தமிழ் இலக்கணம்

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள்

(உரையாடற் பின்னணி: ஆங்கிலப் பெருங்கவிஞன் ஷெல்லியின் To a Skylark என்ற கவிதையை அண்மையில் இமயவரம்பன் (இரா. ஆனந்த்) அழகுறத் தமிழ்ப்படுத்தியிருந்தார். ஆற்றொழுக்குப் பிசகாத அகவற்பாவாக (அகவற்பா = ஆசிரியப்பா) அத்தமிழாக்கம் அமைந்திருந்தது.  இப்பாடலில் வெண்டளை மிகையாக வருவதன் பொருத்தப்பாடு குறித்து முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் புலனக் குழுமம் ஒன்றில் உரையாடலைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து மரபின் மைந்தன் திரு முத்தையா, முனைவர் நா கணேசன் ஆகியோரும் வெவ்வேறு கோணங்களை முன்வைத்தனர். எனது தரப்பாக முன்வைத்த …

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள் Read More »

ஒரு சொல், ஒரு குறள்: 51-90

மூன்று நாள்களுக்கு முன் முகநூலில் விளையாட்டாக இந்தத் தொடர் உருப்பெறத் தொடங்கிய கதையையும் முதல் 50 குறள் வெண்பாக்களையும் இங்கே படிக்கலாம். செய்தியின் சுருக்கம் இதுதான்: தமிழ் ஒலிப்புள்ள சொல்லொன்று தந்தால் நான் உடனுக்குடன் குறள் வெண்பா யாத்துத் தருவேன். குறள்வெண்பா தமிழின் பழைய செய்யுள் வடிவங்களுள் ஒன்று. இரண்டு அடிகளில், ஏழு சீர்களில் வெண்டளை பிறழாமல் அமைவது. கீழே உள்ளவை 51 முதல் 90 வரையான குறட்பாக்கள். நூறு பாக்களோடு இந்தத் தொடரை நிறைவு செய்ய …

ஒரு சொல், ஒரு குறள்: 51-90 Read More »

அசை யாப்பிலக்கணம்

இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம்

அஞ்சலி (13), சித்தார்த் (9) இருவரும் போன ஆண்டு கோவையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து சென்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். ஆங்கில வழியில் கல்வி கற்பவர்கள். ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பது தமிழார்வம் மிக்க அவர்தம் தந்தையாரது பெருவிருப்பு. பேரா மயில்சாமி மோகனசுந்தரம் ஐயா அவர்கள் அறிமுகப்படுத்தியதன் பேரில் குழந்தைகள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களாக இணையம் வழியாகத் தமிழ் சொல்லித் தருகிறேன். எழுத்திலக்கண அடிப்படைகளோடு சேர்த்து யாப்பிலக்கணமும் கற்பித்து வருகிறேன். …

இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம் Read More »

நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்

(இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலாக அமைந்த அறிஞர் முனைவர் நா கணேசன், மரபின் மைந்தன் திருவளர் முத்தையா ஆகிய பெரியோர்க்கு மிகு நன்றி. தொடர்புடைய செய்திகள் கட்டுரையின்கண் சொல்லப்பட்டுள்ளன) கற்றலுக்குக் கற்பித்தலே மிகச்சிறந்த வழி என்றுணர்ந்த காரணத்தால் கடந்த மூன்றாண்டுகளாக இணையம் வழியாக யாப்பிலக்கணம் கற்பித்து வருகிறேன். வழக்குரைஞர், மருத்துவர், பல்துறைப் பேராசிரியர், கல்லூரி மாணவர் என்று பலதரப்பட்டோரும் இந்த வகுப்புகளில் பங்கேற்றுப் பயின்று வருகிறார்கள். (கற்போர் கருத்து இங்கே உளது) உறுப்பியலில் குறில், நெடில், ஒற்று, அளபெடை, …

நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர் Read More »

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும்

பொறுப்புத் துறப்பு: ஆங்கில வார்த்தைகளை அள்ளித் தூவித் திரைபாடல்கள் எழுதுவதை வரவேற்பவன் அல்லன் நான். என்றாலும் அப்படியான பாடல்களே அளவு கணக்கற்று வெளியாகின்றன – அவைதாம் இளையோரை ஈர்க்கின்றன என்ற வாதத்தோடு. சரி, அப்படி ஈர்க்கப்படுபவர்களிடத்தில் அஃதை வைத்தே தமிழ் பேசலாம் என்ற நினைப்பில் முகநூலில் எழுதிய பதிவு இது: சிலம்பரசன் ‘புல்லட்டு சாங் (bullet song)’ பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பாடியிருக்கிறார். அது பற்றி வேடிக்கையான ஓர் அறிவிப்புக் காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள் …

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும் Read More »

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு

கொஞ்சம் பழைய பிணக்குத்தான். சொற்கடலில் சுழியோடிக் கொண்டிருந்த வேளை தோன்றி மின்னித் தெறித்திருப்பது புதிய பொறியென்பதால் பகிர்கிறேன். இதன் மூலவராக இருந்த கவிஞர் மகுடேசுவரன் பெயரெச்சம் தொடர்பாக இரண்டொரு நாள்களுக்கு முன்னர் நடந்துகொண்டிருந்த முகநூல் உரையாடலில் முன்வைத்த கேள்விகளைப் பொறுக்கமாட்டாமல் என்னை நட்பு நீக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார். இங்கு முன்மொழியும் புதிய தீர்வை அவர் படிக்க மாட்டார் என்பது சோகம். பழைய பிணக்கு இதுதான்: கிளப்ஹவுஸ் (Clubhouse) செயலியின் வரவு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் வழமை …

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு Read More »

குற்றியல் உகரம் என்றால் என்ன?

குற்றியலுகரப் புணர்ச்சி பற்றிய ஓர் உரையாடல் நேற்று முகநூலில் இடம்பெற்றது. குற்றியலுகரம் என்றால் என்ன? குறில், நெடில் நமக்குத் தெரியும். அ – குறில் ஆ – நெடில் இ – குறில் ஈ – நெடில் உ – குறில் ஊ – நெடில் குறில் என்ற அளவில் உகரம் (‘உ’ என்ற எழுத்தொலி) ஏனைய குற்றெழுத்துகள் போலவே ஒரு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும். செக்கன், நிமிடம் முதலானவை போல மாத்திரை என்பதும் ஒரு …

குற்றியல் உகரம் என்றால் என்ன? Read More »

சின்னக் கலைவாணர் x சின்ன கலைவாணர்: எது சரி?

சின்னத்தாய் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா? கவிஞர் மகுடேசுவரனின் கட்டுரையை முன்வைத்துச் சில இலக்கணச் சிந்தனைகள் அண்மையில் தினமலர் இதழில் கவிஞர் மகுடேசுவரன் ஓர் இலக்கண விளக்கக் கட்டுரை எழுதியிருந்தார். ‘சின்னக் கலைவாணர்’ போன்ற சொற்றொடர்களில் வல்லொற்று மிகல் ஆகாது; சின்ன கலைவாணர் என்றே எழுத வேண்டும் என்பது அச் சிறுகட்டுரையின் சாரம். அதனை முகநூலிலும் பகிர்ந்திருந்தார். மறைந்த நடிகர் விவேக் பெயரில் அவர் வாழ்ந்த தெருவுக்குத் தமிழக அரசு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று …

சின்னக் கலைவாணர் x சின்ன கலைவாணர்: எது சரி? Read More »

“கள்” பெற்ற பெருவாழ்வு

– டாக்டர் மு. வரதராசன், ‘மொழியியற் கட்டுரைகள்’ நூலில் இருந்து        எதற்கோ தொடங்கிய முயற்சி வேறு எதற்கோ பயன்படுவது உலகியற்கை. வெண்கதிரைக் குறிக்க ஏற்பட்ட ‘திங்கள்’ என்னுஞ் சொல் இன்று அப்பொருளை அவ்வளவாக உணர்த்தாமற் கிழமையையும் மாதத்தையும் உணர்த்தப் பயன்படவில்லையா? அதுபோல் அஃறிணையாகிய குழந்தைகளை உணர்த்த ஏற்பட்ட ‘மக்கள்’ என்னும் சொல் காலப்போக்கில் உயர்திணையாகிய மனிதரை உணர்த்துவதாயிற்று.   ‘கள்’ மிகப் பழையது; நெடுங்காலத்திற்கு முன்பே இருந்தது. ‘மக்கள்’ தோன்றிய பழங்காலத்திலேயே ‘கள்’ இருந்தது. ஆனால் பழங்காலத்தில் அதற்கு …

“கள்” பெற்ற பெருவாழ்வு Read More »

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது? எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன். ‘அலை பாயுதே’ படத்தில் வரும் ‘ஸ்நேகிதனே’ பாடலை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன். அதன் ஆரம்பத்தில் வரும் ‘கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கருவம் அழிந்ததடி’ என்ற வரி தமிழின் மிகப்பழம்பெரும் பா வடிவமான குறள் வெண்பாவின் இலக்கண அமைப்புக்குள் அடங்கக் கூடியதாய் இருப்பதை நேற்றுத்தான் எதேச்சையாகக் கவனித்தேன். …

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா Read More »

×