கவிதை

ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ்

முன்னொரு பொழுதுஉலகம் கொந்தளிப்பில்லாமல்இயங்கிக் கொண்டிருந்தது ஆயிரம் கோடிக் கால்கள் கொண்டுஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ் அகிலத்தை ஆள வந்த வேளைமனம்சிலிர்த்து,மண்டியிட்டுமனிதர்கள் தம்மை ஒப்புக்கொடுத்த பொழுது வரைஉலகம் கொந்தளிப்பில்லாமல் தான்இயங்கிக் கொண்டிருந்தது (ஒப்பீட்டளவில்) தாம் அணிந்திருந்த முகமூடிகளுக்கு ஏற்பஒவ்வொருவரும் நல்லவர்களாக நடந்து கொண்டிருந்தார்கள் திருட்டு மதபோதகர்களின் சந்தைதிடீரென்று ஒரு நாளில் சரியும் வாய்ப்பில்லாமல் இருந்ததுசமூக நீதியும் சமத்துவமும் பேசும்புரட்சியாளர்களால்அந்தரங்கத்தில் சுதந்திரமாகக் கெட்டவார்த்தை பேச முடிந்திருந்ததுதிரைக்கு வெளியில்சாகசப்பிம்பம்தகர்ந்து விடாமல் காத்துக்கொள்ளநாயகர்களுக்கு இயன்றிருந்தது தற்காதல் நிரம்பிய மனிதர்களிடத்தில்ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ்தலையைச் சொறிந்து கொண்டுஅமைதிப்படை அமாவாசை போலத்தன்னடக்கத்துடன் […]

ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ் Read More »

மரணம் பற்றி

கூட்டை விடுத்ததுகாண் – உயிர்க்குருவி பறந்தது காண்பூட்டை உடைத்தெறியப் – பொன்புதையல் கிடைத்தது காண் ஊட்டி வளர்த்தவுடல் – பூதம்ஒன்றிச் சமைத்தவுடல்காட்டில் எரியுதுகாண் – இந்தக்காயம் மறைந்தது காண் சிதையில் கிடத்திவைத்த – என்றன்தேகம் தனைநினைந்தேன்கதையாய்ப்பின் கற்பனையாய் – வளர்த்தகனாக்கள் தமைவியந்தேன்! காலனைப் போலநிதம் – நண்பால்கனிந்து தொடர்வதற்கேஏலுமோ இங்கெவர்க்கும் – சோரான்என்றைக்கும் காத்திருப்பான் பொய்யைக் களைந்தொழிமின் – உயர்போதந் தெளிந்துநின்மின்நைய உருக்குங்கொல்லன் – புதுநாளில் பல சமைப்பான்! – மதுரன் தமிழவேள்

மரணம் பற்றி Read More »

நீர்மை

குகை முகட்டில் அருட்டும் நிழல், புத்தனின் பேருரு அசைகிறது இருளில் ஈர மண்ணில் ஞானப் பதியம் x கடலெனப் பெருகும் முடிவறு மனதில் உணர்வு விழிக்கிறது – உளது ஒன்றா பலவா நானா நாமா x சருகு வீழும், காலம் மாறும் நிலையாமை அறியுமா இயற்கை? வாழ்வெனும் சுழியம் மெல்ல நகும் x மழை ஓய்ந்த பின் பேரமைதி தன்னை அறியும் தவத்தில் உள்ளதோ இயற்கை? உயிரின் பிம்பம் உணர்த்தும் கண்ணாடி x பால்வெளியில் இறந்துவிட்ட உடுச்சுடரின்

நீர்மை Read More »

இருப்பது இருளா? ஒளியா?

இருள்மேல் ஒளி படர்தலால்தெரிவதோ –ஒளி தொடாது விட்ட இடங்களில்இருள் கவிவதால் வெளிப்பதோ –இக்காட்சி? இருப்பதுஇருளா?ஒளியா? வெளியின் இடையில் பொருள் தோற்றினாளோகாளிஇல்லை,பொருளின் சதை பிதுக்கி வீசி வெளி சமைத்தாளோ? இருப்பதுபொருளா?வெளியா? பாறை கொண்டு யானையின் சிலை வடித்தானோ?இல்லையானையை மறைத்த பாறையின் துகள் களைந்தானோ? இருப்பதுபாறையா?யானையா? – மதுரன் தமிழவேள்14.02.2024 By the spread of light over darkness,Is it revealed?In places untouched by lightWhere darkness weaves its presence, is it unveiled?This scene?

இருப்பது இருளா? ஒளியா? Read More »

பாரதி மீது இரு வெண்பாக்கள்

பாட்டுத் திறத்தாலே பாழாம் அடிமைகைப்பூட்டுத் திறந்த புலவன்,ஒளி – காட்டிஎனையாண்ட நாதன் இனியார் அகத்தைத்தனையாள ஏற்கும் தமிழ் காணிநிலம் கேட்ட கவிஞனுக்குப் பூவனைத்தும்பேணி ஒளிசெய்யும் பேறளித்தாய் – வாணீ!நினைத்தலை சாய்த்துப் பணிகின்றேன் நின்தாள்நினைத்தலைச் செய்கஎன் நெஞ்சு (2004) பாரதி – எட்டயபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, ஏட்டியல் புரத்துக் கலைவாணி வாணீ – விளி என்பதால் நீண்டது.. வருக்க எதுகை வாராத ஓசைக்காகக் குறுக்கிப் படித்தாலும் குறையன்று. – மதுரன் தமிழவேள்

பாரதி மீது இரு வெண்பாக்கள் Read More »

ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம்

ஆறாத அனல்சுட்ட காயம் – நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்?ஆறாத அனல்சுட்ட காயம் – நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்? கந்தகம் படிந்த வெந்தணல் நதியில்கரைந்ததோ எங்களின் கனவுசந்ததம் நெஞ்சில் சஞ்சலம் விஞ்சித்தளருமோ விடியலின் நினைவு? (ஆறாத…) மானுட நீதி தாழுதல் கண்டுவையகம் விழித்துயிர் பெறுமோ?ஊனிடர் பட்டும் உளம்குலை வுற்றும்உழல்பவர் விழித் துயர் அறுமோ? (ஆறாத) பேய்க்களம் ஆடித் தீர்த்தவர் செய்த‌பிழைகளைப் பொறுக்குமோ உலகம்?ஆய்க்கினை நீள இருள்வெளி சூழ‌அரண்டிடும் நிலையென்று விலகும்? (ஆறாத) எத்தனை எத்தனை நிணப்புதை

ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம் Read More »

தமிழணங்கு 

கரிய நிறத்தவள் காண் எங்கள் அன்னை – அடர் காட்டில் உலவிக் களி நடம் புரிவாள் அரிய திறத்தவள் காண் எங்கள் அன்னை – உடல் ஆவிக்(கு) அமுதென அன்பைச் சொரிவாள் ஐந்து திணைகளிற் செழித்தவள் அன்னை – தன் ஆதி மனிதர் கனவுருக் கொண்டாள் நைந்து மடிந்திடும் மொழிகளின் நடுவில் – என்றும் நலிவி லாத பெருநிலை கண்டாள் உயிரொலி ஐந்தும் மந்திரம் ஆகும் – அவை உடலொடு சேரச் சன்னதம் தோன்றும் இயலிசை நாடகம்

தமிழணங்கு  Read More »

×