வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள்
எனது கவிதைகளைத் தொகுத்து நூலுருவிற் கொண்டுவரும் முயற்சியை முதன் முதலாக 2003ம் ஆண்டு தொடங்கினேன். அப்போது எனக்கு அகவை 20. திண்டுக்கல்லைச் சேர்ந்த பதிப்பகத்தார் ஒருவர் நூலை வெளிக்கொணர முன் வந்தார். எனது தந்தையாரும் உந்துதலாக இருந்தார். 16ம் அகவையில் இருந்து 20ம் அகவை வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்துத் தந்தேன். இப்போதுபோல அசுரத்தனமாக நூல்களை அச்சிட்டு வெளித்தள்ளும் வசதியும் வழக்கமும் அக்காலத்தில் இருக்கவில்லை. கவிதைகளைக் கையளித்து ஈராண்டின் பின்னர்த் தமிழகத்தில் இருந்து மெய்ப்புப் பார்ப்பதற்கான முதற்படி …
வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள் Read More »