நீர்மை

குகை முகட்டில் அருட்டும் நிழல்,

புத்தனின் பேருரு அசைகிறது இருளில்

ஈர மண்ணில் ஞானப் பதியம்

x

கடலெனப் பெருகும் முடிவறு மனதில்

உணர்வு விழிக்கிறது –

உளது ஒன்றா பலவா

நானா நாமா

x

சருகு வீழும், காலம் மாறும்

நிலையாமை அறியுமா இயற்கை?

வாழ்வெனும் சுழியம் மெல்ல நகும்

x

மழை ஓய்ந்த பின் பேரமைதி

தன்னை அறியும் தவத்தில் உள்ளதோ இயற்கை?

உயிரின் பிம்பம் உணர்த்தும் கண்ணாடி

x

பால்வெளியில் இறந்துவிட்ட

உடுச்சுடரின் ஒரு கீறல்

காலத்தின் வழி நம் கண்களை அடைகிறது –

நாம் எதிரொலிகள் மட்டும் தானா?

(03.03.2024)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×