ஆங்கிலத்தை அழிவிலிருந்து காப்போம்: தமிழரிடம் இருந்து மீட்போம்!

தமிழர் இருவர் உரையாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் மற்றவரிடத்தில் சொன்னார்:

“Friday morning gym போய்ட்டு straightஆ work போறேன்”

அசுணமாப்பறவையின் காதுகளில் பறை இசை ஒலித்தாற்போல இருந்தது எனக்கு.

மாட்சிமை பொருந்திய மகாராணியின் ஆங்கில மொழிக்குத் தமிழர்கள் இழைத்துவரும் பெருந்தீங்கு பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

நான்கு ஆங்கிலச்சொல்; நடுவில் ஒரு தமிழ்ச்சொல்.

ஆங்கிலத்துக்கு நடுவே இப்படித் தமிழைக் கலந்து பேசி ஆங்கிலத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் தமிழர்கள்.

எத்துணை நன்றி கெட்ட செயல் இது!

இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறும்போது 45 திரில்லியன் டாலர் ($ 45 trillon) பெறுமதியான செல்வத்தைச் சூறையாடியிருந்தார்கள் – பதினேழாம் நூற்றாண்டுவரை உலகின் செல்வச் செழிப்பு மிகுந்த நாடாக இருந்த இந்தியாவை ஏழை நாடாக விட்டுச் சென்றார்கள் – என்பது உண்மைதான்!

ஆனால் அவர்கள் நமக்காக ஆங்கிலத்தைத் தந்துவிட்டுப் போனார்கள் என்பதை மறக்கலாமா? ஆங்கிலத்தைத் தமிழ் கலந்து பேசிச் சிதைக்கலாமா?

ஆங்கிலேயன் நமக்குச் செய்த உதவி அது மட்டுமா?

திருவல்லிக்கேணி என்ற பெயரை ட்ரிப்ளிகேன் என்றும் திருவனந்தபுரம் என்பதை ட்ருவாண்ட்ரம் என்றும் யாழ்ப்பாணம் என்பதை ஜாஃப்னா என்றும் சுருக்கித் தந்தான் வெள்ளையன். அந்த நன்றியாவது இருக்க வேண்டாமா?

தமிழ் நாவுக்கு இவற்றை இயல்பாகச் சொல்ல வராது என்பதைப் பெரிது படுத்தாதீர்கள். அதில் உள்ள ஒலிச்சிக்கனத்தைக் கவனியுங்கள்.

கடுங்குளிரில் அரை அங்குலத்துக்கு மேலாக உதடுகளை அகட்டிப் பேச வராத வெள்ளையனுக்கு, ‘திருவல்லிக்கேணி’ போன்ற இதழகல் சொற்களை – அதுவும் ஐந்தசைகளுக்கு மேலாக நீளும் சொற்களைச் – சொல்வது கடினமாக இருக்கும் என்ற சுரணை கூடத் தமிழனிடத்தில் இருக்கவில்லை. (கேட்டால் ஓசையின்பம் என்று ஏதோ பாடம் எடுப்பார்கள் தமிழ்ப்புலவர்கள்.)

வெள்ளையனாக முயன்று ஒரு புதுச்சொல் உருவாக்க வேண்டியிருந்தது. பிறகு தமிழ்க்கூட்டம் அதைத் திருடிக்கொண்டது. இப்போதெல்லாம் திருவல்லிக்கேணி என்று எவனாவது சொல்கிறானா பாருங்கள்?

இந்தத் திருட்டையெல்லாம் பொறுத்துக்கொள்ளலாம்.

ஆனால் ஆங்கிலத் தொடரியல் இலக்கணம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் ஏன் இவர்கள் தாறுமாறாகத் தமிழ் கலந்து பேசுகிறார்கள்?

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் எல்லாம் தம் நாட்டின் தலைமை மொழிக்குத் தமிழர்கள் இழைக்கும் கொடுமையைப் பார்த்துக்கொண்டு பேசாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

அவர்களைப்போல் நாமும் வாளாவிருக்க முடியாது.  

செயல்! செயல்! செயல்!

இதுவே இன்றைய பொழுதின் இன்றியமையாத் தேவை.

ஆங்கிலம் காக்கும் பேரியக்கம் ஒன்றை உருவாக்குவோம்!

தமிழர்களின் பிடியில் சிக்கித் திணறும் ஆங்கிலத்தை அவர்களிடம் இருந்து மீட்டெடுப்போம்!

தமிழர்களை ஆங்கிலம் கலவாமல் தனித்தமிழில் மட்டுமே பேசுமாறு வற்புறுத்துவோம்.

ஆங்கிலத்தின் இடையே தமிழ் கலந்து பேசுவோரைக் கேலி செய்து அவர்கள் வெட்கித் தலைகுனியுமாறு செய்வோம்!

எத்தனை பேர் இணையக் காத்திருக்கிறீர்கள்?

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான குப்புசாமி கணேசன் அவர்கள் இன்று முக நூலில் ஒரு பதிவு எழுதியிருந்தார். ஆங்கிலச் சொல்லைப் பிழையாக யாராவது  பலுக்கி விட்டால் (உச்சரித்துவிட்டால்) பதறிப்போய் அவர்களைத் திருத்தும் பழக்கம் கொண்ட அவரது நண்பரைப் பற்றிய நகைச்சுவைப் பதிவு அது. அவரது பதிவில் பின்வருமாறு கருத்திட்டிருந்தேன் – இதனடியாக எழுந்த வேடிக்கைப் பதிவே மேலே உள்ளது:

Oh, woe unto the Queen’s English, for it suffers greatly at the hands of us! It’s a travesty, really, how our Tamil tongues twist and turn, blending Tamil so seamlessly into English conversations. Can you imagine the sheer audacity? There we are, chatting away, when suddenly – bam – a Tamil word pops up, unannounced. The horror! The English language, in all its purity, must be wondering what it did to deserve such a fate. Let’s stand in solidarity and save English by speaking it without the slightest infusion of Tamil. After all, we mustn’t forget the great lengths English went to accommodate us, simplifying Thiruvallikeni to Triplicane, and Thiruvananthapuram to Trivandrum, purely for our linguistic ease.

If an Englishman stumbles upon ‘Kanchipuram’ and decides ‘Conjeevaram’ is the way to go, who are we to argue? It’s only fair we return the favor by preserving English in its unadulterated form, a task easier said than done, given our penchant for mixing languages as if we’re preparing a linguistic masala tea. So, the next time one feels the urge to sprinkle their English with a dash of Tamil, remember the plight of English. Let’s give English a break; it’s had a hard enough time already.😄😅

KG then asked:

Do native speakers in the UK frown upon our pronunciation? I want to know about your experience.

My reply:

In my experience, I haven’t encountered people in the UK frowning upon our pronunciation. I believe English has become a global language largely because of its ability, or rather, its willingness to adapt and be flexible. And honestly, I’m not concerned about whether my pronunciation is frowned upon. After all the exploitation and loot we endured under colonial rule, mispronouncing their language could be the least form of retribution we could afford. 😅

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×