புதுச்சொல்லாக்கம்

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு

கொஞ்சம் பழைய பிணக்குத்தான். சொற்கடலில் சுழியோடிக் கொண்டிருந்த வேளை தோன்றி மின்னித் தெறித்திருப்பது புதிய பொறியென்பதால் பகிர்கிறேன். இதன் மூலவராக இருந்த கவிஞர் மகுடேசுவரன் பெயரெச்சம் தொடர்பாக இரண்டொரு நாள்களுக்கு முன்னர் நடந்துகொண்டிருந்த முகநூல் உரையாடலில் முன்வைத்த கேள்விகளைப் பொறுக்கமாட்டாமல் என்னை நட்பு நீக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார். இங்கு முன்மொழியும் புதிய தீர்வை அவர் படிக்க மாட்டார் என்பது சோகம். பழைய பிணக்கு இதுதான்: கிளப்ஹவுஸ் (Clubhouse) செயலியின் வரவு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் வழமை […]

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு Read More »

அருஞ்சொல்: திணைக்களம்

இலாகா/துறை/பிரிவு ஆகிய சொற்களுக்கு இணையாக இலங்கையில் ‘திணைக்களம்’ என்ற தொடர் பயன்பாட்டில் உள்ளது. இவ் அருஞ்சொல் எவ்விதம் தோன்றியது என்று பன்னாள் சிந்தித்ததுண்டு. இன்று திருக்குறள் ‘இறைமாட்சி’ அதிகாரத்தின் (பொருட்பால் – அரசியல்) குறட்பாக்களுக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய உரையைப் படித்துக்கொண்டிருக்கும்போது ‘அரசியல் திணைக்களங்கள்’ என்று அதே பொருளில் அவர் எடுத்தாண்டிருப்பதைக் கண்டேன்! இராசேந்திர சோழனின் செப்பேடுகளிலும் உள்ளமை தேடிப்பார்த்தபோது தெரிந்தது: ‘புரவுவரித் திணைக்களத்து வரிப்பொத்தக நாயகன்’

அருஞ்சொல்: திணைக்களம் Read More »

×