தத்துவம்

wellness, reed, relaxation-3318709.jpg

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது..

1 நிமிட வாசிப்பு இலங்கையின் தற்போதைய சூழலை முன்வைத்து: கர்மா – புத்தரின் வார்த்தையில் சொல்வதென்றால் கம்மா – என்பது நம்மில் அநேகர் நினைப்பதுபோல் ‘கெட்டது செய்தால் கெட்டது நடக்கும்’ என்பதான நேர்வழிச் சூத்திரம் அன்று. ஒவ்வொருவர் செய்யும் நற்செயலையும் தீச்செயலையும் வானத்தில் இருக்கும் ஒரு சித்திரகுப்தனார் கணக்கெடுத்து வைத்துக்கொண்டு தக்க நேரத்தில் ஆகூழையும் போகூழையும் விதிப்பதும் இல்லை. உண்மையில் நமது ஆழ்மனமே அந்தச் சித்திரகுப்தனார். தனக்குச் சாதகமான சூழலில் கொடுங்குற்றமொன்றை முழுச்சுதந்திரத்தோடு (with total immunity) […]

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது.. Read More »

போட்டி மனப்பான்மை அவசியமா?

1 நிமிட வாசிப்பு – போட்டி போடுவது என்பது முதிராத நிலையில் இருந்த முதலாளித்துவம் தன்னை முன் தள்ளுவதற்காக மனிதர்களிடையே வளர்த்து விட்ட மனப்பண்பு. ஓயாத மனித உழைப்பு அசுரத்தனமாகப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாயை. நுண்மனமும் கூர் அறிவும் கொண்டவர்களுக்கு இன்றைய நவீன உலகில் போட்டி மனப்பான்மை உபயோகம் தராத ஒன்று. இன்று அவசியமானது கூட்டு நன்மைக்காக ஒவ்வொருவரும் தத்தமது தனி ஆற்றலை – தனித்துவமான ஆற்றலை – ஒருங்கிணைத்துச் செயல்படுவது. விளைவாகக் கிடைக்கும்

போட்டி மனப்பான்மை அவசியமா? Read More »

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை

நிறையவே பாடுபட்டு ஒரு மலை உச்சியை அடைந்து விடுகிறீர்கள். அடுத்து என்ன? உச்சியை அடைந்தவருக்கு இனிமேல் எட்டுவதற்கு என்று ஓர் உயரம் இருக்காது. கீழே இருப்பது அதல பாதாளம். ஓர் ஆட்டத்தில்  வெற்றி அடைந்த பிறகு அடுத்து என்ன செய்வது என்பது சிக்கலான கேள்வி. வெற்றி என்ற மலையுச்சியை அடைந்து விட்டவர் எதிர் நோக்கும் அபாயம் பற்றித் தாவோயிசம் பேசுகிறது. வெற்றியின் போதை நமது கூர்மதியை மழுங்கச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை Read More »

பாரதியின் பேராசை: அசைவறு மதியும் ஆசைப்பெருக்கும்

அசைவுறு பேரண்டத்தை அசைவறு மதி கொண்டு நோக்க இயல்வதே கடவுள் நிலை. “Everything is in constant flux” – அனைத்தும் மாறாத ஓட்டத்தில் உள்ளன. ‘ஒரே ஆற்றில் நீங்கள் இருமுறை இறங்க முடியாது’ என்பது கிரேக்க மெய்யியல் ஞானி ஹெரக்லைடஸ் சொன்னதாகக் கூறப்படும் புகழ்பெற்ற வாக்கியம். ஏனென்றால், அந்தக் கணம் கடந்து விடும். அடுத்த கணம் அது புதியவோர் ஆறு. மாற்றம் அப்பேர்ப்பட்ட வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பது. சுப்பிரமணிய பாரதியை நாம் மகாகவியாக – பெருங்கவிஞனாகக் – கொண்டாடுவதற்கு அவனிடம் இருந்த பேராசையும் ஒரு

பாரதியின் பேராசை: அசைவறு மதியும் ஆசைப்பெருக்கும் Read More »

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே?

எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆளரவமற்ற ஓர் இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பிட்சு விரும்பினார். மடாலயத்திலிருந்து புறப்பட்ட அவர் தூரத்தில் இருந்த குளத்தடிக்குச் சென்று கரையிலிருந்த படகில் ஏறினார். தானே துடுப்பு வலித்தவாறு குளத்தின் மையப்பகுதிக்குச் சென்றார். தனிமையில் கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். சுற்றி வர எவருமில்லை. அடுத்த சில மணி நேரம் நிசப்தம் மட்டுமே சூழலை நிறைத்தது. ஆழ்ந்த தியானம். மெய் மறந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரம் திடீரென்று

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே? Read More »

×