திருக்குறள்

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம்

Gossip எனப்படும் வீண்பேச்சை அறவே தவிர்க்க வேண்டும் என்பதைப் பத்துக் குறள்களில் வலியுறுத்துகிறார் வள்ளுவர் (பயனில சொல்லாமை). இரண்டு குறட்பாக்கள்: நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பிற்சொற் பல்லா ரகத்து பொருள்: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். (மு.வ) நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும். […]

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம் Read More »

அருஞ்சொல்: திணைக்களம்

இலாகா/துறை/பிரிவு ஆகிய சொற்களுக்கு இணையாக இலங்கையில் ‘திணைக்களம்’ என்ற தொடர் பயன்பாட்டில் உள்ளது. இவ் அருஞ்சொல் எவ்விதம் தோன்றியது என்று பன்னாள் சிந்தித்ததுண்டு. இன்று திருக்குறள் ‘இறைமாட்சி’ அதிகாரத்தின் (பொருட்பால் – அரசியல்) குறட்பாக்களுக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய உரையைப் படித்துக்கொண்டிருக்கும்போது ‘அரசியல் திணைக்களங்கள்’ என்று அதே பொருளில் அவர் எடுத்தாண்டிருப்பதைக் கண்டேன்! இராசேந்திர சோழனின் செப்பேடுகளிலும் உள்ளமை தேடிப்பார்த்தபோது தெரிந்தது: ‘புரவுவரித் திணைக்களத்து வரிப்பொத்தக நாயகன்’

அருஞ்சொல்: திணைக்களம் Read More »

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது? எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன். ‘அலை பாயுதே’ படத்தில் வரும் ‘ஸ்நேகிதனே’ பாடலை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன். அதன் ஆரம்பத்தில் வரும் ‘கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கருவம் அழிந்ததடி’ என்ற வரி தமிழின் மிகப்பழம்பெரும் பா வடிவமான குறள் வெண்பாவின் இலக்கண அமைப்புக்குள் அடங்கக் கூடியதாய் இருப்பதை நேற்றுத்தான் எதேச்சையாகக் கவனித்தேன்.

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா Read More »

×