மரபுக்கவிதை

ழகரப் பாட்டு

(திருஞானசம்பந்தரின் வழிமொழித் திருப்பதிகத்தில் வரும் ‘ஒழுகலரி’ சந்தத்தை ஒட்டியது) – மெழுகின்அழல் ஒழுகல்என விழிகள்அழ வழிகள்எழ இழையும் மனமே குழலின்சடை தழலின்கரம் சுழலநடம் பழகுபவன் கழல்கள் தொழுமே குழகன்சொலும் அழகுமொழி ஒழுகும்அரன் பொழியும்நகை நினைவில் வரவே குழையும்நிலை விழையும்அகம் உழல்வதிலை பழையவினை ஒழியும் இனியே – மதுரன் தமிழவேள் – ஞானசம்பந்தர் தேவாரம்: ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப் பழுதிலிறை யெழுதுமொழி […]

ழகரப் பாட்டு Read More »

தமிழ் வீரம்

தமிழ்ப்போர்: சந்தப்பாட்டு (‘பெருக்கச்சஞ் சலித்து’ திருப்புகழ்ச்சந்தம்)

(படம்: AI உருவாக்கம்) * தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் – தனதானா * * இந்தச் சந்தப்பாடலை ஒலி வடிவில் கேட்க: இங்கே செல்க * தளிர்க்கட்டுஞ் செழிக்கட்டுந் தமிழ்க்கொற்றந் தழைக்கட்டுஞ் சமர்க்கொட்டந் தெறிக்கட்டும் பணியாதே * * சறுக்குற்றுந் தடுக்குற்றுந் தலைக்கச்சம் பிணிப்புற்றுந் தமர்ப்பக்கங் கெடக்கெட்டும் பதறாதே * * திளைப்புற்றுந் திறப்புற்றுந் திரட்டிச்செம் படைக்குத்தொன் திறத்தைத்தந் தெழக்கற்றுந் திகழ்வாயே * * சிறப்பிற்றென் புலத்துச்செந் தமிழ்க்குப்பின் திகைத்துத்தஞ் சிரத்தைக்கொண் டழற்றித்துன்

தமிழ்ப்போர்: சந்தப்பாட்டு (‘பெருக்கச்சஞ் சலித்து’ திருப்புகழ்ச்சந்தம்) Read More »

கேள் ஆகாமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 4)

மூன்றாம் பாடல் படிக்க (பாகாப்போழ்): இங்கே செல்க மனக்கடலின் அலைகள் தாழ்ந்தும் உயர்ந்தும் தடம் புரள்வன. நான்காம் பாடலில் அம்மையின் மனம் மீண்டும் முறையிடத் தொடங்குகிறது. எரியாடும் எம்மானாரான சிவபிரான் மேனி சிவந்திருக்கிறது. அச்செவ்வண்ண மேனியில் அவரது நஞ்சுண்ட கண்டம் மட்டும் கரு நீல நிறத்ததாய் இருக்கிறது. நீள் ஆகம் செம்மையான் ஆகி – நீண்ட உடலில் செந்நிறம் கொண்டவன் ஆகி (ஆகம் = மேனி, உடல்) திருமிடறு மற்றொன்று ஆம் – திருவுடைய கண்டம் மட்டும்

கேள் ஆகாமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 4) Read More »

பாகாப்போழ்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 3)

இரண்டாம் பாடல் படிக்க: இங்கே செல்க சிவனவன் சடைமுடி கொடிபோலத் திரண்டிருக்கிறது. அதன் மீதிருக்கும் பிறை நிலவு ஒரு கீறல் துண்டமாகத் தெரிகிறது. பிறையாகச் சிறுத்திருக்கும் நிலவு பிறகொரு நாள் வளர்வதையும் கண்டிருக்கிறோம். சிவன் சடைமுடியில் இருக்கும் அப்பிறையைப் பகாப்போழ் என்கிறார் காரைக்கால் அம்மை.. பகா – பகுக்கப்படாத போழ் – துண்டம் இப்போது தெரியும் நிலாக்கீறல் – பிறை நிலவு – முழுமதியில் இருந்து பகுத்துப் பிரிக்கப்பட்டுவிட்ட துண்டமா? இல்லை. முழுமதி ஒளிபொருதச் சுழலும் கோளம். இப்போது

பாகாப்போழ்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 3) Read More »

காக்கும் தமிழ்

எச்செயல் முயன்றாலும் தண்ணார் தமிழணங்கின் தாள் மலர்களைத் தலைமிசைச் சூடிப் பணிந்து தொடங்குவது என் வழக்கம். காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதிச் சொற்களைத் தேனிக்கத் (தியானித்தல் = தேனித்தல், மணிவாசகர் சொல்) தொடங்கியிருக்கிறேன். தமிழே காக்கும் என்று உறுதி கூறி இன்று காலை நெஞ்சில் எழுந்த வெண்பா – காப்புச்செய்யுள்: —- ஆரைக்கா என்றாலும் ஐயாகி ஆர்ந்தருளும்!காரைக்கால் அம்மை கனிந்தளித்த – சீரைக்காஅந்தாதிச் செம்பொருளை ஆய்தற்கு மெய்யறிவுதந்தோதிக் காக்கும் தமிழ் —– பொருள்: ஆரைக்கா என்றாலும்: யாரைக்

காக்கும் தமிழ் Read More »

எரியாடும் எம்மானார்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 2)

முதலாம் பாடல் படிக்க: இங்கே செல்க ஈசன் என்பதால் ஏத்தித் தொழுது பணிவதா? அன்பன் என்ற உரிமையில் அவன் பாராமுகத்தைக் கடிந்து நோவதா? காரைக்கால் அம்மையிடத்தில் இந்த நடுக்கம் தெரிகிறது. இதற்கேற்பவே இரண்டாம் பாடலில் அவர் மொழியும் குழறுகிறது. எப்போது இடர் தீர்ப்பாய் என்று இறைவனிடம் முதற்பாடலில் முறையிட்டார். ஆனால் இவன் இதற்குச் செவி சாயான் என்ற எண்ணமும் இடையிடையே தலை காட்டுகிறது. ஈசனின் இணையடி எய்தும் நோன்பில் ஒருமுகமாகச் செல்ல வேண்டிய எண்ணம் பல திசைகளிலும்

எரியாடும் எம்மானார்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 2) Read More »

மைஞ்ஞான்ற கண்டம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 1)

தத்தளிப்பு கடந்த சில நாள்களாகக் காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதி படித்துக்கொண்டிருக்கிறேன். அன்பின் தவிப்பை அம்மையைப் போலவும் ஆண்டாள் நாச்சியாரைப் போலவும் உன்மத்தமாகச் சொன்ன வேறு கவிகள் உளரா என்று தெரியவில்லை. ‘மைஞ்ஞான்ற கண்டம்’ என்கிறார் அம்மை. அற்புதத் திருவந்தாதியின் முதற்பாடலில் ‘நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே’ என்று சிவனை விளிக்கிறார். ஞாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். அண்டவெளியில் அந்தரித்துத் தொங்கிக்கொண்டிருப்பதால் இந்த உலகுக்கு ஞாலம் என்று பெயர். அந்த ஞாலத்தின் சுழற்சியால் ஞால்

மைஞ்ஞான்ற கண்டம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 1) Read More »

கூண்டுக்கிளி

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை

காகாவென் றேகரையும் காக்கைக்குத் துன்பில்லைவாகாஞ்சொல் பேசும் மடக்கிளியோ – நாகாவாக்குற்றத்தால் கூண்டடையும்! கூர்மதியால் ஓர்ந்தாய்ந்தேஉற்றுத்தேர் இஃதே உலகு – மதுரன் தமிழவேள் கவிஞர் சூழ் புலனக் குழுமமொன்றில் நாசாவில் பணிபுரியும் தமிழ்வல்ல நல்லறிஞர் முனைவர் நா. கணேசனார் மேலேயுள்ள படம் தந்து வெண்பா எழுத வேண்டினார். அப்போது யாத்த வெண்பா இது. முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் எழுதிய வெண்பாவுக்கும் (கீழே உள்ளது) என்னதுக்குமான மறுமொழியாக “இந்தியாவில் நிகழ்ந்த மொழியியற் புரட்சியின் சூக்குமம் சொல்லியுள்ளீர்கள். இரு செம்மொழி

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை Read More »

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை

அமிதசாகரர் 11ம் நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்பெறும் யாப்பிலக்கண நூல் ‘யாப்பருங்கலக்காரிகை’. தமிழ் யாப்பின் தலையாய நூல்களுள் ஒன்று இது. இந்த நூல் அடங்கிய சிதைவுண்ட ஏட்டுச்சுவடியின் (1800-1850 காலப்பகுதிக்குரியது) எண்ணிமப்படியை பிரித்தானிய நூலக வலைத்தளத்தில் இன்று கண்டேன். யாழ்ப்பாணம், கோண்டாவிலில் இருந்து மீட்கப்பட்ட ஏட்டுச்சுவடியை நூலக நிறுவனம் (noolaham.org) எண்ணிமப்படுத்தியிருக்கிறது (Digitization). அழியும் ஆபத்துள்ள பனுவல்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய நூலகத்தின் பெருந்திட்டத்தின் கீழ் 1500க்கும் மேற்பட்ட தமிழ் ஏட்டுச்சுவடிகள் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இசுபானியம் (Spanish), ஆங்கிலம் (English),

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை Read More »

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள்

(உரையாடற் பின்னணி: ஆங்கிலப் பெருங்கவிஞன் ஷெல்லியின் To a Skylark என்ற கவிதையை அண்மையில் இமயவரம்பன் (இரா. ஆனந்த்) அழகுறத் தமிழ்ப்படுத்தியிருந்தார். ஆற்றொழுக்குப் பிசகாத அகவற்பாவாக (அகவற்பா = ஆசிரியப்பா) அத்தமிழாக்கம் அமைந்திருந்தது.  இப்பாடலில் வெண்டளை மிகையாக வருவதன் பொருத்தப்பாடு குறித்து முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் புலனக் குழுமம் ஒன்றில் உரையாடலைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து மரபின் மைந்தன் திரு முத்தையா, முனைவர் நா கணேசன் ஆகியோரும் வெவ்வேறு கோணங்களை முன்வைத்தனர். எனது தரப்பாக முன்வைத்த

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள் Read More »

ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்)

பாரதியின் மனம் கவர்ந்த மகாகவிஞன் ஷெல்லி. ஆங்கிலத்தில் ஷெல்லி இயற்றிய ‘To a Skylark’ என்னும் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு டாக்டர். கணேசன் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க நான் எழுத முயன்ற மொழிபெயர்ப்பை இங்கே அளிக்க விரும்புகிறேன். இமயவரம்பன் (இரா. ஆனந்த்) English Original : https://www.poetryfoundation.org/poems/45146/to-a-skylark ஒரு வானம்பாடிக்கு – தமிழ் மொழிபெயர்ப்பு (நிலைமண்டில ஆசிரியப்பா) 1. கட்டிலாக் களிப்பின் உயிர்ப்பே வாழி! பறவையென் றுன்னைப் பகர்தற் கரியாய்!

ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்) Read More »

ஒரு சொல், ஒரு குறள்: 51-90

மூன்று நாள்களுக்கு முன் முகநூலில் விளையாட்டாக இந்தத் தொடர் உருப்பெறத் தொடங்கிய கதையையும் முதல் 50 குறள் வெண்பாக்களையும் இங்கே படிக்கலாம். செய்தியின் சுருக்கம் இதுதான்: தமிழ் ஒலிப்புள்ள சொல்லொன்று தந்தால் நான் உடனுக்குடன் குறள் வெண்பா யாத்துத் தருவேன். குறள்வெண்பா தமிழின் பழைய செய்யுள் வடிவங்களுள் ஒன்று. இரண்டு அடிகளில், ஏழு சீர்களில் வெண்டளை பிறழாமல் அமைவது. கீழே உள்ளவை 51 முதல் 90 வரையான குறட்பாக்கள். நூறு பாக்களோடு இந்தத் தொடரை நிறைவு செய்ய

ஒரு சொல், ஒரு குறள்: 51-90 Read More »

சொல் தந்தால் குறள் தருவேன்: முதல் 50 பாக்கள்

முக நூலில் நேற்று விளையாட்டாக ஒரு குறள்வெண்பாத் தொடர் தொடங்கியிருந்தேன். தமிழ் ஒலிப்புள்ள ஒரு சொல் தந்தால் – அது ஒருவருடைய பெயராகக்கூட இருக்கலாம் – உடனே ஒரு குறள் வெண்பா எழுதித் தருவேன். இது தான் நான் வெளியிட்ட அறிவிப்பு. ஒரு நாள் இடைவெளியில் 50 குறட்பாக்கள் யாக்கப் பெற்றிருக்கின்றன! பலர் தம் மக்கள் பெயரைத் தந்திருந்தனர். குழந்தைகளை வாழ்த்தி ஆசியளிப்பதை விடப் பேரின்பம் வேறேது? எனவே இவற்றில் உள்ளவை பலவும் வாழ்த்துப் பாக்களே! பொருளில்லாமல்

சொல் தந்தால் குறள் தருவேன்: முதல் 50 பாக்கள் Read More »

வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள்

எனது கவிதைகளைத் தொகுத்து நூலுருவிற் கொண்டுவரும் முயற்சியை முதன் முதலாக 2003ம் ஆண்டு தொடங்கினேன். அப்போது எனக்கு அகவை 20. திண்டுக்கல்லைச் சேர்ந்த பதிப்பகத்தார் ஒருவர் நூலை வெளிக்கொணர முன் வந்தார். எனது தந்தையாரும் உந்துதலாக இருந்தார். 16ம் அகவையில் இருந்து 20ம் அகவை வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்துத் தந்தேன். இப்போதுபோல அசுரத்தனமாக நூல்களை அச்சிட்டு வெளித்தள்ளும் வசதியும் வழக்கமும் அக்காலத்தில் இருக்கவில்லை. கவிதைகளைக் கையளித்து ஈராண்டின் பின்னர்த் தமிழகத்தில் இருந்து மெய்ப்புப் பார்ப்பதற்கான முதற்படி

வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள் Read More »

பாரதி மீது இரு வெண்பாக்கள்

பாட்டுத் திறத்தாலே பாழாம் அடிமைகைப்பூட்டுத் திறந்த புலவன்,ஒளி – காட்டிஎனையாண்ட நாதன் இனியார் அகத்தைத்தனையாள ஏற்கும் தமிழ் காணிநிலம் கேட்ட கவிஞனுக்குப் பூவனைத்தும்பேணி ஒளிசெய்யும் பேறளித்தாய் – வாணீ!நினைத்தலை சாய்த்துப் பணிகின்றேன் நின்தாள்நினைத்தலைச் செய்கஎன் நெஞ்சு (2004) பாரதி – எட்டயபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, ஏட்டியல் புரத்துக் கலைவாணி வாணீ – விளி என்பதால் நீண்டது.. வருக்க எதுகை வாராத ஓசைக்காகக் குறுக்கிப் படித்தாலும் குறையன்று. – மதுரன் தமிழவேள்

பாரதி மீது இரு வெண்பாக்கள் Read More »

×