மேற்கோள் காட்டுகையில் / சமூக வலைத்தளங்களில் பகிர்கையில், குளறுபடியாக, வலைக்கண் URL மாறிவிடுகிறது. உதாரணமாக,
https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/
என்னும் பதிவு
https://madhuramoli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/
என மாறும். குதறிவிடும் எழுத்துகளின் பெயர் இது தான்: https://en.wikipedia.org/wiki/Numeric_character_reference
இக் குதறலைத் தடுக்கும் வழி:
(1) வலையுலாவியில், URL மீவரியில், http:// அல்லது https:// அடுத்து வரும் எழுத்துகளை, நோட்பேடில் ஒட்டவும்.
(2) பின்னர், https:// அல்லது http:// சேர்த்து விடுக.
(3) இப்பொழுது, நோட்பேடில், வலையுலாவியில் என்ன பார்க்கிறீர்களோ அதுவே தெரியும். அதனை வாட்ஸப், கூகுல்குரூப், … போன்றவற்றில் அனுப்பவும்.
இப்பிரச்சினை சில ஆண்டுகளில் தீர வாய்ப்புகள் உள்ளன.
(முனைவர் நா. கணேசன் அவர்கள் வாட்ஸப்பில் பகிர்ந்தது)