(திருஞானசம்பந்தரின் வழிமொழித் திருப்பதிகத்தில் வரும் ‘ஒழுகலரி’ சந்தத்தை ஒட்டியது)
–
மெழுகின்அழல் ஒழுகல்என விழிகள்அழ வழிகள்எழ இழையும் மனமே
குழலின்சடை தழலின்கரம் சுழலநடம் பழகுபவன் கழல்கள் தொழுமே
குழகன்சொலும் அழகுமொழி ஒழுகும்அரன் பொழியும்நகை நினைவில் வரவே
குழையும்நிலை விழையும்அகம் உழல்வதிலை பழையவினை ஒழியும் இனியே
– மதுரன் தமிழவேள்
–
ஞானசம்பந்தர் தேவாரம்:
ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா |
முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் |
தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப் |
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகண் மொழிதகையவே. |
பொருளுடன் படிக்க: இங்கே செல்க