1 நிமிட வாசிப்பு
இலங்கையின் தற்போதைய சூழலை முன்வைத்து:
கர்மா – புத்தரின் வார்த்தையில் சொல்வதென்றால் கம்மா – என்பது நம்மில் அநேகர் நினைப்பதுபோல் ‘கெட்டது செய்தால் கெட்டது நடக்கும்’ என்பதான நேர்வழிச் சூத்திரம் அன்று.
ஒவ்வொருவர் செய்யும் நற்செயலையும் தீச்செயலையும் வானத்தில் இருக்கும் ஒரு சித்திரகுப்தனார் கணக்கெடுத்து வைத்துக்கொண்டு தக்க நேரத்தில் ஆகூழையும் போகூழையும் விதிப்பதும் இல்லை.
உண்மையில் நமது ஆழ்மனமே அந்தச் சித்திரகுப்தனார். தனக்குச் சாதகமான சூழலில் கொடுங்குற்றமொன்றை முழுச்சுதந்திரத்தோடு (with total immunity) ஒருவன் இழைக்கும்போது ஏற்படும் மமதை – ‘எம்மைக் கேள்வி கேட்க யாருமில்லை’ என்ற மெத்தனம் – மனதில் ஒரு பெருமாயையை உருவாக்கும்.
நாம் படித்த புராணக்கதைகளில் அசுரர்களின் அடங்காக் கொட்டத்துக்கும் பின்னர் வீழ்ச்சிக்கும் வேராய் அமைவது இந்த மாயை தான்.
சூழல் சாதகமாக இல்லாதபோதும் ஆழ்மனதின் இந்த மாயை அகங்காரத்தைத் தூண்டிப் பிழையாக வழி நடத்தும்: முன்னைய வரலாற்றைச் சொல்லி ‘ நான் எப்போதும் எவராலும் வெல்லப்பட முடியாதவன் என்று மார்தட்டிக்கொண்டேயிருக்கும்.
மாயையைச் சித்தத் தெளிவால் ஒடுக்கி வெல்பவன் தப்பிப் பிழைக்கிறான்; அதன் சூழ்ச்சிக்கு ஆட்பட்டுப்போபவன் தாழ்ந்து வீழ்கிறான்.
Great service to Tamil World!