வெண்பா

கூண்டுக்கிளி

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை

காகாவென் றேகரையும் காக்கைக்குத் துன்பில்லைவாகாஞ்சொல் பேசும் மடக்கிளியோ – நாகாவாக்குற்றத்தால் கூண்டடையும்! கூர்மதியால் ஓர்ந்தாய்ந்தேஉற்றுத்தேர் இஃதே உலகு – மதுரன் தமிழவேள் கவிஞர் சூழ் புலனக் குழுமமொன்றில் நாசாவில் பணிபுரியும் தமிழ்வல்ல நல்லறிஞர் முனைவர் நா. கணேசனார் மேலேயுள்ள படம் தந்து வெண்பா எழுத வேண்டினார். அப்போது யாத்த வெண்பா இது. முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் எழுதிய வெண்பாவுக்கும் (கீழே உள்ளது) என்னதுக்குமான மறுமொழியாக “இந்தியாவில் நிகழ்ந்த மொழியியற் புரட்சியின் சூக்குமம் சொல்லியுள்ளீர்கள். இரு செம்மொழி …

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை Read More »

தேங்காயும் சிவனும் ஒன்று

மூன்று கண், உச்சிக் குடுமி, நீர் ஓடு இறையியல்பு இவை இருப்பதால் தேங்காயும் சிவனும் ஒன்று என்று காளமேகப் புலவர் பாணியில் நேற்று ஒரு வெண்பா எழுதியிருந்தேன். தொகாப்பியர் பேரவைப் புலவர் காளியப்பன் ஐயா அவர்களின் வெண்பாவைப் படித்த பிறகு ஏற்பட்ட உந்துணர்வில் – தொடையின்பம் தோன்றப் பாடலாமே என்று எண்ணி – எழுதியது (இறையியல்பு தவிர்ந்த ஏனைய ஒப்புமைகள் அவர் பாட்டிலும் வருகின்றன). இறையியல்பு – தேங்காயைக் கருதினால் சிதறும் இயல்பு. இறைதல் – சிதறுதல். …

தேங்காயும் சிவனும் ஒன்று Read More »

×