பாரதி மீது இரு வெண்பாக்கள்

பாட்டுத் திறத்தாலே பாழாம் அடிமைகைப்
பூட்டுத் திறந்த புலவன்,ஒளி – காட்டி
எனையாண்ட நாதன் இனியார் அகத்தைத்
தனையாள ஏற்கும் தமிழ்

காணிநிலம் கேட்ட கவிஞனுக்குப் பூவனைத்தும்
பேணி ஒளிசெய்யும் பேறளித்தாய் – வாணீ!
நினைத்தலை சாய்த்துப் பணிகின்றேன் நின்தாள்
நினைத்தலைச் செய்கஎன் நெஞ்சு

(2004)

பாரதி – எட்டயபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, ஏட்டியல் புரத்துக் கலைவாணி

வாணீ – விளி என்பதால் நீண்டது.. வருக்க எதுகை வாராத ஓசைக்காகக் குறுக்கிப் படித்தாலும் குறையன்று.

– மதுரன் தமிழவேள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×