தமிழ்க்கனலின் பொறி

மாமழைநீர் பைம்புலத்து மண்ணில் ஊற
மரம்கொடிகள் வளன்மிகுத்துக் கனியீ தல்போல்
 
தேமதுரத் தமிழே நீ நெஞ்சில் ஊறச்
செம்மையினைச் சூடிமதி சிலிர்ப்ப தென்ன!
 
தாமதியேன் ஒருகணமும் தரித்து நில்லேன்
சழக்குகளால் உடற்பிணியால் தளர்ந்து சோரேன்
 
போம் எனதோர் உயிர்எனினும் புழுங்க மாட்டேன்
பொறுமையுடன் தமிழ்க்கனலின் பொறிவ ளர்ப்பேன்
 
– மதுரன் தமிழவேள் –

அண்மைய பதிவுகள்

சொல்லும் பொருளும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 18)

சொல்லுதல் என்பது சொல்லப்படுவதன் தேய்வு. ஆயிரம் ஆண்டு காலம் ஆழ வேரூன்றிக் கிளை பரப்பி நிற்கும் ஒன்றை ‘மரம்’ என்று அழைக்கிறேன். சிலமுறை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஒலித்து ...

மரணம் பற்றி

கூட்டை விடுத்ததுகாண் – உயிர்க்குருவி பறந்தது காண்பூட்டை உடைத்தெறியப் – பொன்புதையல் கிடைத்தது காண் ஊட்டி வளர்த்தவுடல் – பூதம்ஒன்றிச் சமைத்தவுடல்காட்டில் எரியுதுகாண் – இந்தக்காயம் மறைந்தது ...

ஆங்கிலம் – தமிழ்: ஒலிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள்

கேள்வி: ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது இலங்கையில் ஒரு வகையாகவும் தமிழகத்தில் வேறொரு முறையிலும் எழுதுகிறார்களே! எடுத்துக்காட்டாக: Doctor என்பதை இலங்கையில் டொக்டர் என்று எழுதுகிறார்கள். தமிழகத்தில் ...

ழகரப் பாட்டு

(திருஞானசம்பந்தரின் வழிமொழித் திருப்பதிகத்தில் வரும் ‘ஒழுகலரி’ சந்தத்தை ஒட்டியது) - மெழுகின்அழல் ஒழுகல்என விழிகள்அழ வழிகள்எழ இழையும் மனமே குழலின்சடை தழலின்கரம் சுழலநடம் பழகுபவன் கழல்கள் தொழுமே ...
தமிழ் வீரம்

தமிழ்ப்போர்: சந்தப்பாட்டு (‘பெருக்கச்சஞ் சலித்து’ திருப்புகழ்ச்சந்தம்)

(படம்: AI உருவாக்கம்) * தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் - தனதானா * * இந்தச் சந்தப்பாடலை ஒலி வடிவில் கேட்க: இங்கே ...

காணலாம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 17)

மனித நம்பிக்கைகள் புலன்வழித் துய்ப்பில் இருந்து தோற்றம் பெறுகின்றன. கீழைத்திசையில் பரிதி உதிப்பதை ஒவ்வொரு நாளும் இரு விழிகளாற் காண்கிறோம். ஒரு நாளேனும் ஞாயிறு உதிக்கத் தவறியதாய் ...

தமிழும் நானும்: நிகழ்வுக்கு வருக

தமிழ்க்காப்புக்கழகம் நடத்தும் இணைய வழி நிகழ்வில் "தமிழும் நானும்" என்னும் தலைப்பில் வரும் ஞாயிறன்று உரையாற்றுகிறேன். நல்லறிஞர் வேறு பலரது உரைகளும் இடம்பெறவுள்ளன. அனைவரும் வருக! == ...

ஆங்கிலத்தை அழிவிலிருந்து காப்போம்: தமிழரிடம் இருந்து மீட்போம்!

தமிழர் இருவர் உரையாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் மற்றவரிடத்தில் சொன்னார்: “Friday morning gym போய்ட்டு straightஆ work போறேன்” அசுணமாப்பறவையின் காதுகளில் பறை இசை ஒலித்தாற்போல இருந்தது எனக்கு ...

கனைக்கடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 16)

இறைவன் பெயரை ஓதுவதால் மட்டும் என்ன கண்டு விட முடியும் என்று ஐய வயப்பட்டவர் போலப் பொய்யாகக் கவன்றார் போன பாடலில். உண்மையில் உள்ளம் ஒருமித்து இறைவன் ...

பனிநிலங்களில் தமிழ் வயல் உழுதல்: மேலை நாடுகளில் தமிழ்க்கல்வி

இங்கே இங்கிலாந்திலே இணையவழியில் என்னிடம் தமிழ் படிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயார் நேற்று வகுப்பு முடிந்த பின் அனுப்பி வைத்த புலனச் செய்தி படத்திலே உள்ளது. பிள்ளைகள் ...

மின் செய் வான் செஞ்சடை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 15)

பொந்திகை அற்றிருப்பது (மன நிறைவு அற்றிருப்பது) நல்லதா? தாழ் உணர்ச்சி மேவும் மனம் கொண்டு ‘எனக்கு அது கிட்டவில்லையே! இது கிடைக்கவில்லையே’ என்று தாவித் தாவி அங்கலாய்ப்பதும் ...

நெஞ்சமும் நஞ்சமும் – அற்புதத் திருவந்தாதி (பாடல் 14)

தீயைப்போன்ற கொடிய நஞ்சை உமிழும் நாகத்தை ஏன் சிவனார் தன் கழுத்தில் அணிந்திருக்கிறார்? நஞ்சை உமிழ்வது நாகத்தின் இயல்பு. அது சிவனாரிடத்து வயப்பட்டு இருக்கும்வரையில்தான் தனது கொடுங்குணம் ...

நீர்மை

குகை முகட்டில் அருட்டும் நிழல், புத்தனின் பேருரு அசைகிறது இருளில் ஈர மண்ணில் ஞானப் பதியம் x கடலெனப் பெருகும் முடிவறு மனதில் உணர்வு விழிக்கிறது - ...

நகையாடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 13)

முதலில் ஐயன் அருள் கிட்டுமோ என்று ஐயுற்றுக் கலங்கினார். பிறகு அவ்வுணர்வினின்று வெளியேறி எது நடந்தாலும் அவனுக்கே ஆளாவோம் என்று உறுதிபட உரைத்தார். மருளும் எண்ணம் விடுத்து ...

மாணவர் ஒருவரிடம் இருந்து வந்த வாழ்த்து மடல்

நான் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவன். தமிழ் என்னும் ஒலியாலான உயர் ஆற்றலுக்கு என்னைக் கருவியாக ஈந்து விட்டவன். அருளிக் காக்கும் பொறுப்பை அன்னையிடத்தில் விட்டு விட்டவன். என்னை நோக்கி ...

பிரான் ஆகும் வழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 12)

பனி வீழும் இமயத்தில் பரமன் வீற்றிருக்கிறான். அவன் கழுத்தில் சூடியிருப்பது கொன்றைமலர் மாலை அன்றோ? பனிக்கு வாடும் தன்மையன ஆயிற்றே அம்மலர்கள்!  ஒளிபொருந்திய அவன் நெற்றியிலே மூன்றாவதாக ...

ஒருமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 11)

எந்த இலக்கை அடைவதற்கும் எண்ணம் ஒருமுகப்பட வேண்டியது இன்றி அமையாதது. எண்ணத்தை ஒருமுகப்படுத்துவது முதற்படி. அந்த ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் குறுக்கிடும் வேற்று எண்ணங்களை விலக்குவது அடுத்தபடி ...

ஊக்கம்: புதுச்சொல் புனைதல் குறித்த சில சிந்தனைகள்

Motivation என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் எது? ஊக்கம்! செயலூக்கம், சிந்தையூக்கம் என்று புதிய முன்னடைகளிட்டு மொழிபெயர்க்கலாம் என்று முனைவர் குமாரவேல் கணேசன் என்பாரது முக நூல் ...

தீரா வைப்பு: அற்புதத் திருவந்தாதி (பாடல் 10)

நீங்கள் சேமித்து வைத்திருக்கும் செல்வம் எவ்வளவு? உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டிருக்கும் பணத்தை எவ்வளவு நேரத்துக்கொரு முறை எண்ணிப்பார்த்துக்கொள்கிறீர்கள்? (எண்ணுதல் = counting/thinking) அருளின்பால் பற்றுறுதி கொள்ளாமல் ...

மொழியும் இறையும் – கற்பிதங்களா அற்புதங்களா?

மனத்தின் - எண்ணத்தின் - ஒலியுருவாகத் திரண்டு நிற்கும் மொழிக்கு, எழுதப்படும் 'எழுத்து' என்ற வரிவடிவத்தை எக்காரணத்துக்காக மனிதன் கண்டுபிடித்தானோ அதையொத்த காரணத்துக்காகத்தான் இந்தப் பேரண்டத்தை ஆளும் ...

அருள்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 9)

‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம்’ உரைத்ததாகக் கூறுவார் மணிவாசகப் பெருமான். அவன் தாள் வணங்குதற்கும் அதன் வழியாக மெய்ப்பொருள் உணரும் நல்லூழ் ...

அவனே யான்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 8)

'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்’ என்பார் திருமூலர். ‘காதல் சிறந்து’ சிவன் திருவடி சேர்ந்த தன்னைச் சிவமாகவே உணர்ந்து அம்மை பாடும் பாடல் அடுத்து வருவது. ஆயினேன் ...

திடம்பெறு மொழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 7)

ஐயம் களைந்து அறுதி நிலை எய்துவதற்கான கருவியாக – மனத்தின் மருள் நீக்கும் மாமருந்தாக – மொழி பயன்பட முடியும் என்பதை இன்றைய நவீன உளவியலும் கண்டறிந்துள்ளது.Cognitive ...

இருளே ஒளி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 6)

புறப்பொருளையும் புகழையும் நாடும் மனம் பகடு மிக்கவனாகவே இறைவனைக் காணும். 'நான் வேண்டி நிற்பது இத்துணை பெரிய செல்வம், இத்துணை மாட்சியுடைய புகழ் - இவற்றை அருள ...

தோற்றமும் இறக்கமும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 5)

அந்தம் – ஆதி: இவை ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்குமாப்போல் தோன்றுபவை. மொழியென்னும் முடிவறு உணர்வுச் சுழியத்தில் இவை இரண்டும் ஒன்றே. ஒன்று இன்னொன்றின் பிறழ்தோற்றம் – ...

கவிஞர் சேரனின் காஞ்சி: இலண்டன் அறிமுக நிகழ்வு

நம் காலத்தின் பாடுகளையும் பீடுகளையும் பாடும் பெருங்கவி சேரனின் புதிய தொகுப்பு ' காஞ்சி ' இலண்டனில் அறிமுகமாகிறது. ஈஸ்ட் ஹாம் புத்தகக் கண்காட்சியின் முதனிகழ்வாக மார்ச் ...

வினை, பெயர், வேற்றுமை – சிறு விளக்கம்

புலனக்குழுமம் ஒன்றில் ஒருவர் கேட்ட கேள்விக்கு விடையாக விரைந்தெழுதிய விளக்கக் குறிப்பு - கேள்வி: வெற்றி என்பது எவ்வகைச்சொல்? பதில்: வெற்றி என்பது பெயர்ச்சொல். 'வெல்' என்ற ...

கேள் ஆகாமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 4)

மூன்றாம் பாடல் படிக்க (பாகாப்போழ்): இங்கே செல்க மனக்கடலின் அலைகள் தாழ்ந்தும் உயர்ந்தும் தடம் புரள்வன. நான்காம் பாடலில் அம்மையின் மனம் மீண்டும் முறையிடத் தொடங்குகிறது. எரியாடும் ...

‘வெற்றிக்கழகம்’: தொகைச்சொல்லை எவ்வாறு எழுத வேண்டும்?

தொடர்புடைய முன்னைய பதிவைப் படிக்க: இங்கே செல்க 'வெற்றிக்கழகம்' பெயரில் இருந்த ஒற்றுப்பிழை சரி செய்யப்பட்டுள்ளதை வரவேற்று முகநூலில் எழுதிய பதிவின் கீழ் இன்று ஒருவர் கேட்ட்டார்: ...

பாகாப்போழ்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 3)

இரண்டாம் பாடல் படிக்க: இங்கே செல்க சிவனவன் சடைமுடி கொடிபோலத் திரண்டிருக்கிறது. அதன் மீதிருக்கும் பிறை நிலவு ஒரு கீறல் துண்டமாகத் தெரிகிறது. பிறையாகச் சிறுத்திருக்கும் நிலவு ...

காக்கும் தமிழ்

எச்செயல் முயன்றாலும் தண்ணார் தமிழணங்கின் தாள் மலர்களைத் தலைமிசைச் சூடிப் பணிந்து தொடங்குவது என் வழக்கம்.காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதிச் சொற்களைத் தேனிக்கத் (தியானித்தல் = தேனித்தல், ...

எரியாடும் எம்மானார்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 2)

முதலாம் பாடல் படிக்க: இங்கே செல்க ஈசன் என்பதால் ஏத்தித் தொழுது பணிவதா? அன்பன் என்ற உரிமையில் அவன் பாராமுகத்தைக் கடிந்து நோவதா? காரைக்கால் அம்மையிடத்தில் இந்த ...

மைஞ்ஞான்ற கண்டம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 1)

தத்தளிப்பு கடந்த சில நாள்களாகக் காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதி படித்துக்கொண்டிருக்கிறேன். அன்பின் தவிப்பை அம்மையைப் போலவும் ஆண்டாள் நாச்சியாரைப் போலவும் உன்மத்தமாகச் சொன்ன வேறு கவிகள் ...

இருப்பது இருளா? ஒளியா?

இருள்மேல் ஒளி படர்தலால்தெரிவதோ -ஒளி தொடாது விட்ட இடங்களில்இருள் கவிவதால் வெளிப்பதோ -இக்காட்சி? இருப்பதுஇருளா?ஒளியா? வெளியின் இடையில் பொருள் தோற்றினாளோகாளிஇல்லை,பொருளின் சதை பிதுக்கி வீசி வெளி சமைத்தாளோ? ...

வெற்றிக்கழகம்: ஒற்றுப்பிழை தவிர்த்தல்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவரது கட்சிப்பெயர், அத்தொடர்பில் வெளியாகியிருக்கும் அறிக்கை ஆகியன குறித்து அண்மையில் முகநூலில் எழுதிய மூன்று பதிவுகள்: முதலாம் பதிவு: 'பிறப்பொக்கும் எல்லா ...

காணொளியா? காணொலியா?

வினைத்தொகை: காலங்கலத்தல், காலங்கடத்தல், காலங்கரத்தல் - தமிழின் இலக்கணமும் மெய்யியலும் - சில சிந்தனைகள் --- (முகநூலில் எழுதியவற்றின் தொகுப்பு) 1. வீடியோ (video) என்பதற்கான சரியான ...
கூண்டுக்கிளி

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை

காகாவென் றேகரையும் காக்கைக்குத் துன்பில்லைவாகாஞ்சொல் பேசும் மடக்கிளியோ - நாகாவாக்குற்றத்தால் கூண்டடையும்! கூர்மதியால் ஓர்ந்தாய்ந்தேஉற்றுத்தேர் இஃதே உலகு - மதுரன் தமிழவேள் கவிஞர் சூழ் புலனக் குழுமமொன்றில் ...

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை

அமிதசாகரர் 11ம் நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்பெறும் யாப்பிலக்கண நூல் ‘யாப்பருங்கலக்காரிகை’. தமிழ் யாப்பின் தலையாய நூல்களுள் ஒன்று இது. இந்த நூல் அடங்கிய சிதைவுண்ட ஏட்டுச்சுவடியின் (1800-1850 ...

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள்

(உரையாடற் பின்னணி: ஆங்கிலப் பெருங்கவிஞன் ஷெல்லியின் To a Skylark என்ற கவிதையை அண்மையில் இமயவரம்பன் (இரா. ஆனந்த்) அழகுறத் தமிழ்ப்படுத்தியிருந்தார். ஆற்றொழுக்குப் பிசகாத அகவற்பாவாக (அகவற்பா ...

ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்)

பாரதியின் மனம் கவர்ந்த மகாகவிஞன் ஷெல்லி. ஆங்கிலத்தில் ஷெல்லி இயற்றிய 'To a Skylark' என்னும் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு டாக்டர். கணேசன் அவர்கள் என்னிடம் ...

தேங்காயும் சிவனும் ஒன்று

மூன்று கண், உச்சிக் குடுமி, நீர் ஓடு இறையியல்பு இவை இருப்பதால் தேங்காயும் சிவனும் ஒன்று என்று காளமேகப் புலவர் பாணியில் நேற்று ஒரு வெண்பா எழுதியிருந்தேன் ...

ஒரு சொல், ஒரு குறள்: 51-90

மூன்று நாள்களுக்கு முன் முகநூலில் விளையாட்டாக இந்தத் தொடர் உருப்பெறத் தொடங்கிய கதையையும் முதல் 50 குறள் வெண்பாக்களையும் இங்கே படிக்கலாம். செய்தியின் சுருக்கம் இதுதான்: தமிழ் ...

வலைக்கண்ணில் குதறலாகத் தெரியும் தமிழ் எழுத்துகளைச் சரி செய்வது எப்படி ?

மேற்கோள் காட்டுகையில் / சமூக வலைத்தளங்களில் பகிர்கையில், குளறுபடியாக, வலைக்கண் URL மாறிவிடுகிறது. உதாரணமாக, https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/​என்னும் பதிவு https://madhuramoli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/ என மாறும். குதறிவிடும் எழுத்துகளின் பெயர் இது ...

கணந்தோறும் நிறம்மாறும் நினைவுப் பறவை

கார்ட்டீசிய மெய்யியலில் இருந்து பௌத்தப்பள்ளி நோக்கி - ராவணன் தர்ஷனின் 'நினைவோ ஒரு பறவை' கவிதைத்தொகுப்பை முன்வைத்துச் சில சிந்தனைகள் "தர்க்கத்தை மீறிய மீ உணர்வு சொல்லப்படும்போது ...

வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள்

எனது கவிதைகளைத் தொகுத்து நூலுருவிற் கொண்டுவரும் முயற்சியை முதன் முதலாக 2003ம் ஆண்டு தொடங்கினேன். அப்போது எனக்கு அகவை 20. திண்டுக்கல்லைச் சேர்ந்த பதிப்பகத்தார் ஒருவர் நூலை ...

எது வள்ளலார் பூமி?

நல்லறிஞர், இடதுசாரிச் சிந்தனையாளர், தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களுடன் முக நூலில் நடந்த உரையாடல் கீழே உளது. பொதிகைச்சித்தருடனான இவ்வுரையாடலைக் கண்டு வேண்டாத முன்முடிவுகளுக்கு வர உந்தப் பெறுவோர் ...

பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல்

சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த உரையாடல்களில் கூறிவை - அகழ் ஆய்வின்றி விரைந்தெழுதித் தொகுத்தவை பழியுரை 1: பாரதி ‘ஆரிய பூமி, ஆரிய ராணி’ என்றெல்லாம் பாடினான். எனவே ...

பாரதி மீது இரு வெண்பாக்கள்

பாட்டுத் திறத்தாலே பாழாம் அடிமைகைப்பூட்டுத் திறந்த புலவன்,ஒளி - காட்டிஎனையாண்ட நாதன் இனியார் அகத்தைத்தனையாள ஏற்கும் தமிழ் காணிநிலம் கேட்ட கவிஞனுக்குப் பூவனைத்தும்பேணி ஒளிசெய்யும் பேறளித்தாய் - ...
அசை யாப்பிலக்கணம்

இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம்

அஞ்சலி (13), சித்தார்த் (9) இருவரும் போன ஆண்டு கோவையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து சென்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். ஆங்கில வழியில் கல்வி கற்பவர்கள். ஆங்கிலத்தில் ...

நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்

(இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலாக அமைந்த அறிஞர் முனைவர் நா கணேசன், மரபின் மைந்தன் திருவளர் முத்தையா ஆகிய பெரியோர்க்கு மிகு நன்றி. தொடர்புடைய செய்திகள் கட்டுரையின்கண் சொல்லப்பட்டுள்ளன) ...

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம்

Gossip எனப்படும் வீண்பேச்சை அறவே தவிர்க்க வேண்டும் என்பதைப் பத்துக் குறள்களில் வலியுறுத்துகிறார் வள்ளுவர் (பயனில சொல்லாமை). இரண்டு குறட்பாக்கள்: நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பிற்சொற் ...

தனிமைக்கு எதிராக எழுதுதல் – எடுவார்டோ கலியானோ நேர்காணல்

1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான The Progressive இதழிலும் அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு வெளியான Louder than Bombs: Interviews from the Progressive ...

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும்

பொறுப்புத் துறப்பு: ஆங்கில வார்த்தைகளை அள்ளித் தூவித் திரைபாடல்கள் எழுதுவதை வரவேற்பவன் அல்லன் நான். என்றாலும் அப்படியான பாடல்களே அளவு கணக்கற்று வெளியாகின்றன - அவைதாம் இளையோரை ...

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு

கொஞ்சம் பழைய பிணக்குத்தான். சொற்கடலில் சுழியோடிக் கொண்டிருந்த வேளை தோன்றி மின்னித் தெறித்திருப்பது புதிய பொறியென்பதால் பகிர்கிறேன். இதன் மூலவராக இருந்த கவிஞர் மகுடேசுவரன் பெயரெச்சம் தொடர்பாக ...

மொழிக்கல்வி: இன்றைய தேவை

இப்பதிவை ஒலி வடிவிற் கேட்க வைதீக மேலாதிக்க மரபு போலப் புலவர்/பண்டிதர் மேலாதிக்க மரபு என்ற ஒன்றும் நம்மிடையே உண்டு. ஞானத்துக்கான முற்றதிகாரம் கொண்டவன் நானே - ...

குற்றியல் உகரம் என்றால் என்ன?

குறில், நெடில் நமக்குத் தெரியும். அ – குறில் ஆ – நெடில் இ – குறில் ஈ – நெடில் உ – குறில் ஊ ...

அருஞ்சொல்: திணைக்களம்

இலாகா/துறை/பிரிவு ஆகிய சொற்களுக்கு இணையாக இலங்கையில் 'திணைக்களம்' என்ற தொடர் பயன்பாட்டில் உள்ளது. இவ் அருஞ்சொல் எவ்விதம் தோன்றியது என்று பன்னாள் சிந்தித்ததுண்டு. இன்று திருக்குறள் 'இறைமாட்சி' ...

ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம்

ஆறாத அனல்சுட்ட காயம் - நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்?ஆறாத அனல்சுட்ட காயம் - நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்? கந்தகம் படிந்த வெந்தணல் நதியில்கரைந்ததோ எங்களின் ...

சின்னக் கலைவாணர் x சின்ன கலைவாணர்: எது சரி?

சின்னத்தாய் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா?கவிஞர் மகுடேசுவரனின் கட்டுரையை முன்வைத்துச் சில இலக்கணச் சிந்தனைகள் அண்மையில் தினமலர் இதழில் கவிஞர் மகுடேசுவரன் ஓர் இலக்கண விளக்கக் கட்டுரை ...
wellness, reed, relaxation-3318709.jpg

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது..

1 நிமிட வாசிப்பு இலங்கையின் தற்போதைய சூழலை முன்வைத்து: கர்மா - புத்தரின் வார்த்தையில் சொல்வதென்றால் கம்மா - என்பது நம்மில் அநேகர் நினைப்பதுபோல் 'கெட்டது செய்தால் ...

தமிழணங்கு 

கரிய நிறத்தவள் காண் எங்கள் அன்னை – அடர் காட்டில் உலவிக் களி நடம் புரிவாள் அரிய திறத்தவள் காண் எங்கள் அன்னை – உடல் ஆவிக்(கு) ...

“கள்” பெற்ற பெருவாழ்வு

- டாக்டர் மு. வரதராசன், 'மொழியியற் கட்டுரைகள்' நூலில் இருந்து எதற்கோ தொடங்கிய முயற்சி வேறு எதற்கோ பயன்படுவது உலகியற்கை. வெண்கதிரைக் குறிக்க ஏற்பட்ட ‘திங்கள்’ என்னுஞ் ...

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது? எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன் ...

பாரதியின் ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக்-களித்தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை ஆசன ...

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும்

மணிரத்னம் ஒரு epic filmmaker. எந்த அர்த்தத்தில் என்றால் அவர் சொல்ல விழைகிற கதைகள் காவியக் கருப்பொருள் கொண்டவை. தளபதி, ராவணா நேரடியாக இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டு ...

போட்டி மனப்பான்மை அவசியமா?

1 நிமிட வாசிப்பு - போட்டி போடுவது என்பது முதிராத நிலையில் இருந்த முதலாளித்துவம் தன்னை முன் தள்ளுவதற்காக மனிதர்களிடையே வளர்த்து விட்ட மனப்பண்பு. ஓயாத மனித ...

மொழி பற்றிய சில சிந்தனைகள்

ஜூன் 13, 2021 முகநூலில் எழுதியது: தமிழனாக இருப்பதொன்றே பெருமை என்று நான் நினைப்பதில்லை. தமிழ் பற்றிய எனது பெருமிதத்துக்கு அந்த மொழிவழி சிந்திக்கும்தோறும் அடைகிற அக ...

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை

நிறையவே பாடுபட்டு ஒரு மலை உச்சியை அடைந்து விடுகிறீர்கள். அடுத்து என்ன? உச்சியை அடைந்தவருக்கு இனிமேல் எட்டுவதற்கு என்று ஓர் உயரம் இருக்காது. கீழே இருப்பது அதல ...

பாரதியின் பேராசை: அசைவறு மதியும் ஆசைப்பெருக்கும்

அசைவுறு பேரண்டத்தை அசைவறு மதி கொண்டு நோக்க இயல்வதே கடவுள் நிலை."Everything is in constant flux" - அனைத்தும் மாறாத ஓட்டத்தில் உள்ளன. ‘ஒரே ஆற்றில் ...

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே?

எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆளரவமற்ற ஓர் இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பிட்சு விரும்பினார். மடாலயத்திலிருந்து புறப்பட்ட அவர் தூரத்தில் இருந்த குளத்தடிக்குச் ...

கொரோனா கால உள்ளிருப்பு – சில மனப்பதிவுகள்

ஓசோன் படல ஓட்டை, பருவ நிலை மாற்றம், வளி மாசு இன்னோரன்ன பலவற்றையும் ஆய்ந்து பேச எத்தனையோ அனைத்துலக மா நாடுகள் கூட்டப்பட்டபோதும் அவை எதுவும் நிலைமையைக் ...
ஆதி மொழி

தொன்மையும் வன்மையும் செறிந்திருக்கும் தமிழ் போன்றவோர் ஆதி மொழி, அகவாழ்வை ஈடேற்றக்கூடிய நிறைநிலையை – இறை நிலையைக் – கொண்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டு கால மனித வாழ்வின் அறச் சாரத்தைத் தன்னுள் தேக்கி வைத்திருக்கிறது.

மொழியே மந்திரம்

தமிழின் மந்திரத் தன்மையை உணர்ந்து தன்வயம் கொண்டால் மனச்செம்மையும் ஒளியும் வாய்ப்பது திண்ணம்.

மாயத் துயரம் மடிந்தொழிக! மரணத் தளையின் திரையறுக! நோயுங் கசடும் வருத்தாத நுண்மைத் திறனை மதிபெறுக! காயங் கனலாய்ச் சுடர்ந்திடுக! கருத்தில் உண்மை உறைந்திடுக! தாயும் தயவும் ஆனவனின் தாளில் மலராய்த் தளிர்த்தெழுக! - மதுரன் தமிழவேள் (02.11.2018, புதுவை)

'ஓங்கும் பனுவல்கள் உந்தி மிளிர்முடி உச்சியிலே
தாங்கும் அணங்கு தமிழெனும் தெய்வம்' (தமிழ்த்தாய் அந்தாதி)

×