இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம்
அஞ்சலி (13), சித்தார்த் (9) இருவரும் போன ஆண்டு கோவையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து சென்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். ஆங்கில வழியில் கல்வி கற்பவர்கள். ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பது தமிழார்வம் மிக்க அவர்தம் தந்தையாரது பெருவிருப்பு. பேரா மயில்சாமி மோகனசுந்தரம் ஐயா அவர்கள் அறிமுகப்படுத்தியதன் பேரில் குழந்தைகள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களாக இணையம் வழியாகத் தமிழ் சொல்லித் தருகிறேன். எழுத்திலக்கண அடிப்படைகளோடு சேர்த்து யாப்பிலக்கணமும் கற்பித்து வருகிறேன். …