இருப்பது இருளா? ஒளியா?

இருள்மேல் ஒளி படர்தலால்
தெரிவதோ –
ஒளி தொடாது விட்ட இடங்களில்
இருள் கவிவதால் வெளிப்பதோ –
இக்காட்சி?


இருப்பது
இருளா?
ஒளியா?

வெளியின் இடையில் பொருள் தோற்றினாளோ
காளி
இல்லை,
பொருளின் சதை பிதுக்கி வீசி வெளி சமைத்தாளோ?


இருப்பது
பொருளா?
வெளியா?

பாறை கொண்டு யானையின் சிலை வடித்தானோ?
இல்லை
யானையை மறைத்த பாறையின் துகள் களைந்தானோ?


இருப்பது
பாறையா?
யானையா?

– மதுரன் தமிழவேள்
14.02.2024

By the spread of light over darkness,
Is it revealed?
In places untouched by light
Where darkness weaves its presence, is it unveiled?
This scene?

Is it
Darkness?
Or light?

Did Kali cause the substance to emerge in between the outside?
Or
Did she make the flesh of the substance burst forth, crafting the void?
Is it
Substance?
Or the void?

Did he sculpt an elephant from stone?
Or
Did he remove the specks of the stone that hid the elephant?
Is it
The stone?
Or the elephant?

– Madhuran T
14.02.2024

2 thoughts on “இருப்பது இருளா? ஒளியா?”

  1. Gomes Barathi Ganapathi

    என்ன ஒரு வலி(மை) மிகு கவிதைகள், ஐயா! படைப்பினைப் பகிர்ந்தமைக்கு பல கோடி நன்றி.

    ‘… உயிரொலி ஐந்தும்….?’
    …..புரியவில்லை…….
    Are you talking about a, e, i, o, u? But, in the USA, they’ve ’fancied’ the vowels by adding ‘sometimes Y’
    Sincerely
    Gomes Barathi Ganapathi
    envnmn@me.com
    📲…..865.850.1913

    1. அடிப்படையில் உயிரொலி ஐந்தே: அ, இ, உ, எ, ஒ.

      அவை நீண்டொலிக்கும்போது அவற்றுக்கு இனமாய நெடில் ஐந்து தோன்றும்: ஆ, ஈ, ஊ, ஏ,ஓ

      அ+இ இயைய ஐ தோன்றும்
      அ+உ இயைய ஔ தோன்றும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×