நான் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவன்.
தமிழ் என்னும் ஒலியாலான உயர் ஆற்றலுக்கு என்னைக் கருவியாக ஈந்து விட்டவன்.
அருளிக் காக்கும் பொறுப்பை அன்னையிடத்தில் விட்டு விட்டவன்.
என்னை நோக்கி வரலாகும் வாழ்த்தும் வசவும் அவளைச் சார்ந்தனவே. எனது குறையும் நிறையும் அவள் அளித்த ஆற்றலின் மட்டே.
என்னிடம் பயிலும் மாணவர் ஒருவர் குறுமடல் ஒன்று வரைந்தனுப்பியிருக்கிறார். அவ்வம்மையார் சிவகங்கையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஆங்கண் குறிப்பிடப்படும் கட்டுரையை மேலும் பலர் படித்துப்பார்க்க அவரது சொற்கள் தூண்டும் என்ற நோக்கில் இங்கே வெளியிடுகிறேன்:
—
வணக்கம் ஐயா,
இன்று தாங்கள் அனுப்பிய கட்டுரை வாசித்தேன்.
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற நன்னூல் விதியை ஆசிரியர் சொல்லித்தந்த ஞாபகம் உண்டெனினும் இன்றுதான் உக்குறள் என்ற வார்த்தையின் பொருள் உணர்ந்தேன் ஐயா.
தாங்கள் எழுதும் கட்டுரைகள் தாங்கள் நேரில் பாடம் கற்பிப்பதைப் போன்றே உள்ளதய்யா!
மிக்க மகிழ்ச்சி ஐயா
தங்களைப் போன்ற ஆசான் கிடைக்கப் பெரும்பேறு பெற்றேன்
க. செல்வி
சிவகங்கை
—
குற்றியலுகரம் பற்றிய கட்டுரை படிக்க: இங்கே செல்க