காரைக்கால் அம்மையார்

சொல்லும் பொருளும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 18)

சொல்லுதல் என்பது சொல்லப்படுவதன் தேய்வு.  ஆயிரம் ஆண்டு காலம் ஆழ வேரூன்றிக் கிளை பரப்பி நிற்கும் ஒன்றை ‘மரம்’ என்று அழைக்கிறேன். சிலமுறை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஒலித்து முடிந்து விடுகிறது அந்தச் சொல்.  அதன் ஆயிரம் ஆண்டு கால இருப்பையும் மாட்சியையும் அக்குறுஞ்சொல்லால் தனக்குள் அடக்கிவிட முடியுமா என்ன? ஆனாலும் அப்படியான ஒரு பாவனையோடு – உரிமை கோரலோடு தான் – மரம் என்று சொல்கிறேன். மரம் என்ற சொல்லால் அதன் பேரிருப்பைக் குறிக்க முடியாது. அதற்கு […]

சொல்லும் பொருளும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 18) Read More »

காணலாம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 17)

மனித நம்பிக்கைகள் புலன்வழித் துய்ப்பில் இருந்து தோற்றம் பெறுகின்றன. கீழைத்திசையில் பரிதி உதிப்பதை ஒவ்வொரு நாளும் இரு விழிகளாற் காண்கிறோம். ஒரு நாளேனும் ஞாயிறு உதிக்கத் தவறியதாய் உலகில் இதுவரை செய்தி வந்ததில்லை.  நாள் தோறும் கீழ்த்திசையில் ஞாயிறு தோன்றும்; நாளையும் ஞாயிறு தோன்றும் என்ற நம்பிக்கை உருவாகிறது. நீண்ட காலத் தரவுகளின் வழி இந்த நம்பிக்கை நிறுவப்பெற்று நிலை பெறும்போது அது அறிவாக மாறுகிறது. இத்தகைய அறிவை empirical knowledge என்பர் மேலை மெய்யியலாளர்.  புலன்வழித்

காணலாம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 17) Read More »

கனைக்கடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 16)

இறைவன் பெயரை ஓதுவதால் மட்டும் என்ன கண்டு விட முடியும் என்று ஐய வயப்பட்டவர் போலப் பொய்யாகக் கவன்றார் போன பாடலில்.  உண்மையில் உள்ளம் ஒருமித்து இறைவன் திருப்பெயரைச் சொல்லிக்கொண்டிருப்பதால் அடையக்கூடியது எது என்பதை இப்பாடலில் சொல்கிறார் அம்மை. இரைச்சல் மிகுந்து ஓயாதிருக்கும் கடலினைப்போல, எண்ணப்பெருக்கத்தால் அமைதியற்றிருப்பது மனம். பிறவித்தொடரை இதுவே நீளச் செய்கிறது. எண்ணப் பெருக்கம் ஒழித்து ஒருமையுற, இடையறாமல் இறை நாமம் ஓதுவது சிறந்த வழி. இவ்வழியை முறையாகக் கைக்கொண்டால் கிட்டுவது என்ன? இறைவன்

கனைக்கடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 16) Read More »

மின் செய் வான் செஞ்சடை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 15)

பொந்திகை அற்றிருப்பது (மன நிறைவு அற்றிருப்பது) நல்லதா? தாழ் உணர்ச்சி மேவும் மனம் கொண்டு ‘எனக்கு அது கிட்டவில்லையே! இது கிடைக்கவில்லையே’ என்று தாவித் தாவி அங்கலாய்ப்பதும் மாய்வதும் துன்பத்தையே தரும். ஆனால் உயர்ந்த இலக்குகளின் பாலான வேட்கை – பொந்திகை இன்மை (மன நிறைவு இன்மை) – விரும்பத் தக்கது. ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பார் பாரதி. Divine discontent என்ற தொடரைப் பயன்படுத்துவார் ஆங்கிலேய அறிஞர் பேர்னார்ட் ஷா.  மேலானவற்றை அவாவும் மனத்தின் உணர்வே

மின் செய் வான் செஞ்சடை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 15) Read More »

நெஞ்சமும் நஞ்சமும் – அற்புதத் திருவந்தாதி (பாடல் 14)

தீயைப்போன்ற கொடிய நஞ்சை உமிழும் நாகத்தை ஏன் சிவனார் தன் கழுத்தில் அணிந்திருக்கிறார்? நஞ்சை உமிழ்வது நாகத்தின் இயல்பு. அது சிவனாரிடத்து வயப்பட்டு இருக்கும்வரையில்தான் தனது கொடுங்குணம் விடுத்து அமைதி பேணும். நஞ்சுமிழும் நாகத்தை ஒத்ததே நம் நெஞ்சமும். தீயெண்ணங்களால் தகித்துக்கொண்டிருப்பது.  இத்தகைய எண்ணக் கெடுதியும் கெடுதியை அறிந்துணர இயலாதபடி திரையாக இருந்தியங்கும் மாயையும் எதனால் உருவாகின்றன? எங்கிருந்து வருகின்றன? புலன்களால் உணரப்படும் இந்த உலகம் எல்லாக் காலமும் மாறிக்கொண்டிருப்பது. வெளியுலகில் மாற்றம் நிகழும் வேகத்துக்கு ஈடுகொடுத்து

நெஞ்சமும் நஞ்சமும் – அற்புதத் திருவந்தாதி (பாடல் 14) Read More »

நகையாடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 13)

முதலில் ஐயன் அருள் கிட்டுமோ என்று ஐயுற்றுக் கலங்கினார். பிறகு அவ்வுணர்வினின்று  வெளியேறி எது நடந்தாலும் அவனுக்கே ஆளாவோம் என்று உறுதிபட உரைத்தார். மருளும் எண்ணம் விடுத்து ஒன்றை நினைத்திருத்தலே பிரானை அடைவதற்கான வழி; அவனாகவே ஆவதற்கான வழியும் அதுவே என்று தெளிந்தார். பரவு நீர் இறுகித் திரண்டு படிகமாவது போல அன்பின் படி நிலைகள் கெட்டித்தன அம்மை அகத்தில். ஈறின்றி இணக்கமுற்ற பிறகு அடுத்து மலரும் அன்பின் வண்ணம் குறும்பும் பிணக்கமும் அன்றோ! பெம்மானுக்கே ஆளாவோம்

நகையாடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 13) Read More »

பிரான் ஆகும் வழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 12)

பனி வீழும் இமயத்தில் பரமன் வீற்றிருக்கிறான். அவன் கழுத்தில் சூடியிருப்பது கொன்றைமலர் மாலை அன்றோ? பனிக்கு வாடும் தன்மையன ஆயிற்றே அம்மலர்கள்!  ஒளிபொருந்திய அவன் நெற்றியிலே மூன்றாவதாக ஒரு தனிக்கண் இருக்கிறது. எத்துணை விந்தையும் ஒண்மையும் பொருந்தியது அவன் தோற்றம்! அத்தகைய பெம்மானின் தகைமை என்னவென்று சொல்கிறேன், கேளுங்கள் என்கிறார் காரைக்கால் அம்மை. அதுவே பிரான் ஆம் ஆறு – ஒன்றே நினைந்திருந்து ஒன்றே துணிந்து ஒழிந்து ஒன்றே உள்ளத்தினுள் அடைக்கும் அம்முறையே (போன பாடலிற் சொல்லப்பட்டது)

பிரான் ஆகும் வழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 12) Read More »

ஒருமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 11)

எந்த இலக்கை அடைவதற்கும் எண்ணம் ஒருமுகப்பட வேண்டியது இன்றி அமையாதது. எண்ணத்தை ஒருமுகப்படுத்துவது முதற்படி.  அந்த ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் குறுக்கிடும் வேற்று எண்ணங்களை விலக்குவது அடுத்தபடி.  உமி நீக்கப்பெற்ற அரிசி போல இலக்கின்பால் ஒருமை எண்ணம் வாய்த்த பிறகு அந்த எண்ணத்தைச் சிதறாதபடி காத்து, இலக்கை நோக்கிச் செயலாற்றுவது மூன்றாம் படி. எல்லோர்க்கும் எளிதில் கூடி வருபவை அல்ல இவை; துணிவையும் முயற்சியையும் கோரி நிற்பவை. குலைவும் குழப்பமும் களைந்து ஒருமை நோக்கி ஓடும் பெருக்காகவே

ஒருமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 11) Read More »

தீரா வைப்பு: அற்புதத் திருவந்தாதி (பாடல் 10)

நீங்கள் சேமித்து வைத்திருக்கும் செல்வம் எவ்வளவு? உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டிருக்கும் பணத்தை எவ்வளவு நேரத்துக்கொரு முறை எண்ணிப்பார்த்துக்கொள்கிறீர்கள்? (எண்ணுதல் = counting/thinking) அருளின்பால் பற்றுறுதி கொள்ளாமல் பொருளின்பால் அன்பு பூண்டவர்க்குத் தம் வைப்பில் (சேமிப்பில்) மீந்திருக்கும் நிதியே அமைதி தருகிறது. எவ்வளவு தான் முயன்று காத்தாலும் ஒரு நாள் தீர்ந்துபோய் உள்ளத்துக்கு இடும்பை தரக்கூடியது பொருட்செல்வம். அம்மை நாடுவதோ அங்கை மேல் அழல் சுமந்த பெம்மானின் அலகில்லா அருட்செல்வம்.  இத்தகைய செல்வத்தை வைப்பாகக் கொள்வதே மதியுடைமை.

தீரா வைப்பு: அற்புதத் திருவந்தாதி (பாடல் 10) Read More »

அருள்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 9)

‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம்’ உரைத்ததாகக் கூறுவார் மணிவாசகப் பெருமான். அவன் தாள் வணங்குதற்கும் அதன் வழியாக மெய்ப்பொருள் உணரும் நல்லூழ் வாய்த்தற்கும் அவன் அருள் கிட்டியாக வேண்டும். அருள் ஆகும் ஆற்றைப் (வழியை) போன பாடலில் உணர்த்தினார் அம்மை. அதன் விரிவு வரும் பாடலிற் சொல்லப்படுகிறது. காணும் பொருள் யாவிலும் நீக்கமற நிறைந்திருப்பது இறையே என்பதை அவன் அருளால் உணரலாம் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. உலகெலாம் ஆள்விப்பது ஈசன் அருளே –

அருள்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 9) Read More »

அவனே யான்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 8)

‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்’ என்பார் திருமூலர். ‘காதல் சிறந்து’ சிவன் திருவடி சேர்ந்த தன்னைச் சிவமாகவே உணர்ந்து அம்மை பாடும் பாடல் அடுத்து வருவது. ஆயினேன் ஆள்வானுக்கு அன்றே – ஆள்வானாகிய சிவனுக்கு அன்றே ஆளாகினேன். (சென்ற பாடலை ஆளாயினேன் என்றே முடித்தார்) பெறற்கு அரியன் ஆயினேன் – பெறற்கரியன் – பிறவி அற்றவன் – சிவன். சிவன் மீது அன்பு பூண்டு அவன் திருவடி சார்ந்ததால் நானும் சிவனாயினேன். அவனைப்போலவே பிறவா நிலை பெற்றேன்.

அவனே யான்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 8) Read More »

திடம்பெறு மொழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 7)

ஐயம் களைந்து அறுதி நிலை எய்துவதற்கான கருவியாக – மனத்தின் மருள் நீக்கும் மாமருந்தாக – மொழி பயன்பட முடியும் என்பதை இன்றைய நவீன உளவியலும் கண்டறிந்துள்ளது. Cognitive Psychology, Behavioral Psychology, PsychotherapyNeuro-Linguistic Programming (NLP) முதலானவை auto-suggestion பற்றிப்பேசுகின்றன. நான் என்னவாக விரும்புகிறேனோ – எந்த நிலையை அடைய விரும்புகிறேனோ – அதற்கான எண்ணத்தைச் சீருற ஒழுங்கமைத்து, அவ்வாறு ஒழுங்குபட்ட எண்ணத்துக்கு மொழி வடிவம் தந்து அம்மொழித் தொடர்களைத் தொடர்ந்து மனத்துக்குப் புகட்டியபடியிருப்பது. எண்ணம்

திடம்பெறு மொழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 7) Read More »

இருளே ஒளி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 6)

புறப்பொருளையும் புகழையும் நாடும் மனம் பகடு மிக்கவனாகவே இறைவனைக் காணும். ‘நான் வேண்டி நிற்பது இத்துணை பெரிய செல்வம், இத்துணை மாட்சியுடைய புகழ் – இவற்றை அருள வல்ல இறைவன் எவ்வளவு சீர்த்தியும் சிறப்பும் கொண்டவனாக இருப்பான்!’ என்பதவர் எண்ணம். கண் காணாத வான வெளியில் உறைபவனாகவே அத்தகையோரால் இறைவன் கருதப்படுவான். இன்ப வளங்கள் நிறைந்த இந்திரர் உலகத்து அரசனாக எண்ணப்படுவான். ஆனால் ஞானத்தை வேண்டுவோர்க்குத் தம் மனமே அவனுறையும் கோவில். அக உலகே அவன் ஆளும்

இருளே ஒளி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 6) Read More »

தோற்றமும் இறக்கமும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 5)

அந்தம் – ஆதி: இவை ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்குமாப்போல் தோன்றுபவை. மொழியென்னும் முடிவறு உணர்வுச் சுழியத்தில் இவை இரண்டும் ஒன்றே. ஒன்று இன்னொன்றின் பிறழ்தோற்றம் – தொடக்கம் போல் தோன்றுவது முடிவாக இருக்கும். முடிவெனக் கருதப்பட்டது தொடக்கமாக இருக்கும். மொழி எந்தப் பேரண்டத்தின் புலன்வழித் துய்ப்பைச் சொல்லுவதற்கான கருவியாக உள்ளதோ அவ்வண்டமும் இத்தகையதே. ஒரு பாடலில் முறையிட்டு மருளும் மனமாக இருந்து பேசும் காரைக்கால் அம்மை, அந்தாதியின் அடுத்த பாடலில் மறுமுனை தாவி மருளறுந்த தெளிமனத்துடன்

தோற்றமும் இறக்கமும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 5) Read More »

கேள் ஆகாமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 4)

மூன்றாம் பாடல் படிக்க (பாகாப்போழ்): இங்கே செல்க மனக்கடலின் அலைகள் தாழ்ந்தும் உயர்ந்தும் தடம் புரள்வன. நான்காம் பாடலில் அம்மையின் மனம் மீண்டும் முறையிடத் தொடங்குகிறது. எரியாடும் எம்மானாரான சிவபிரான் மேனி சிவந்திருக்கிறது. அச்செவ்வண்ண மேனியில் அவரது நஞ்சுண்ட கண்டம் மட்டும் கரு நீல நிறத்ததாய் இருக்கிறது. நீள் ஆகம் செம்மையான் ஆகி – நீண்ட உடலில் செந்நிறம் கொண்டவன் ஆகி (ஆகம் = மேனி, உடல்) திருமிடறு மற்றொன்று ஆம் – திருவுடைய கண்டம் மட்டும்

கேள் ஆகாமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 4) Read More »

பாகாப்போழ்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 3)

இரண்டாம் பாடல் படிக்க: இங்கே செல்க சிவனவன் சடைமுடி கொடிபோலத் திரண்டிருக்கிறது. அதன் மீதிருக்கும் பிறை நிலவு ஒரு கீறல் துண்டமாகத் தெரிகிறது. பிறையாகச் சிறுத்திருக்கும் நிலவு பிறகொரு நாள் வளர்வதையும் கண்டிருக்கிறோம். சிவன் சடைமுடியில் இருக்கும் அப்பிறையைப் பகாப்போழ் என்கிறார் காரைக்கால் அம்மை.. பகா – பகுக்கப்படாத போழ் – துண்டம் இப்போது தெரியும் நிலாக்கீறல் – பிறை நிலவு – முழுமதியில் இருந்து பகுத்துப் பிரிக்கப்பட்டுவிட்ட துண்டமா? இல்லை. முழுமதி ஒளிபொருதச் சுழலும் கோளம். இப்போது

பாகாப்போழ்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 3) Read More »

காக்கும் தமிழ்

எச்செயல் முயன்றாலும் தண்ணார் தமிழணங்கின் தாள் மலர்களைத் தலைமிசைச் சூடிப் பணிந்து தொடங்குவது என் வழக்கம். காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதிச் சொற்களைத் தேனிக்கத் (தியானித்தல் = தேனித்தல், மணிவாசகர் சொல்) தொடங்கியிருக்கிறேன். தமிழே காக்கும் என்று உறுதி கூறி இன்று காலை நெஞ்சில் எழுந்த வெண்பா – காப்புச்செய்யுள்: —- ஆரைக்கா என்றாலும் ஐயாகி ஆர்ந்தருளும்!காரைக்கால் அம்மை கனிந்தளித்த – சீரைக்காஅந்தாதிச் செம்பொருளை ஆய்தற்கு மெய்யறிவுதந்தோதிக் காக்கும் தமிழ் —– பொருள்: ஆரைக்கா என்றாலும்: யாரைக்

காக்கும் தமிழ் Read More »

எரியாடும் எம்மானார்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 2)

முதலாம் பாடல் படிக்க: இங்கே செல்க ஈசன் என்பதால் ஏத்தித் தொழுது பணிவதா? அன்பன் என்ற உரிமையில் அவன் பாராமுகத்தைக் கடிந்து நோவதா? காரைக்கால் அம்மையிடத்தில் இந்த நடுக்கம் தெரிகிறது. இதற்கேற்பவே இரண்டாம் பாடலில் அவர் மொழியும் குழறுகிறது. எப்போது இடர் தீர்ப்பாய் என்று இறைவனிடம் முதற்பாடலில் முறையிட்டார். ஆனால் இவன் இதற்குச் செவி சாயான் என்ற எண்ணமும் இடையிடையே தலை காட்டுகிறது. ஈசனின் இணையடி எய்தும் நோன்பில் ஒருமுகமாகச் செல்ல வேண்டிய எண்ணம் பல திசைகளிலும்

எரியாடும் எம்மானார்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 2) Read More »

மைஞ்ஞான்ற கண்டம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 1)

தத்தளிப்பு கடந்த சில நாள்களாகக் காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதி படித்துக்கொண்டிருக்கிறேன். அன்பின் தவிப்பை அம்மையைப் போலவும் ஆண்டாள் நாச்சியாரைப் போலவும் உன்மத்தமாகச் சொன்ன வேறு கவிகள் உளரா என்று தெரியவில்லை. ‘மைஞ்ஞான்ற கண்டம்’ என்கிறார் அம்மை. அற்புதத் திருவந்தாதியின் முதற்பாடலில் ‘நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே’ என்று சிவனை விளிக்கிறார். ஞாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். அண்டவெளியில் அந்தரித்துத் தொங்கிக்கொண்டிருப்பதால் இந்த உலகுக்கு ஞாலம் என்று பெயர். அந்த ஞாலத்தின் சுழற்சியால் ஞால்

மைஞ்ஞான்ற கண்டம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 1) Read More »

×