஞ்சில் சஞ்சலம் விஞ்சித்தளருமோ விடியலின் நினைவு? (ஆறாத…) மானுட நீதி தாழுதல் கண்டுவையகம் விழித்துயிர் பெறுமோ?ஊனிடர் பட்டும் உளம்குலை வுற்றும்உழல்பவர் விழித் துயர் அறுமோ? (ஆறாத) பேய்க்களம் ஆடித் தீர்த்தவர் செய்த‌பிழைகளைப் பொறுக்குமோ உலகம்?ஆய்க்கினை நீள இருள்வெளி சூழ‌அரண்டிடும் நிலையென்று விலகும்? (ஆறாத) எத்தனை எத்தனை நிணப்புதை …

ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம் Read More »

தமிழணங்கு 

கரிய நிறத்தவள் காண் எங்கள் அன்னை – அடர் காட்டில் உலவிக் களி நடம் புரிவாள் அரிய திறத்தவள் காண் எங்கள் அன்னை – உடல் ஆவிக்(கு) அமுதென அன்பைச் சொரிவாள் ஐந்து திணைகளிற் செழித்தவள் அன்னை – தன் ஆதி மனிதர் கனவுருக் கொண்டாள் நைந்து மடிந்திடும் மொழிகளின் நடுவில் – என்றும் நலிவி லாத பெருநிலை கண்டாள் உயிரொலி ஐந்தும் மந்திரம் ஆகும் – அவை உடலொடு சேரச் சன்னதம் தோன்றும் இயலிசை நாடகம் …

தமிழணங்கு  Read More »

×