கட்டுரை

காட்சிக் கலைஞன் கம்பன்: வீரகேசரியில் வெளியாகும் தொடர் (5ஆம் வாரம்)

இது காட்சி ஊடகங்களின் காலம். இணையம் கோலோச்சும் இன்றைய காலத்தில் அசையும் படிமங்களே நமது நினைவை நிறைக்கின்றன. அறிவைச் சமைக்கின்றன. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை பிறந்த தலைமுறையை Gen Z என்று அழைக்கிறார்கள். இந்த Gen Z தலைமுறையைச் சேர்ந்தவர்களில் 91% ஆனவர்கள், (அச்சுப் பனுவல்களைக் காட்டிலும்) யூட்யூப் முதலான தளங்கள் வழியாகக் காணொளிகளைப் பார்த்துக் கற்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது கடந்த ஆண்டு வெளியான ஹப்ஸ்பாட் (Hubspot) வலைத்தளத்தின் […]

காட்சிக் கலைஞன் கம்பன்: வீரகேசரியில் வெளியாகும் தொடர் (5ஆம் வாரம்) Read More »

கம்பரும் கார்ல் மார்க்சும் களவு போன ஒரு காரும்

(வீரகேசரி நாளிதழில் வாரந்தோறும் வெளியாகும் தொடர்) சில மாதங்கள் முன்பு எமது கார் (Car) களவு போனது. நள்ளிரவு நேரம் வந்த கள்வர்கள் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின் காலதர்க் கண்ணாடியை உடைத்து, உள் நுழைந்து, அதை ஓட்டிச் சென்றிருக்கிறார்கள். காருக்குத் தமிழிலே ‘மகிழுந்து’ என்று பெயர். ‘வினைத்தொகை’ என்ற அருமையான இலக்கணக் கருத்துருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கலைச்சொல் அது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணர்த்த்த வல்லது வினைத்தொகை (மகிழ்ந்த, மகிழ்கின்ற,

கம்பரும் கார்ல் மார்க்சும் களவு போன ஒரு காரும் Read More »

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்: தமிழின் ஐவகை இலக்கணம் உணர்த்தும் சூட்சுமம்

— – செழும்பொருளும் பெருஞ்சுவையும் நிரம்பிய இராம காதையை – ‘தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதையை’த் தந்த கம்பன், தான் பாடிப் பரவும் பரம்பொருளான திருமாலை, ‘நடையில் நின்று உயர் நாயகன்’ என்று பாயிரப் பாடலில் போற்றுகிறான். இங்கே நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள். ஆங்கிலத்திலே அதற்கு அணுக்கமான சொல்: discipline என்பதாகும். மனிதரை, மற்றை உயிர்களை, எண்ணில்லா உலகங்களை – இந்தப் பேரண்டத்தைப் – படைத்தான் என்பதற்காக இறைவனை வணங்குகிறோம். தொழுது போற்றுகிறோம்.

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்: தமிழின் ஐவகை இலக்கணம் உணர்த்தும் சூட்சுமம் Read More »

வீரகேசரி வாரவெளியீட்டில் புதிய தொடர்: காலம் தோறும் வாழும் கம்பன்

வீரகேசரி – இலங்கையின் பழம்பெருஞ் செய்தி நாளேடு. மகாகவி பாரதியார் தனது உரைநடை வாரிசு என்று பாராட்டிய வ.ரா முதலானோரை ஆரம்பகால ஆசிரியன்மாரில் ஒருவராகக் கொண்ட சிறப்பை உடையது. வீரகேசரி வாரவெளியீட்டில் ‘காலம் தோறும் வாழும் கம்பன்‘ என்ற தலைப்பில் ஒரு புதிய தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன். கம்பன் திருவுளப்படி தொடர் நடைபயிலும். இவ்வாரப் பத்தி – மதுரன் தமிழவேள் இலண்டனில் கம்பனைக் கண்ட கதை: — – ‘கம்பனடி காப்பாம்’ என்று எழுதிவிட்டு மனம் சிலிர்த்தபடி

வீரகேசரி வாரவெளியீட்டில் புதிய தொடர்: காலம் தோறும் வாழும் கம்பன் Read More »

இலண்டன் கம்பன் விழா: உலகம் யாவையும் உள்ளீர்க்கும் கம்பன்

ஜுலை 13, 14ம் தேதிகளில் அல்பேர்ட்டன் பள்ளி வளாகத்தில் அரங்கம் கொள்ளா மக்கள் வெள்ளத்தோடு இலண்டன் கம்பன் விழா நடைபெற்று முடிந்தது. இரு நாளும் தமிழின் பேரொளி தழைத்துத் துலங்கியது. அறிவு அறக்கட்டளை நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. ஐயா கம்பவாரிதி இ ஜெயராஜ் அவர்களால் இலண்டன் கம்பன் கழகமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, புகழ்பெற்ற பட்டிமண்டபப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார், இலங்கையில் இருந்து பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்

இலண்டன் கம்பன் விழா: உலகம் யாவையும் உள்ளீர்க்கும் கம்பன் Read More »

மாணவர் ஒருவரிடம் இருந்து வந்த வாழ்த்து மடல்

நான் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவன். தமிழ் என்னும் ஒலியாலான உயர் ஆற்றலுக்கு என்னைக் கருவியாக ஈந்து விட்டவன். அருளிக் காக்கும் பொறுப்பை அன்னையிடத்தில் விட்டு விட்டவன். என்னை நோக்கி வரலாகும் வாழ்த்தும் வசவும் அவளைச் சார்ந்தனவே. எனது குறையும் நிறையும் அவள் அளித்த ஆற்றலின் மட்டே. என்னிடம் பயிலும் மாணவர் ஒருவர் குறுமடல் ஒன்று வரைந்தனுப்பியிருக்கிறார். அவ்வம்மையார் சிவகங்கையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஆங்கண் குறிப்பிடப்படும் கட்டுரையை மேலும் பலர் படித்துப்பார்க்க அவரது சொற்கள் தூண்டும் என்ற நோக்கில் இங்கே

மாணவர் ஒருவரிடம் இருந்து வந்த வாழ்த்து மடல் Read More »

அஞ்சலி: காலங் கவர்ந்த செந்நெறியாளர்

எனது தாய்மாமனும் கம்யூனிச இயக்கச் செயற்பாட்டாளராக இருந்தவரும் சிந்தனையாளருமான குணேந்திரதாசன் கந்தையா (தொல்புரம், கந்தர்மடம், இடைக்காடு) காலமானார். இறந்தபோது அவருக்கு 77 வயது. அரசியலில் முனைப்புடன் ஈடுபட்ட அக்காலத்தைய இளைஞர்களில் பலரைப் போலவே தனது வாழ்வின் இளமைக்காலத்தைச் சமூகப்பணிக்காகத் தந்திருந்தவர் சின்ன மாமா. சோஷலிசக் கற்கைக்காகக் கட்சியால் தெரிவு செய்யப்பட்டு எழுபதுகளில் (24ம் அகவையில்) சோவியத் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டவர். மாஸ்கோ, லெனின் கிராட், ஜார்ஜியாவில் உள்ள காக்ரா, சைபீரியாவில் உள்ள நொவோசிபேர்ஸ்க் என்று பல இடங்களுக்கும் சென்று

அஞ்சலி: காலங் கவர்ந்த செந்நெறியாளர் Read More »

கணந்தோறும் நிறம்மாறும் நினைவுப் பறவை

கார்ட்டீசிய மெய்யியலில் இருந்து பௌத்தப்பள்ளி நோக்கி – ராவணன் தர்ஷனின் ‘நினைவோ ஒரு பறவை’ கவிதைத்தொகுப்பை முன்வைத்துச் சில சிந்தனைகள் “தர்க்கத்தை மீறிய மீ உணர்வு சொல்லப்படும்போது தர்க்கத்தின் உடன் பிறப்பான ஒழுங்கு சீர்குலைந்து பிறழ்வு நேர்ந்துவிடக்கூடாது என்பது கருதி ஆதி காலத்தில் கவிதை தனக்கான வாகனமாகச் செய்யுளை ஏற்றுக்கொண்டது” நினைவுப் பறவை என்பது – நினைவை ஒரு பறவையாகச் சொல்வது – கச்சிதமான உருவகம். கடந்த காலம், எதிர்காலம் என்ற இரண்டு கோடுகளுக்கிடையில் தத்தித் தாவியபடி

கணந்தோறும் நிறம்மாறும் நினைவுப் பறவை Read More »

எது வள்ளலார் பூமி?

நல்லறிஞர், இடதுசாரிச் சிந்தனையாளர், தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களுடன் முக நூலில் நடந்த உரையாடல் கீழே உளது. பொதிகைச்சித்தருடனான இவ்வுரையாடலைக் கண்டு வேண்டாத முன்முடிவுகளுக்கு வர உந்தப் பெறுவோர் ” சிவைதாவும் உவேசாவும் ஆறுமுகத்து நாவல்லோனும் ‘வரலாறில்லாத் தமிழ’னெனும் வசைகிழித் திசைபடச் சங்க இலக்கிய இலக்கண உரைகள் மீட்டெடுத்திங்கே நாட்டி விட்டாரே” என்று நாவலர் திறத்தை நவின்றபடியே தனது கண்டனத்தைப் பதியும் அவர்தம் சான்றாண்மை உணர்க. வீண் உரை தவிர்த்திடுக! தோழர் வே.மு. பொதியவெற்பன்: இது இராமலிங்க பூமி!

எது வள்ளலார் பூமி? Read More »

பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல்

சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த உரையாடல்களில் கூறிவை – அகழ் ஆய்வின்றி விரைந்தெழுதித் தொகுத்தவை பழியுரை 1:  பாரதி ‘ஆரிய பூமி, ஆரிய ராணி’ என்றெல்லாம் பாடினான். எனவே அவன் தமிழருக்கு எதிரானவன். பழியுரை 2: கடலூரில் சிறைவைக்கப்பட்ட சமயம் ஆங்கிலேய ஆளுனருக்கு பாரதி எழுதிய கடிதத்தில் அவனது பார்ப்பன மேட்டிமை தெரிகிறது. மறுப்பு: குருஞான சம்பந்தர் ‘சொக்கநாத வெண்பா’ என்றொரு நூல் புனைந்துள்ளார். 94 நேரிசை வெண்பாக்கள் அதன்கண் இடம்பெற்றுள்ளன. வானுலகோர் போற்றும் தாமரைப் பாதங்களைக் கொண்டவனே

பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல் Read More »

நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்

(இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலாக அமைந்த அறிஞர் முனைவர் நா கணேசன், மரபின் மைந்தன் திருவளர் முத்தையா ஆகிய பெரியோர்க்கு மிகு நன்றி. தொடர்புடைய செய்திகள் கட்டுரையின்கண் சொல்லப்பட்டுள்ளன) கற்றலுக்குக் கற்பித்தலே மிகச்சிறந்த வழி என்றுணர்ந்த காரணத்தால் கடந்த மூன்றாண்டுகளாக இணையம் வழியாக யாப்பிலக்கணம் கற்பித்து வருகிறேன். வழக்குரைஞர், மருத்துவர், பல்துறைப் பேராசிரியர், கல்லூரி மாணவர் என்று பலதரப்பட்டோரும் இந்த வகுப்புகளில் பங்கேற்றுப் பயின்று வருகிறார்கள். (கற்போர் கருத்து இங்கே உளது) உறுப்பியலில் குறில், நெடில், ஒற்று, அளபெடை,

நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர் Read More »

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம்

Gossip எனப்படும் வீண்பேச்சை அறவே தவிர்க்க வேண்டும் என்பதைப் பத்துக் குறள்களில் வலியுறுத்துகிறார் வள்ளுவர் (பயனில சொல்லாமை). இரண்டு குறட்பாக்கள்: நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பிற்சொற் பல்லா ரகத்து பொருள்: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். (மு.வ) நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம் Read More »

போரின் புதிய முகங்கள்: வே. தொல்காப்பியன்

நேற்று இத்தளத்தில் வெளியான ‘தனிமைக்கு எதிராக எழுதுதல்‘ மொழிபெயர்ப்புப் பற்றி வந்த மின்னஞ்சல் கீழே. வே. தொல்காப்பியன் அவர்கள் எழுதியது. கூடவே தனது தளத்தில் எழுதிய பதிவொன்றையும் பகிர்ந்திருந்தார். உலக அமைதி குறித்து அக்கறை கொண்டுள்ள எல்லோரும் சிந்தையில் பதிக்க வேண்டிய முக்கியமான கருத்துகள் சிலவற்றை அதில் முன்வைத்திருந்தார். அப்பதிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன். முழுமையான பதிவைப் படிப்பதற்கான இணைப்பும் முடிவில் தரப்பட்டுள்ளது. அன்புள்ள ஐயா, வணக்கம். மொழிபெயர்ப்பு கடினமான பணி. முற்போக்கு, இடதுசாரி சிந்தனையாளர்களின்

போரின் புதிய முகங்கள்: வே. தொல்காப்பியன் Read More »

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு

கொஞ்சம் பழைய பிணக்குத்தான். சொற்கடலில் சுழியோடிக் கொண்டிருந்த வேளை தோன்றி மின்னித் தெறித்திருப்பது புதிய பொறியென்பதால் பகிர்கிறேன். இதன் மூலவராக இருந்த கவிஞர் மகுடேசுவரன் பெயரெச்சம் தொடர்பாக இரண்டொரு நாள்களுக்கு முன்னர் நடந்துகொண்டிருந்த முகநூல் உரையாடலில் முன்வைத்த கேள்விகளைப் பொறுக்கமாட்டாமல் என்னை நட்பு நீக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார். இங்கு முன்மொழியும் புதிய தீர்வை அவர் படிக்க மாட்டார் என்பது சோகம். பழைய பிணக்கு இதுதான்: கிளப்ஹவுஸ் (Clubhouse) செயலியின் வரவு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் வழமை

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு Read More »

மொழிக்கல்வி: இன்றைய தேவை

வைதீக மேலாதிக்க மரபு போலப் புலவர்/பண்டிதர் மேலாதிக்க மரபு என்ற ஒன்றும் நம்மிடையே உண்டு. ஞானத்துக்கான முற்றதிகாரம் கொண்டவன் நானே – கடவுளை அடைவதற்கும் கருவறைக்குள் நுழைவதற்குமான உரித்து எனக்கு மட்டுமே உளது என்று எப்படி வைதீக மரபின் பூசாரி வாயிலை அடைத்துக்கொண்டு நிற்பாரோ, அப்படியே ‘மொழி நுணுக்கங்கள் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் உனக்கென்ன அருகதை இருக்கிறது?’ என்று கேட்டபடி தமிழ் மரபின் இலக்கணப் புலவரும் உங்களிடத்துத் தாழ்வுணர்ச்சியை உண்டு பண்ணவும் ஏளனம் செய்யவும் முனைந்து கொண்டே

மொழிக்கல்வி: இன்றைய தேவை Read More »

குற்றியல் உகரம் என்றால் என்ன?

குறில், நெடில் நமக்குத் தெரியும். அ – குறில் ஆ – நெடில் இ – குறில் ஈ – நெடில் உ – குறில் ஊ – நெடில் குறில் என்ற அளவில் உகரம் (‘உ’ என்ற எழுத்தொலி) ஏனைய குற்றெழுத்துகள் போலவே ஒரு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும். செக்கன், நிமிடம் முதலானவை போல மாத்திரை என்பதும் ஒரு நேர அலகு (unit of time). ஒரு மாத்திரை = கண்ணிமைக்கும் நொடிப்பொழுது. குறில்

குற்றியல் உகரம் என்றால் என்ன? Read More »

சின்னக் கலைவாணர் x சின்ன கலைவாணர்: எது சரி?

சின்னத்தாய் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா? கவிஞர் மகுடேசுவரனின் கட்டுரையை முன்வைத்துச் சில இலக்கணச் சிந்தனைகள் அண்மையில் தினமலர் இதழில் கவிஞர் மகுடேசுவரன் ஓர் இலக்கண விளக்கக் கட்டுரை எழுதியிருந்தார். ‘சின்னக் கலைவாணர்’ போன்ற சொற்றொடர்களில் வல்லொற்று மிகல் ஆகாது; சின்ன கலைவாணர் என்றே எழுத வேண்டும் என்பது அச் சிறுகட்டுரையின் சாரம். அதனை முகநூலிலும் பகிர்ந்திருந்தார். மறைந்த நடிகர் விவேக் பெயரில் அவர் வாழ்ந்த தெருவுக்குத் தமிழக அரசு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று

சின்னக் கலைவாணர் x சின்ன கலைவாணர்: எது சரி? Read More »

wellness, reed, relaxation-3318709.jpg

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது..

1 நிமிட வாசிப்பு இலங்கையின் தற்போதைய சூழலை முன்வைத்து: கர்மா – புத்தரின் வார்த்தையில் சொல்வதென்றால் கம்மா – என்பது நம்மில் அநேகர் நினைப்பதுபோல் ‘கெட்டது செய்தால் கெட்டது நடக்கும்’ என்பதான நேர்வழிச் சூத்திரம் அன்று. ஒவ்வொருவர் செய்யும் நற்செயலையும் தீச்செயலையும் வானத்தில் இருக்கும் ஒரு சித்திரகுப்தனார் கணக்கெடுத்து வைத்துக்கொண்டு தக்க நேரத்தில் ஆகூழையும் போகூழையும் விதிப்பதும் இல்லை. உண்மையில் நமது ஆழ்மனமே அந்தச் சித்திரகுப்தனார். தனக்குச் சாதகமான சூழலில் கொடுங்குற்றமொன்றை முழுச்சுதந்திரத்தோடு (with total immunity)

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது.. Read More »

“கள்” பெற்ற பெருவாழ்வு

– டாக்டர் மு. வரதராசன், ‘மொழியியற் கட்டுரைகள்’ நூலில் இருந்து        எதற்கோ தொடங்கிய முயற்சி வேறு எதற்கோ பயன்படுவது உலகியற்கை. வெண்கதிரைக் குறிக்க ஏற்பட்ட ‘திங்கள்’ என்னுஞ் சொல் இன்று அப்பொருளை அவ்வளவாக உணர்த்தாமற் கிழமையையும் மாதத்தையும் உணர்த்தப் பயன்படவில்லையா? அதுபோல் அஃறிணையாகிய குழந்தைகளை உணர்த்த ஏற்பட்ட ‘மக்கள்’ என்னும் சொல் காலப்போக்கில் உயர்திணையாகிய மனிதரை உணர்த்துவதாயிற்று.   ‘கள்’ மிகப் பழையது; நெடுங்காலத்திற்கு முன்பே இருந்தது. ‘மக்கள்’ தோன்றிய பழங்காலத்திலேயே ‘கள்’ இருந்தது. ஆனால் பழங்காலத்தில் அதற்கு

“கள்” பெற்ற பெருவாழ்வு Read More »

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது? எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன். ‘அலை பாயுதே’ படத்தில் வரும் ‘ஸ்நேகிதனே’ பாடலை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன். அதன் ஆரம்பத்தில் வரும் ‘கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கருவம் அழிந்ததடி’ என்ற வரி தமிழின் மிகப்பழம்பெரும் பா வடிவமான குறள் வெண்பாவின் இலக்கண அமைப்புக்குள் அடங்கக் கூடியதாய் இருப்பதை நேற்றுத்தான் எதேச்சையாகக் கவனித்தேன்.

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா Read More »

பாரதியின் ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின் அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக்-களித் தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ! அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை ஆசன விளிம்பில் உங்களைக் கொண்டு வந்து வைக்கின்ற ஓர் investigative crime thriller; அடுக்குகள் நிறைந்த ஆழமான கவிதை; ஞானத்தை நோக்கிய மானச யோகம் – இவை மூன்றிலும் பொதுவாகக் கிடைக்கக் கூடிய அனுபவம் என்ன? இதோ – அறுதியான முடிவை, எல்லாவற்றுக்கும்

பாரதியின் ஊழிக்கூத்து Read More »

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும்

மணிரத்னம் ஒரு epic filmmaker. எந்த அர்த்தத்தில் என்றால் அவர் சொல்ல விழைகிற கதைகள் காவியக் கருப்பொருள் கொண்டவை. தளபதி, ராவணா நேரடியாக இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டு மறு ஆக்கம் செய்யப்பட்ட கதைகள். அக்னி நட்சத்திரத்தின் கார்த்திக், மௌன ராகத்தின் ரேவதி ஆகியோரின் மனக்கொந்தளிப்புகளும் கூட எனக்கு முறையே கர்ணன்/விதுரனையும் அம்பையையும் நினைவு படுத்துபவை. காவியச்சுவை கொண்ட கதைகளை நாடுகின்ற மனப்பாங்குதான் மணிரத்னத்துக்கும் ஜெயமோகனுக்கும் ஒத்திசைவைத் தந்திருக்கக் கூடும் என்றும் நான் எண்ணிக்கொள்வதுண்டு. செக்கச் சிவந்த வானத்தைத்

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும் Read More »

போட்டி மனப்பான்மை அவசியமா?

1 நிமிட வாசிப்பு – போட்டி போடுவது என்பது முதிராத நிலையில் இருந்த முதலாளித்துவம் தன்னை முன் தள்ளுவதற்காக மனிதர்களிடையே வளர்த்து விட்ட மனப்பண்பு. ஓயாத மனித உழைப்பு அசுரத்தனமாகப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாயை. நுண்மனமும் கூர் அறிவும் கொண்டவர்களுக்கு இன்றைய நவீன உலகில் போட்டி மனப்பான்மை உபயோகம் தராத ஒன்று. இன்று அவசியமானது கூட்டு நன்மைக்காக ஒவ்வொருவரும் தத்தமது தனி ஆற்றலை – தனித்துவமான ஆற்றலை – ஒருங்கிணைத்துச் செயல்படுவது. விளைவாகக் கிடைக்கும்

போட்டி மனப்பான்மை அவசியமா? Read More »

மொழி பற்றிய சில சிந்தனைகள்

ஜூன் 13, 2021 முகநூலில் எழுதியது: தமிழனாக இருப்பதொன்றே பெருமை என்று நான் நினைப்பதில்லை. தமிழ் பற்றிய எனது பெருமிதத்துக்கு அந்த மொழிவழி சிந்திக்கும்தோறும் அடைகிற அக அனுபவத்தின் செழுமை காரணமாகிறது. அதனது விரிவும் ஆழமும் ஆழிபோல் மிகுந்திருக்க, என்னால் அறிந்து கொள்ள முடிவது கடுகளவு என்பதை உணரும்போது உருவாகும் வியப்பால் பெருகுவது அப் பெருமிதமும் உடன்வரும் உவகையும். அதன் ஆழத்தையும் விரிவையும் உணரும் பொருட்டு ஒரு துரும்பைத்தானும் கிள்ளிப்போடாமல் தமிழன் தமிழன் என்று மார்தட்டுவதால் நன்மை

மொழி பற்றிய சில சிந்தனைகள் Read More »

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை

நிறையவே பாடுபட்டு ஒரு மலை உச்சியை அடைந்து விடுகிறீர்கள். அடுத்து என்ன? உச்சியை அடைந்தவருக்கு இனிமேல் எட்டுவதற்கு என்று ஓர் உயரம் இருக்காது. கீழே இருப்பது அதல பாதாளம். ஓர் ஆட்டத்தில்  வெற்றி அடைந்த பிறகு அடுத்து என்ன செய்வது என்பது சிக்கலான கேள்வி. வெற்றி என்ற மலையுச்சியை அடைந்து விட்டவர் எதிர் நோக்கும் அபாயம் பற்றித் தாவோயிசம் பேசுகிறது. வெற்றியின் போதை நமது கூர்மதியை மழுங்கச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை Read More »

பாரதியின் பேராசை: அசைவறு மதியும் ஆசைப்பெருக்கும்

அசைவுறு பேரண்டத்தை அசைவறு மதி கொண்டு நோக்க இயல்வதே கடவுள் நிலை. “Everything is in constant flux” – அனைத்தும் மாறாத ஓட்டத்தில் உள்ளன. ‘ஒரே ஆற்றில் நீங்கள் இருமுறை இறங்க முடியாது’ என்பது கிரேக்க மெய்யியல் ஞானி ஹெரக்லைடஸ் சொன்னதாகக் கூறப்படும் புகழ்பெற்ற வாக்கியம். ஏனென்றால், அந்தக் கணம் கடந்து விடும். அடுத்த கணம் அது புதியவோர் ஆறு. மாற்றம் அப்பேர்ப்பட்ட வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பது. சுப்பிரமணிய பாரதியை நாம் மகாகவியாக – பெருங்கவிஞனாகக் – கொண்டாடுவதற்கு அவனிடம் இருந்த பேராசையும் ஒரு

பாரதியின் பேராசை: அசைவறு மதியும் ஆசைப்பெருக்கும் Read More »

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே?

எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆளரவமற்ற ஓர் இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பிட்சு விரும்பினார். மடாலயத்திலிருந்து புறப்பட்ட அவர் தூரத்தில் இருந்த குளத்தடிக்குச் சென்று கரையிலிருந்த படகில் ஏறினார். தானே துடுப்பு வலித்தவாறு குளத்தின் மையப்பகுதிக்குச் சென்றார். தனிமையில் கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். சுற்றி வர எவருமில்லை. அடுத்த சில மணி நேரம் நிசப்தம் மட்டுமே சூழலை நிறைத்தது. ஆழ்ந்த தியானம். மெய் மறந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரம் திடீரென்று

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே? Read More »

கொரோனா கால உள்ளிருப்பு – சில மனப்பதிவுகள்

ஓசோன் படல ஓட்டை, பருவ நிலை மாற்றம், வளி மாசு இன்னோரன்ன பலவற்றையும் ஆய்ந்து பேச எத்தனையோ அனைத்துலக மா நாடுகள் கூட்டப்பட்டபோதும் அவை எதுவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாதத் தெரியவில்லை.
தான், தனது என்ற மாயத் தன்னுணர்வை (ego) மீறி இயற்கையோடும் பிரபஞ்சத்தோடும் இயைந்த கூட்டு மனமாகத் தன்னை ஆக்கிக்கொள்ள மனிதனால் இதுவரை இயலவில்லை.

கொரோனா கால உள்ளிருப்பு – சில மனப்பதிவுகள் Read More »

×