The buddha in the tamil land

(English translation of my latest post on FB – Madhuran Thamilavel)

The newly released logo of Sri Lankan archaeology department featuring Buddhist stupa has caused agitation among Tamils on social media platforms. The essential understanding that Tamils need to establish with the Sinhalese is that the presence of Stupa in the logo does not and cannot deny or hide the historical presence of Tamils on the island. The symbol is a representation of Tamil identity and cultural heritage too.

Under the guidance of Chanakya, Chandragupta extended the Maurya empire across the Indian subcontinent, and during the reign of Emperor Ashoka, the Mauryan Empire embraced the Buddha’s path. From Afghanistan to Nepal, Myanmar, South India, and Sri Lanka, Buddhist stupas were constructed everywhere. Ashoka even sent emissaries to Africa!

In the Tamil lands, Buddhism was propagated by Emperor Ashoka’s brother Mahendra. Under his guidance, many stupas were established in Tamil Nadu. Mahendra then went to Sri Lanka to carry out his mission. Buddhism flourished in places like Kanchipuram and Mamallapuram of Tamil Nadu, giving rise to great literary works such as Manimekalai. Buddhism thrived in Tamil Nadu until the revival of Saivism around the 10th and 11th centuries. Vincent Smith notes that there is no historical evidence to suggest that the person referred to as Mahinda in Sri Lankan sources is the son of Ashoka.

Between the time when Ashoka brought Buddhism to Sri Lanka (3rd century BCE) and the time when the Mahavamsa and other literary works heavily colored with fiction began to be written (5th or 6th century CE), there were various invasions of Sri Lanka from Tamil Nadu. Hostility and hatred existed between the Sinhalese and the Tamils (Stating the facts this way somewhat dilutes the truth for the ethnic consciousness we have today is something that developed over over a long period of time and was firmly etched in the minds of people during the colonial era). Hence the Sri Lankan sources did not want to admit the crucial influence of the Tamil land in spreading Buddhism in Sri lanka.

Relevant books to read on this subject include:

சோழ நாட்டில் பௌத்தம் (Buddhism in the Chola Country) by Dr Jambulingam (published this year)

Asoka the Buddhist Emperor of India by Vincent A Smith

Buddhism among Tamils in Pre-colonial Tamilakam and Īlam by Peter Schalk

The Evolution of an Ethnic Identity: The Tamils in Sri Lanka by K. Indrapala

Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu by Leslie C. Orr

தமிழில்:

இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் சின்னமாக பௌத்த விகாரம் வைக்கப்பட்டுள்ள விவகாரம் சமூக வலைத்தளங்களில் தமிழர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்கள் சிங்களர்களிடத்துப் பரவலாகவும் ஆழமாகவும் ஏற்படுத்த வேண்டிய புரிதல் இதுதான்: விகாரம் குறியீடாக இருப்பது இலங்கைத்தீவில் தமிழர்களின் வரலாற்று இருப்பை மறுப்பதாகவோ மறைப்பதாகவோ ஆகாது. விகாரம் என்பது தமிழ்த்தன்மையும் நிரம்பிய குறியீடுதான்.

சாணக்கியரின் வழிகாட்டலில் சந்திரகுப்தரால் இந்தியப் பெருநிலப்பரப்பின் எட்டுத்திசைகளிலும் எல்லை விரிக்கப்பட்டு உருவான மௌரியப் பேரரசு அசோகர் காலத்தில் புத்தத் தத்துவத்தில் சரண் புகுந்தது. ஆப்கானில் தொடங்கி, நேபாளம், மியன்மார், தெற்கில் தமிழகம், இலங்கை என்று எல்லா இடங்களிலும் பௌத்தத்தூபிகள் அமைக்கப்பட்டன. ஆபிரிக்கா வரை தூதுக்குழுக்கள் அனுப்பினார் அசோகர்!

தமிழ் வழங்கிய நிலங்களில் பௌத்தம் பரப்பும் பணி பேரரசர் அசோகரின் சகோதரர் மகேந்திரரிடம் வழங்கப்பட்டது. அவரது வழிகாட்டலில் பல தூபிகள் தமிழகத்தில் நிறுவப்பட்டன. மகேந்திரரே பிறகு இலங்கை சென்று பணியாற்றினார். காஞ்சிபுரம், மாமல்லபுரம் முதலான பல இடங்களில் பௌத்தம் தழைத்து வளர்ந்தது. மணிமேகலை முதலான மகத்தான இலக்கியங்கள் உருவாகின.

சைவம் மீளெழுச்சி கண்ட 10,11ம் நூற்றாண்டுகள் வரைக்கும் தமிழ் நிலத்தில் பௌத்தம் மேலோங்கி நின்றது. இலங்கை ஏடுகளில் மகிந்த என்று குறிக்கப்பெறுபவர் மகேந்திரரே என்றும் அசோகருக்கு மகிந்த என்ற பெயரில் புதல்வர் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடுகிறார் வின்சண்ட் ஸ்மித்.

அசோகரால் இலங்கைக்கு பௌத்தம் கொண்டுவரப்பட்ட காலத்துக்கும் (கி.மு 3ம் நூற்றாண்டு) மகாவம்சம் முதலான புனைவுகள் நிரம்பிய ஏடுகள் எழுதப்படத் தொடங்கிய காலத்துக்கும் (கிபி 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு) இடையில் (ஏறததாழ 800 ஆண்டுகள்!) இலங்கை மீது தமிழகத்தில் இருந்து பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்திருந்தன. சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் கசப்பும் பகைமையும் வலுத்திருந்தது (இப்படிக் குறிப்பிடுவது கூட மயக்கந்தரும் கூற்றுத்தான் – இப்போது நம்மிடத்துள்ள இனப்பிரக்ஞை சிறுகச் சிறுகத் தோன்றி, காலனித்துவ காலத்தில் வரையறுக்கப்பட்டு வலுப்பெறச் செய்யப்பட்ட ஒன்று).

இது தொடர்பில் படிக்கக்கூடிய பயன் தரு நூல்கள்:

சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் (இவ்வாண்டு வெளியானது)

Asoka the Buddhist Emperor of India by Vincent A Smith

Buddhism among Tamils in Pre-colonial Tamilakam and Īlam by Peter Schalk

The Evolution of an Ethnic Identity: The Tamils in Sri Lanka by K. Indrapala

Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu by Leslie C. Orr

#tamilbuddhism #buddhism #SriLanka #history #archeology

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×