(படம்: AI உருவாக்கம்)
*
தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம்
தனத்தத்தம் தனத்தத்தம் – தனதானா
*
*
இந்தச் சந்தப்பாடலை ஒலி வடிவில் கேட்க: இங்கே செல்க
*
தளிர்க்கட்டுஞ் செழிக்கட்டுந்
தமிழ்க்கொற்றந் தழைக்கட்டுஞ்
சமர்க்கொட்டந் தெறிக்கட்டும் பணியாதே
*
*
சறுக்குற்றுந் தடுக்குற்றுந்
தலைக்கச்சம் பிணிப்புற்றுந்
தமர்ப்பக்கங் கெடக்கெட்டும் பதறாதே
*
*
திளைப்புற்றுந் திறப்புற்றுந்
திரட்டிச்செம் படைக்குத்தொன்
திறத்தைத்தந் தெழக்கற்றுந் திகழ்வாயே
*
*
சிறப்பிற்றென் புலத்துச்செந்
தமிழ்க்குப்பின் திகைத்துத்தஞ்
சிரத்தைக்கொண் டழற்றித்துன் புறுநூறு
*
*
கிளைப்புற்றுங் கிளர்ப்புற்றுஞ்
சுடர்ச்சித்தந் தொழப்பெற்றும்
புழக்கத்தின் பெருக்குற்றுந் தொடர்வாளே
*
*
கெடுக்கத்தஞ் செருக்கைக்கொண்
டடுக்கத்தின் தடைக்கற்கொண்
டொடுக்கக்கண் துடிப்புற்றுஞ் சுழல்வார்முன்
*
*
களைப்பற்றுஞ் சலிப்பற்றுஞ்
சிறைப்பட்டுஞ் சிதைக்குற்றுந்
தழற்பெற்றந் தனைப்பற்றும் பெருவீரர்
*
*
களித்துச்செங் களத்துக்குங்
கதிர்த்துப்பின் கமத்துக்குஞ்
சழக்கற்றும் பிணக்கற்றும் புகுவாரே!
*
‘பெருக்கச்சஞ் சலித்து’ – திருப்புகழ் படிக்க: இங்கே செல்க