அஞ்சலி: காலங் கவர்ந்த செந்நெறியாளர்
எனது தாய்மாமனும் கம்யூனிச இயக்கச் செயற்பாட்டாளராக இருந்தவரும் சிந்தனையாளருமான குணேந்திரதாசன் கந்தையா (தொல்புரம், கந்தர்மடம், இடைக்காடு) காலமானார். இறந்தபோது அவருக்கு 77 வயது. அரசியலில் முனைப்புடன் ஈடுபட்ட அக்காலத்தைய இளைஞர்களில் பலரைப் போலவே தனது வாழ்வின் இளமைக்காலத்தைச் சமூகப்பணிக்காகத் தந்திருந்தவர் சின்ன மாமா. சோஷலிசக் கற்கைக்காகக் கட்சியால் தெரிவு செய்யப்பட்டு எழுபதுகளில் (24ம் அகவையில்) சோவியத் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டவர். மாஸ்கோ, லெனின் கிராட், ஜார்ஜியாவில் உள்ள காக்ரா, சைபீரியாவில் உள்ள நொவோசிபேர்ஸ்க் என்று பல இடங்களுக்கும் சென்று …