தமிழ் மரபு

காணொளியா? காணொலியா?

வினைத்தொகை: காலங்கலத்தல், காலங்கடத்தல், காலங்கரத்தல் – தமிழின் இலக்கணமும் மெய்யியலும் – சில சிந்தனைகள் — (முகநூலில் எழுதியவற்றின் தொகுப்பு) 1. வீடியோ (video) என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் எது? காணொளியா? காணொலியா? காணொளி என்பதே சரி. காணொலி என்று எழுதற்க. காண் ஒளி – வினைத்தொகை. முக்காலமும் உணர்த்தும் / காலத்தை மறைக்கும். (கண்ட, காண்கின்ற, காணும் ஒளி). இக்காரணம் பற்றி வினைத்தொகையைக் காலங்கரந்த பெயரெச்சம் என்றும் இலக்கணிகள் சொல்வர். கரத்தல் – மறைத்தல். அழிபசி […]

காணொளியா? காணொலியா? Read More »

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை

அமிதசாகரர் 11ம் நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்பெறும் யாப்பிலக்கண நூல் ‘யாப்பருங்கலக்காரிகை’. தமிழ் யாப்பின் தலையாய நூல்களுள் ஒன்று இது. இந்த நூல் அடங்கிய சிதைவுண்ட ஏட்டுச்சுவடியின் (1800-1850 காலப்பகுதிக்குரியது) எண்ணிமப்படியை பிரித்தானிய நூலக வலைத்தளத்தில் இன்று கண்டேன். யாழ்ப்பாணம், கோண்டாவிலில் இருந்து மீட்கப்பட்ட ஏட்டுச்சுவடியை நூலக நிறுவனம் (noolaham.org) எண்ணிமப்படுத்தியிருக்கிறது (Digitization). அழியும் ஆபத்துள்ள பனுவல்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய நூலகத்தின் பெருந்திட்டத்தின் கீழ் 1500க்கும் மேற்பட்ட தமிழ் ஏட்டுச்சுவடிகள் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இசுபானியம் (Spanish), ஆங்கிலம் (English),

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை Read More »

×