Gossip எனப்படும் வீண்பேச்சை அறவே தவிர்க்க வேண்டும் என்பதைப் பத்துக் குறள்களில் வலியுறுத்துகிறார் வள்ளுவர் (பயனில சொல்லாமை). இரண்டு குறட்பாக்கள்:
நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பிற்சொற் பல்லா ரகத்து
பொருள்: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். (மு.வ)
நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை
ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும். (மு.வ)
நயன் = அறம், நேர்மை
எனவே பயனில்லாதவற்றைப் பேசுவது – வீண்பேச்சில் ஈடுபடுவது – நயன் சாரா நிலை. அறத்தை நல்காது. நல்லவற்றையே சிந்தித்துப் பேசிச் செயற்படும் நயன் தரு நிலையை நாடுவோமாக.
மதுரமொழி தளத்தில் விளக்க உரைகளுடன் திருக்குறள் வலையேற்றப்பட்டு வருகிறது:
பயனடையுங்கள். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
‘பயனில சொல்லாமை’ அதிகாரத்தில் வரும் 10 குறள்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்.
தலைப்பைக் கண்டுவிட்டுத் திரைக்கலைஞர் நயன்தாரா பற்றிய பதிவென்று நினைத்து நீங்கள் இங்கு வந்திருந்தாலும் மேற்சொன்ன குறள் அதிகாரம் உங்களுக்குப் பயன் தரக்கூடும் 🙂