Author name: மதுரன் தமிழவேள்

மரபு மற்றும் நவீனக் கவிதை வடிவங்களை நுட்பத்துடன் கையாளக்கூடிய, தனித்திறன் கொண்ட தமிழ்ப்பாவலர். ஓசையின் உயிர்ப்பும் படிமச் செழுமையும் ஆழமான மெய்யியல் நோக்கும் இவரது கவிதையின் அடையாளங்கள். சிக்கலான யாப்பு வடிவங்களைச் சிறப்பாகக் கையாளும் திறமைக்காக அறிஞர்களால் பாராட்டப்படுபவர். மகாகவி பாரதி இவரது ஆதர்சம். எட்டாவது வயதில் சந்தக் கவிதை எழுத ஆரம்பித்தவர். விரிவான தகவலை இவ்வலைத்தளத்தின் 'அறிமுகம்' பகுதியில் காண்க.

காட்சிக் கலைஞன் கம்பன்: வீரகேசரியில் வெளியாகும் தொடர் (5ஆம் வாரம்)

இது காட்சி ஊடகங்களின் காலம். இணையம் கோலோச்சும் இன்றைய காலத்தில் அசையும் படிமங்களே நமது நினைவை நிறைக்கின்றன. அறிவைச் சமைக்கின்றன. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை பிறந்த தலைமுறையை Gen Z என்று அழைக்கிறார்கள். இந்த Gen Z தலைமுறையைச் சேர்ந்தவர்களில் 91% ஆனவர்கள், (அச்சுப் பனுவல்களைக் காட்டிலும்) யூட்யூப் முதலான தளங்கள் வழியாகக் காணொளிகளைப் பார்த்துக் கற்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது கடந்த ஆண்டு வெளியான ஹப்ஸ்பாட் (Hubspot) வலைத்தளத்தின் […]

காட்சிக் கலைஞன் கம்பன்: வீரகேசரியில் வெளியாகும் தொடர் (5ஆம் வாரம்) Read More »

ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ்

முன்னொரு பொழுதுஉலகம் கொந்தளிப்பில்லாமல்இயங்கிக் கொண்டிருந்தது ஆயிரம் கோடிக் கால்கள் கொண்டுஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ் அகிலத்தை ஆள வந்த வேளைமனம்சிலிர்த்து,மண்டியிட்டுமனிதர்கள் தம்மை ஒப்புக்கொடுத்த பொழுது வரைஉலகம் கொந்தளிப்பில்லாமல் தான்இயங்கிக் கொண்டிருந்தது (ஒப்பீட்டளவில்) தாம் அணிந்திருந்த முகமூடிகளுக்கு ஏற்பஒவ்வொருவரும் நல்லவர்களாக நடந்து கொண்டிருந்தார்கள் திருட்டு மதபோதகர்களின் சந்தைதிடீரென்று ஒரு நாளில் சரியும் வாய்ப்பில்லாமல் இருந்ததுசமூக நீதியும் சமத்துவமும் பேசும்புரட்சியாளர்களால்அந்தரங்கத்தில் சுதந்திரமாகக் கெட்டவார்த்தை பேச முடிந்திருந்ததுதிரைக்கு வெளியில்சாகசப்பிம்பம்தகர்ந்து விடாமல் காத்துக்கொள்ளநாயகர்களுக்கு இயன்றிருந்தது தற்காதல் நிரம்பிய மனிதர்களிடத்தில்ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ்தலையைச் சொறிந்து கொண்டுஅமைதிப்படை அமாவாசை போலத்தன்னடக்கத்துடன்

ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ் Read More »

கம்பரும் கார்ல் மார்க்சும் களவு போன ஒரு காரும்

(வீரகேசரி நாளிதழில் வாரந்தோறும் வெளியாகும் தொடர்) சில மாதங்கள் முன்பு எமது கார் (Car) களவு போனது. நள்ளிரவு நேரம் வந்த கள்வர்கள் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின் காலதர்க் கண்ணாடியை உடைத்து, உள் நுழைந்து, அதை ஓட்டிச் சென்றிருக்கிறார்கள். காருக்குத் தமிழிலே ‘மகிழுந்து’ என்று பெயர். ‘வினைத்தொகை’ என்ற அருமையான இலக்கணக் கருத்துருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கலைச்சொல் அது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணர்த்த்த வல்லது வினைத்தொகை (மகிழ்ந்த, மகிழ்கின்ற,

கம்பரும் கார்ல் மார்க்சும் களவு போன ஒரு காரும் Read More »

கலீல் ஜிப்ரான், கணியன் பூங்குன்றன், கம்பன்

“கடலுடன் கலக்கப்போகும் நொடியில் ஓர் ஆறு அச்சத்தால் கலங்குவதாகச் சொல்லப்படுகிறது. மலையுச்சிகளில் தோன்றி, வளைந்து நீண்ட பாதைகளின் வழி காடுகளையும் ஊர்களையும் கடந்து வந்ததை அது திரும்பிப் பார்க்கிறது. இத்துணை பெரிய ஆழியுடன் கலந்து விடுவது என்பது, என்றைக்கும் இல்லாமல் போவதே அன்றி வேறு என்ன என்று தன்முன்னே பரந்திருக்கும் கடலைப் பார்க்கும்போது அதற்குத் தோன்றுகிறது. ஆனால் அங்கே வேறு வழி கிடையாது. ஆற்றினால் திரும்பிப்போக முடியாது. எவராலும் திரும்பிப்போக முடியாது . திரும்பிப்போவது என்பது இருப்பிலே

கலீல் ஜிப்ரான், கணியன் பூங்குன்றன், கம்பன் Read More »

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்: தமிழின் ஐவகை இலக்கணம் உணர்த்தும் சூட்சுமம்

— – செழும்பொருளும் பெருஞ்சுவையும் நிரம்பிய இராம காதையை – ‘தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதையை’த் தந்த கம்பன், தான் பாடிப் பரவும் பரம்பொருளான திருமாலை, ‘நடையில் நின்று உயர் நாயகன்’ என்று பாயிரப் பாடலில் போற்றுகிறான். இங்கே நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள். ஆங்கிலத்திலே அதற்கு அணுக்கமான சொல்: discipline என்பதாகும். மனிதரை, மற்றை உயிர்களை, எண்ணில்லா உலகங்களை – இந்தப் பேரண்டத்தைப் – படைத்தான் என்பதற்காக இறைவனை வணங்குகிறோம். தொழுது போற்றுகிறோம்.

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்: தமிழின் ஐவகை இலக்கணம் உணர்த்தும் சூட்சுமம் Read More »

வீரகேசரி வாரவெளியீட்டில் புதிய தொடர்: காலம் தோறும் வாழும் கம்பன்

வீரகேசரி – இலங்கையின் பழம்பெருஞ் செய்தி நாளேடு. மகாகவி பாரதியார் தனது உரைநடை வாரிசு என்று பாராட்டிய வ.ரா முதலானோரை ஆரம்பகால ஆசிரியன்மாரில் ஒருவராகக் கொண்ட சிறப்பை உடையது. வீரகேசரி வாரவெளியீட்டில் ‘காலம் தோறும் வாழும் கம்பன்‘ என்ற தலைப்பில் ஒரு புதிய தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன். கம்பன் திருவுளப்படி தொடர் நடைபயிலும். இவ்வாரப் பத்தி – மதுரன் தமிழவேள் இலண்டனில் கம்பனைக் கண்ட கதை: — – ‘கம்பனடி காப்பாம்’ என்று எழுதிவிட்டு மனம் சிலிர்த்தபடி

வீரகேசரி வாரவெளியீட்டில் புதிய தொடர்: காலம் தோறும் வாழும் கம்பன் Read More »

இலண்டன் கம்பன் விழா: உலகம் யாவையும் உள்ளீர்க்கும் கம்பன்

ஜுலை 13, 14ம் தேதிகளில் அல்பேர்ட்டன் பள்ளி வளாகத்தில் அரங்கம் கொள்ளா மக்கள் வெள்ளத்தோடு இலண்டன் கம்பன் விழா நடைபெற்று முடிந்தது. இரு நாளும் தமிழின் பேரொளி தழைத்துத் துலங்கியது. அறிவு அறக்கட்டளை நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. ஐயா கம்பவாரிதி இ ஜெயராஜ் அவர்களால் இலண்டன் கம்பன் கழகமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, புகழ்பெற்ற பட்டிமண்டபப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார், இலங்கையில் இருந்து பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்

இலண்டன் கம்பன் விழா: உலகம் யாவையும் உள்ளீர்க்கும் கம்பன் Read More »

சொல்லும் பொருளும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 18)

சொல்லுதல் என்பது சொல்லப்படுவதன் தேய்வு.  ஆயிரம் ஆண்டு காலம் ஆழ வேரூன்றிக் கிளை பரப்பி நிற்கும் ஒன்றை ‘மரம்’ என்று அழைக்கிறேன். சிலமுறை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஒலித்து முடிந்து விடுகிறது அந்தச் சொல்.  அதன் ஆயிரம் ஆண்டு கால இருப்பையும் மாட்சியையும் அக்குறுஞ்சொல்லால் தனக்குள் அடக்கிவிட முடியுமா என்ன? ஆனாலும் அப்படியான ஒரு பாவனையோடு – உரிமை கோரலோடு தான் – மரம் என்று சொல்கிறேன். மரம் என்ற சொல்லால் அதன் பேரிருப்பைக் குறிக்க முடியாது. அதற்கு

சொல்லும் பொருளும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 18) Read More »

மரணம் பற்றி

கூட்டை விடுத்ததுகாண் – உயிர்க்குருவி பறந்தது காண்பூட்டை உடைத்தெறியப் – பொன்புதையல் கிடைத்தது காண் ஊட்டி வளர்த்தவுடல் – பூதம்ஒன்றிச் சமைத்தவுடல்காட்டில் எரியுதுகாண் – இந்தக்காயம் மறைந்தது காண் சிதையில் கிடத்திவைத்த – என்றன்தேகம் தனைநினைந்தேன்கதையாய்ப்பின் கற்பனையாய் – வளர்த்தகனாக்கள் தமைவியந்தேன்! காலனைப் போலநிதம் – நண்பால்கனிந்து தொடர்வதற்கேஏலுமோ இங்கெவர்க்கும் – சோரான்என்றைக்கும் காத்திருப்பான் பொய்யைக் களைந்தொழிமின் – உயர்போதந் தெளிந்துநின்மின்நைய உருக்குங்கொல்லன் – புதுநாளில் பல சமைப்பான்! – மதுரன் தமிழவேள்

மரணம் பற்றி Read More »

ஆங்கிலம் – தமிழ்: ஒலிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள்

கேள்வி: ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது இலங்கையில் ஒரு வகையாகவும் தமிழகத்தில் வேறொரு முறையிலும் எழுதுகிறார்களே! எடுத்துக்காட்டாக: Doctor என்பதை இலங்கையில் டொக்டர் என்று எழுதுகிறார்கள். தமிழகத்தில் டாக்டர் என்று எழுதுகிறார்கள். Do எப்படி ‘டா’ ஆக முடியும்? டொக்டர் என்று எழுதுவது தானே சரி? விடை: நாம் கற்ற ஆங்கில ஒலிப்பை வைத்து, நாம் ஒலிபெயர்க்கும் முறையே சரியானது என்று நம்புகிறோம். ஆனால் மேலை நாட்டவர் பேசும் ஆங்கிலத்தைத் தமிழில் அப்படியே ஒலிபெயர்க்க முடியாது என்பதே

ஆங்கிலம் – தமிழ்: ஒலிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் Read More »

ழகரப் பாட்டு

(திருஞானசம்பந்தரின் வழிமொழித் திருப்பதிகத்தில் வரும் ‘ஒழுகலரி’ சந்தத்தை ஒட்டியது) – மெழுகின்அழல் ஒழுகல்என விழிகள்அழ வழிகள்எழ இழையும் மனமே குழலின்சடை தழலின்கரம் சுழலநடம் பழகுபவன் கழல்கள் தொழுமே குழகன்சொலும் அழகுமொழி ஒழுகும்அரன் பொழியும்நகை நினைவில் வரவே குழையும்நிலை விழையும்அகம் உழல்வதிலை பழையவினை ஒழியும் இனியே – மதுரன் தமிழவேள் – ஞானசம்பந்தர் தேவாரம்: ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப் பழுதிலிறை யெழுதுமொழி

ழகரப் பாட்டு Read More »

தமிழ் வீரம்

தமிழ்ப்போர்: சந்தப்பாட்டு (‘பெருக்கச்சஞ் சலித்து’ திருப்புகழ்ச்சந்தம்)

(படம்: AI உருவாக்கம்) * தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் தனத்தத்தம் – தனதானா * * இந்தச் சந்தப்பாடலை ஒலி வடிவில் கேட்க: இங்கே செல்க * தளிர்க்கட்டுஞ் செழிக்கட்டுந் தமிழ்க்கொற்றந் தழைக்கட்டுஞ் சமர்க்கொட்டந் தெறிக்கட்டும் பணியாதே * * சறுக்குற்றுந் தடுக்குற்றுந் தலைக்கச்சம் பிணிப்புற்றுந் தமர்ப்பக்கங் கெடக்கெட்டும் பதறாதே * * திளைப்புற்றுந் திறப்புற்றுந் திரட்டிச்செம் படைக்குத்தொன் திறத்தைத்தந் தெழக்கற்றுந் திகழ்வாயே * * சிறப்பிற்றென் புலத்துச்செந் தமிழ்க்குப்பின் திகைத்துத்தஞ் சிரத்தைக்கொண் டழற்றித்துன்

தமிழ்ப்போர்: சந்தப்பாட்டு (‘பெருக்கச்சஞ் சலித்து’ திருப்புகழ்ச்சந்தம்) Read More »

காணலாம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 17)

மனித நம்பிக்கைகள் புலன்வழித் துய்ப்பில் இருந்து தோற்றம் பெறுகின்றன. கீழைத்திசையில் பரிதி உதிப்பதை ஒவ்வொரு நாளும் இரு விழிகளாற் காண்கிறோம். ஒரு நாளேனும் ஞாயிறு உதிக்கத் தவறியதாய் உலகில் இதுவரை செய்தி வந்ததில்லை.  நாள் தோறும் கீழ்த்திசையில் ஞாயிறு தோன்றும்; நாளையும் ஞாயிறு தோன்றும் என்ற நம்பிக்கை உருவாகிறது. நீண்ட காலத் தரவுகளின் வழி இந்த நம்பிக்கை நிறுவப்பெற்று நிலை பெறும்போது அது அறிவாக மாறுகிறது. இத்தகைய அறிவை empirical knowledge என்பர் மேலை மெய்யியலாளர்.  புலன்வழித்

காணலாம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 17) Read More »

தமிழும் நானும்: நிகழ்வுக்கு வருக

தமிழ்க்காப்புக்கழகம் நடத்தும் இணைய வழி நிகழ்வில் “தமிழும் நானும்” என்னும் தலைப்பில் வரும் ஞாயிறன்று உரையாற்றுகிறேன். நல்லறிஞர் வேறு பலரது உரைகளும் இடம்பெறவுள்ளன. அனைவரும் வருக! == தமிழே விழி! தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம் இணைய அரங்கம் கூட்ட எண்

தமிழும் நானும்: நிகழ்வுக்கு வருக Read More »

ஆங்கிலத்தை அழிவிலிருந்து காப்போம்: தமிழரிடம் இருந்து மீட்போம்!

தமிழர் இருவர் உரையாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் மற்றவரிடத்தில் சொன்னார்: “Friday morning gym போய்ட்டு straightஆ work போறேன்” அசுணமாப்பறவையின் காதுகளில் பறை இசை ஒலித்தாற்போல இருந்தது எனக்கு. மாட்சிமை பொருந்திய மகாராணியின் ஆங்கில மொழிக்குத் தமிழர்கள் இழைத்துவரும் பெருந்தீங்கு பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நான்கு ஆங்கிலச்சொல்; நடுவில் ஒரு தமிழ்ச்சொல். ஆங்கிலத்துக்கு நடுவே இப்படித் தமிழைக் கலந்து பேசி ஆங்கிலத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் தமிழர்கள். எத்துணை நன்றி கெட்ட செயல் இது! இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்

ஆங்கிலத்தை அழிவிலிருந்து காப்போம்: தமிழரிடம் இருந்து மீட்போம்! Read More »

கனைக்கடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 16)

இறைவன் பெயரை ஓதுவதால் மட்டும் என்ன கண்டு விட முடியும் என்று ஐய வயப்பட்டவர் போலப் பொய்யாகக் கவன்றார் போன பாடலில்.  உண்மையில் உள்ளம் ஒருமித்து இறைவன் திருப்பெயரைச் சொல்லிக்கொண்டிருப்பதால் அடையக்கூடியது எது என்பதை இப்பாடலில் சொல்கிறார் அம்மை. இரைச்சல் மிகுந்து ஓயாதிருக்கும் கடலினைப்போல, எண்ணப்பெருக்கத்தால் அமைதியற்றிருப்பது மனம். பிறவித்தொடரை இதுவே நீளச் செய்கிறது. எண்ணப் பெருக்கம் ஒழித்து ஒருமையுற, இடையறாமல் இறை நாமம் ஓதுவது சிறந்த வழி. இவ்வழியை முறையாகக் கைக்கொண்டால் கிட்டுவது என்ன? இறைவன்

கனைக்கடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 16) Read More »

பனிநிலங்களில் தமிழ் வயல் உழுதல்: மேலை நாடுகளில் தமிழ்க்கல்வி

இங்கே இங்கிலாந்திலே இணையவழியில் என்னிடம் தமிழ் படிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயார் நேற்று வகுப்பு முடிந்த பின் அனுப்பி வைத்த புலனச் செய்தி படத்திலே உள்ளது. பிள்ளைகள் மட்டுமல்ல; அவ்வம்மையாரும் இங்கே பிறந்து வளர்ந்தவர் தான். தமிழரென்றபோதும் தமிழ் பேச வராது. “மற்றுமோர் அருமையான பாடம். நன்றி. பதினெட்டு வயதில் இருந்து தமிழ் பேச முயன்று வருகிறேன்.. … முதன்முறையாக நம்பிக்கை வந்திருக்கிறது” என்பது ஆங்கிலத்தில் அவர் அனுப்பி வைத்த செய்தியின் சாரம். பாடங்கள் நடக்கும்போது கூட

பனிநிலங்களில் தமிழ் வயல் உழுதல்: மேலை நாடுகளில் தமிழ்க்கல்வி Read More »

மின் செய் வான் செஞ்சடை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 15)

பொந்திகை அற்றிருப்பது (மன நிறைவு அற்றிருப்பது) நல்லதா? தாழ் உணர்ச்சி மேவும் மனம் கொண்டு ‘எனக்கு அது கிட்டவில்லையே! இது கிடைக்கவில்லையே’ என்று தாவித் தாவி அங்கலாய்ப்பதும் மாய்வதும் துன்பத்தையே தரும். ஆனால் உயர்ந்த இலக்குகளின் பாலான வேட்கை – பொந்திகை இன்மை (மன நிறைவு இன்மை) – விரும்பத் தக்கது. ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பார் பாரதி. Divine discontent என்ற தொடரைப் பயன்படுத்துவார் ஆங்கிலேய அறிஞர் பேர்னார்ட் ஷா.  மேலானவற்றை அவாவும் மனத்தின் உணர்வே

மின் செய் வான் செஞ்சடை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 15) Read More »

நெஞ்சமும் நஞ்சமும் – அற்புதத் திருவந்தாதி (பாடல் 14)

தீயைப்போன்ற கொடிய நஞ்சை உமிழும் நாகத்தை ஏன் சிவனார் தன் கழுத்தில் அணிந்திருக்கிறார்? நஞ்சை உமிழ்வது நாகத்தின் இயல்பு. அது சிவனாரிடத்து வயப்பட்டு இருக்கும்வரையில்தான் தனது கொடுங்குணம் விடுத்து அமைதி பேணும். நஞ்சுமிழும் நாகத்தை ஒத்ததே நம் நெஞ்சமும். தீயெண்ணங்களால் தகித்துக்கொண்டிருப்பது.  இத்தகைய எண்ணக் கெடுதியும் கெடுதியை அறிந்துணர இயலாதபடி திரையாக இருந்தியங்கும் மாயையும் எதனால் உருவாகின்றன? எங்கிருந்து வருகின்றன? புலன்களால் உணரப்படும் இந்த உலகம் எல்லாக் காலமும் மாறிக்கொண்டிருப்பது. வெளியுலகில் மாற்றம் நிகழும் வேகத்துக்கு ஈடுகொடுத்து

நெஞ்சமும் நஞ்சமும் – அற்புதத் திருவந்தாதி (பாடல் 14) Read More »

நீர்மை

குகை முகட்டில் அருட்டும் நிழல், புத்தனின் பேருரு அசைகிறது இருளில் ஈர மண்ணில் ஞானப் பதியம் x கடலெனப் பெருகும் முடிவறு மனதில் உணர்வு விழிக்கிறது – உளது ஒன்றா பலவா நானா நாமா x சருகு வீழும், காலம் மாறும் நிலையாமை அறியுமா இயற்கை? வாழ்வெனும் சுழியம் மெல்ல நகும் x மழை ஓய்ந்த பின் பேரமைதி தன்னை அறியும் தவத்தில் உள்ளதோ இயற்கை? உயிரின் பிம்பம் உணர்த்தும் கண்ணாடி x பால்வெளியில் இறந்துவிட்ட உடுச்சுடரின்

நீர்மை Read More »

நகையாடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 13)

முதலில் ஐயன் அருள் கிட்டுமோ என்று ஐயுற்றுக் கலங்கினார். பிறகு அவ்வுணர்வினின்று  வெளியேறி எது நடந்தாலும் அவனுக்கே ஆளாவோம் என்று உறுதிபட உரைத்தார். மருளும் எண்ணம் விடுத்து ஒன்றை நினைத்திருத்தலே பிரானை அடைவதற்கான வழி; அவனாகவே ஆவதற்கான வழியும் அதுவே என்று தெளிந்தார். பரவு நீர் இறுகித் திரண்டு படிகமாவது போல அன்பின் படி நிலைகள் கெட்டித்தன அம்மை அகத்தில். ஈறின்றி இணக்கமுற்ற பிறகு அடுத்து மலரும் அன்பின் வண்ணம் குறும்பும் பிணக்கமும் அன்றோ! பெம்மானுக்கே ஆளாவோம்

நகையாடல்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 13) Read More »

மாணவர் ஒருவரிடம் இருந்து வந்த வாழ்த்து மடல்

நான் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவன். தமிழ் என்னும் ஒலியாலான உயர் ஆற்றலுக்கு என்னைக் கருவியாக ஈந்து விட்டவன். அருளிக் காக்கும் பொறுப்பை அன்னையிடத்தில் விட்டு விட்டவன். என்னை நோக்கி வரலாகும் வாழ்த்தும் வசவும் அவளைச் சார்ந்தனவே. எனது குறையும் நிறையும் அவள் அளித்த ஆற்றலின் மட்டே. என்னிடம் பயிலும் மாணவர் ஒருவர் குறுமடல் ஒன்று வரைந்தனுப்பியிருக்கிறார். அவ்வம்மையார் சிவகங்கையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஆங்கண் குறிப்பிடப்படும் கட்டுரையை மேலும் பலர் படித்துப்பார்க்க அவரது சொற்கள் தூண்டும் என்ற நோக்கில் இங்கே

மாணவர் ஒருவரிடம் இருந்து வந்த வாழ்த்து மடல் Read More »

பிரான் ஆகும் வழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 12)

பனி வீழும் இமயத்தில் பரமன் வீற்றிருக்கிறான். அவன் கழுத்தில் சூடியிருப்பது கொன்றைமலர் மாலை அன்றோ? பனிக்கு வாடும் தன்மையன ஆயிற்றே அம்மலர்கள்!  ஒளிபொருந்திய அவன் நெற்றியிலே மூன்றாவதாக ஒரு தனிக்கண் இருக்கிறது. எத்துணை விந்தையும் ஒண்மையும் பொருந்தியது அவன் தோற்றம்! அத்தகைய பெம்மானின் தகைமை என்னவென்று சொல்கிறேன், கேளுங்கள் என்கிறார் காரைக்கால் அம்மை. அதுவே பிரான் ஆம் ஆறு – ஒன்றே நினைந்திருந்து ஒன்றே துணிந்து ஒழிந்து ஒன்றே உள்ளத்தினுள் அடைக்கும் அம்முறையே (போன பாடலிற் சொல்லப்பட்டது)

பிரான் ஆகும் வழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 12) Read More »

ஒருமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 11)

எந்த இலக்கை அடைவதற்கும் எண்ணம் ஒருமுகப்பட வேண்டியது இன்றி அமையாதது. எண்ணத்தை ஒருமுகப்படுத்துவது முதற்படி.  அந்த ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் குறுக்கிடும் வேற்று எண்ணங்களை விலக்குவது அடுத்தபடி.  உமி நீக்கப்பெற்ற அரிசி போல இலக்கின்பால் ஒருமை எண்ணம் வாய்த்த பிறகு அந்த எண்ணத்தைச் சிதறாதபடி காத்து, இலக்கை நோக்கிச் செயலாற்றுவது மூன்றாம் படி. எல்லோர்க்கும் எளிதில் கூடி வருபவை அல்ல இவை; துணிவையும் முயற்சியையும் கோரி நிற்பவை. குலைவும் குழப்பமும் களைந்து ஒருமை நோக்கி ஓடும் பெருக்காகவே

ஒருமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 11) Read More »

ஊக்கம்: புதுச்சொல் புனைதல் குறித்த சில சிந்தனைகள்

Motivation என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் எது? ஊக்கம்! செயலூக்கம், சிந்தையூக்கம் என்று புதிய முன்னடைகளிட்டு மொழிபெயர்க்கலாம் என்று முனைவர் குமாரவேல் கணேசன் என்பாரது முக நூல் பக்க உரையாடலில் இன்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. நான் இக்கருத்தில் இருந்து மாறுபடுகிறேன். மேற்சொன்ன உரையாடலில் பகிர்ந்தவற்றைக் கீழே தொகுத்திருக்கிறேன்: முனைவர் குமாரவேல் கணேசன்:Motivational speech- செயலூக்க உரை (எனக்கு இன்றுதான் இந்தச் சொல் கிடைத்தது, நன்றி) — மதுரன் தமிழவேள்:ஊக்கம் என்பதே செயலை நோக்கியதுதான்… செயல் என்ற முன்னொட்டு இன்றியே

ஊக்கம்: புதுச்சொல் புனைதல் குறித்த சில சிந்தனைகள் Read More »

தீரா வைப்பு: அற்புதத் திருவந்தாதி (பாடல் 10)

நீங்கள் சேமித்து வைத்திருக்கும் செல்வம் எவ்வளவு? உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டிருக்கும் பணத்தை எவ்வளவு நேரத்துக்கொரு முறை எண்ணிப்பார்த்துக்கொள்கிறீர்கள்? (எண்ணுதல் = counting/thinking) அருளின்பால் பற்றுறுதி கொள்ளாமல் பொருளின்பால் அன்பு பூண்டவர்க்குத் தம் வைப்பில் (சேமிப்பில்) மீந்திருக்கும் நிதியே அமைதி தருகிறது. எவ்வளவு தான் முயன்று காத்தாலும் ஒரு நாள் தீர்ந்துபோய் உள்ளத்துக்கு இடும்பை தரக்கூடியது பொருட்செல்வம். அம்மை நாடுவதோ அங்கை மேல் அழல் சுமந்த பெம்மானின் அலகில்லா அருட்செல்வம்.  இத்தகைய செல்வத்தை வைப்பாகக் கொள்வதே மதியுடைமை.

தீரா வைப்பு: அற்புதத் திருவந்தாதி (பாடல் 10) Read More »

மொழியும் இறையும் – கற்பிதங்களா அற்புதங்களா?

மனத்தின் – எண்ணத்தின் – ஒலியுருவாகத் திரண்டு நிற்கும் மொழிக்கு, எழுதப்படும் ‘எழுத்து’ என்ற வரிவடிவத்தை எக்காரணத்துக்காக மனிதன் கண்டுபிடித்தானோ அதையொத்த காரணத்துக்காகத்தான் இந்தப் பேரண்டத்தை ஆளும் எல்லையற்ற அருட்பொருளுக்கு ‘இறைவன்’ என்று பெயர் சூட்டி உருவங்களையும் உருவகங்களையும் அவன் சமைத்தான். ‘அ’ என்ற வரிவடிவம் அம்மா என்ற சொல்லின் முதல் ஒலியைக் குறிக்கிறது என்பது, ஆழத்தில், ஒருவகைக் கற்பனையே. நாம் கற்பித்த தொடர்பினைத் தாண்டி அவ்விரண்டுக்கும் இடையில் இயல்பாய் எழுந்த தொடர்பேதும் இருப்பதில்லை. ‘அம்மா’ என்ற

மொழியும் இறையும் – கற்பிதங்களா அற்புதங்களா? Read More »

அருள்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 9)

‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம்’ உரைத்ததாகக் கூறுவார் மணிவாசகப் பெருமான். அவன் தாள் வணங்குதற்கும் அதன் வழியாக மெய்ப்பொருள் உணரும் நல்லூழ் வாய்த்தற்கும் அவன் அருள் கிட்டியாக வேண்டும். அருள் ஆகும் ஆற்றைப் (வழியை) போன பாடலில் உணர்த்தினார் அம்மை. அதன் விரிவு வரும் பாடலிற் சொல்லப்படுகிறது. காணும் பொருள் யாவிலும் நீக்கமற நிறைந்திருப்பது இறையே என்பதை அவன் அருளால் உணரலாம் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. உலகெலாம் ஆள்விப்பது ஈசன் அருளே –

அருள்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 9) Read More »

அவனே யான்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 8)

‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்’ என்பார் திருமூலர். ‘காதல் சிறந்து’ சிவன் திருவடி சேர்ந்த தன்னைச் சிவமாகவே உணர்ந்து அம்மை பாடும் பாடல் அடுத்து வருவது. ஆயினேன் ஆள்வானுக்கு அன்றே – ஆள்வானாகிய சிவனுக்கு அன்றே ஆளாகினேன். (சென்ற பாடலை ஆளாயினேன் என்றே முடித்தார்) பெறற்கு அரியன் ஆயினேன் – பெறற்கரியன் – பிறவி அற்றவன் – சிவன். சிவன் மீது அன்பு பூண்டு அவன் திருவடி சார்ந்ததால் நானும் சிவனாயினேன். அவனைப்போலவே பிறவா நிலை பெற்றேன்.

அவனே யான்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 8) Read More »

திடம்பெறு மொழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 7)

ஐயம் களைந்து அறுதி நிலை எய்துவதற்கான கருவியாக – மனத்தின் மருள் நீக்கும் மாமருந்தாக – மொழி பயன்பட முடியும் என்பதை இன்றைய நவீன உளவியலும் கண்டறிந்துள்ளது. Cognitive Psychology, Behavioral Psychology, PsychotherapyNeuro-Linguistic Programming (NLP) முதலானவை auto-suggestion பற்றிப்பேசுகின்றன. நான் என்னவாக விரும்புகிறேனோ – எந்த நிலையை அடைய விரும்புகிறேனோ – அதற்கான எண்ணத்தைச் சீருற ஒழுங்கமைத்து, அவ்வாறு ஒழுங்குபட்ட எண்ணத்துக்கு மொழி வடிவம் தந்து அம்மொழித் தொடர்களைத் தொடர்ந்து மனத்துக்குப் புகட்டியபடியிருப்பது. எண்ணம்

திடம்பெறு மொழி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 7) Read More »

இருளே ஒளி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 6)

புறப்பொருளையும் புகழையும் நாடும் மனம் பகடு மிக்கவனாகவே இறைவனைக் காணும். ‘நான் வேண்டி நிற்பது இத்துணை பெரிய செல்வம், இத்துணை மாட்சியுடைய புகழ் – இவற்றை அருள வல்ல இறைவன் எவ்வளவு சீர்த்தியும் சிறப்பும் கொண்டவனாக இருப்பான்!’ என்பதவர் எண்ணம். கண் காணாத வான வெளியில் உறைபவனாகவே அத்தகையோரால் இறைவன் கருதப்படுவான். இன்ப வளங்கள் நிறைந்த இந்திரர் உலகத்து அரசனாக எண்ணப்படுவான். ஆனால் ஞானத்தை வேண்டுவோர்க்குத் தம் மனமே அவனுறையும் கோவில். அக உலகே அவன் ஆளும்

இருளே ஒளி: அற்புதத் திருவந்தாதி (பாடல் 6) Read More »

தோற்றமும் இறக்கமும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 5)

அந்தம் – ஆதி: இவை ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்குமாப்போல் தோன்றுபவை. மொழியென்னும் முடிவறு உணர்வுச் சுழியத்தில் இவை இரண்டும் ஒன்றே. ஒன்று இன்னொன்றின் பிறழ்தோற்றம் – தொடக்கம் போல் தோன்றுவது முடிவாக இருக்கும். முடிவெனக் கருதப்பட்டது தொடக்கமாக இருக்கும். மொழி எந்தப் பேரண்டத்தின் புலன்வழித் துய்ப்பைச் சொல்லுவதற்கான கருவியாக உள்ளதோ அவ்வண்டமும் இத்தகையதே. ஒரு பாடலில் முறையிட்டு மருளும் மனமாக இருந்து பேசும் காரைக்கால் அம்மை, அந்தாதியின் அடுத்த பாடலில் மறுமுனை தாவி மருளறுந்த தெளிமனத்துடன்

தோற்றமும் இறக்கமும்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 5) Read More »

கவிஞர் சேரனின் காஞ்சி: இலண்டன் அறிமுக நிகழ்வு

நம் காலத்தின் பாடுகளையும் பீடுகளையும் பாடும் பெருங்கவி சேரனின் புதிய தொகுப்பு ‘ காஞ்சி ‘ இலண்டனில் அறிமுகமாகிறது. ஈஸ்ட் ஹாம் புத்தகக் கண்காட்சியின் முதனிகழ்வாக மார்ச் 1 அன்று நடைபெறுகிறது. நிகழ்வை வழி நடத்துகிறேன் – சேரன் அவர்களது உயிருறு சொற்கள் பற்றி உரையாற்றவிருக்கிறேன். இயன்றோர் யாவரும் வருக!

கவிஞர் சேரனின் காஞ்சி: இலண்டன் அறிமுக நிகழ்வு Read More »

வினை, பெயர், வேற்றுமை – சிறு விளக்கம்

புலனக்குழுமம் ஒன்றில் ஒருவர் கேட்ட கேள்விக்கு விடையாக விரைந்தெழுதிய விளக்கக் குறிப்பு – கேள்வி: வெற்றி என்பது எவ்வகைச்சொல்? பதில்: வெற்றி என்பது பெயர்ச்சொல். ‘வெல்’ என்ற வினையை அடியாகக் கொண்டு பிறப்பது. ஆதலால் இது தொழிற்பெயர். இச்சொல்லினைக் காட்டாகக்கொண்டு பெயர்ச்சொல், வினைச்சொல் முதலானவற்றை விளங்கிக்கொள்ள முயல்வோம். வெற்றி’யை‘ அடைய முடியும். இங்கே வெற்றி என்ற பெயர்ச்சொல்லின் இறுதியில் ‘ஐ‘ என்ற உருபு ஒட்டி நின்று அப்பெயரின் பொருளை வேறுபடுத்துகின்றது. அதன் காரணத்தால் ‘ஐ’ வேற்றுமை உருபு

வினை, பெயர், வேற்றுமை – சிறு விளக்கம் Read More »

கேள் ஆகாமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 4)

மூன்றாம் பாடல் படிக்க (பாகாப்போழ்): இங்கே செல்க மனக்கடலின் அலைகள் தாழ்ந்தும் உயர்ந்தும் தடம் புரள்வன. நான்காம் பாடலில் அம்மையின் மனம் மீண்டும் முறையிடத் தொடங்குகிறது. எரியாடும் எம்மானாரான சிவபிரான் மேனி சிவந்திருக்கிறது. அச்செவ்வண்ண மேனியில் அவரது நஞ்சுண்ட கண்டம் மட்டும் கரு நீல நிறத்ததாய் இருக்கிறது. நீள் ஆகம் செம்மையான் ஆகி – நீண்ட உடலில் செந்நிறம் கொண்டவன் ஆகி (ஆகம் = மேனி, உடல்) திருமிடறு மற்றொன்று ஆம் – திருவுடைய கண்டம் மட்டும்

கேள் ஆகாமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 4) Read More »

‘வெற்றிக்கழகம்’: தொகைச்சொல்லை எவ்வாறு எழுத வேண்டும்?

தொடர்புடைய முன்னைய பதிவைப் படிக்க: இங்கே செல்க ‘வெற்றிக்கழகம்’ பெயரில் இருந்த ஒற்றுப்பிழை சரி செய்யப்பட்டுள்ளதை வரவேற்று முகநூலில் எழுதிய பதிவின் கீழ் இன்று ஒருவர் கேட்ட்டார்: வெற்றிக் கழகம் என்பதை ‘வெற்றிக்கழகம்’ என்று சேர்த்து எழுத வேண்டுமா? நான் கீழ்க்கண்டவாறு விடையிறுத்தியிருந்தேன்: இது தொடர்பாக வேறுபட்ட பார்வைகள் உள்ளன. தமிழ் முதன்மையாக ஒலிப்பில் கவனம் செலுத்தும் மொழி. ஒலிக்கும் தமிழ் செவிப்புலனுக்கானது. எழுதப்படும் தமிழ் கட்புலன் வழி மனம் புகுவது. எழுதப்படும்போது எங்கே இடைவெளி விடவேண்டும்

‘வெற்றிக்கழகம்’: தொகைச்சொல்லை எவ்வாறு எழுத வேண்டும்? Read More »

பாகாப்போழ்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 3)

இரண்டாம் பாடல் படிக்க: இங்கே செல்க சிவனவன் சடைமுடி கொடிபோலத் திரண்டிருக்கிறது. அதன் மீதிருக்கும் பிறை நிலவு ஒரு கீறல் துண்டமாகத் தெரிகிறது. பிறையாகச் சிறுத்திருக்கும் நிலவு பிறகொரு நாள் வளர்வதையும் கண்டிருக்கிறோம். சிவன் சடைமுடியில் இருக்கும் அப்பிறையைப் பகாப்போழ் என்கிறார் காரைக்கால் அம்மை.. பகா – பகுக்கப்படாத போழ் – துண்டம் இப்போது தெரியும் நிலாக்கீறல் – பிறை நிலவு – முழுமதியில் இருந்து பகுத்துப் பிரிக்கப்பட்டுவிட்ட துண்டமா? இல்லை. முழுமதி ஒளிபொருதச் சுழலும் கோளம். இப்போது

பாகாப்போழ்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 3) Read More »

காக்கும் தமிழ்

எச்செயல் முயன்றாலும் தண்ணார் தமிழணங்கின் தாள் மலர்களைத் தலைமிசைச் சூடிப் பணிந்து தொடங்குவது என் வழக்கம். காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதிச் சொற்களைத் தேனிக்கத் (தியானித்தல் = தேனித்தல், மணிவாசகர் சொல்) தொடங்கியிருக்கிறேன். தமிழே காக்கும் என்று உறுதி கூறி இன்று காலை நெஞ்சில் எழுந்த வெண்பா – காப்புச்செய்யுள்: —- ஆரைக்கா என்றாலும் ஐயாகி ஆர்ந்தருளும்!காரைக்கால் அம்மை கனிந்தளித்த – சீரைக்காஅந்தாதிச் செம்பொருளை ஆய்தற்கு மெய்யறிவுதந்தோதிக் காக்கும் தமிழ் —– பொருள்: ஆரைக்கா என்றாலும்: யாரைக்

காக்கும் தமிழ் Read More »

எரியாடும் எம்மானார்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 2)

முதலாம் பாடல் படிக்க: இங்கே செல்க ஈசன் என்பதால் ஏத்தித் தொழுது பணிவதா? அன்பன் என்ற உரிமையில் அவன் பாராமுகத்தைக் கடிந்து நோவதா? காரைக்கால் அம்மையிடத்தில் இந்த நடுக்கம் தெரிகிறது. இதற்கேற்பவே இரண்டாம் பாடலில் அவர் மொழியும் குழறுகிறது. எப்போது இடர் தீர்ப்பாய் என்று இறைவனிடம் முதற்பாடலில் முறையிட்டார். ஆனால் இவன் இதற்குச் செவி சாயான் என்ற எண்ணமும் இடையிடையே தலை காட்டுகிறது. ஈசனின் இணையடி எய்தும் நோன்பில் ஒருமுகமாகச் செல்ல வேண்டிய எண்ணம் பல திசைகளிலும்

எரியாடும் எம்மானார்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 2) Read More »

மைஞ்ஞான்ற கண்டம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 1)

தத்தளிப்பு கடந்த சில நாள்களாகக் காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதி படித்துக்கொண்டிருக்கிறேன். அன்பின் தவிப்பை அம்மையைப் போலவும் ஆண்டாள் நாச்சியாரைப் போலவும் உன்மத்தமாகச் சொன்ன வேறு கவிகள் உளரா என்று தெரியவில்லை. ‘மைஞ்ஞான்ற கண்டம்’ என்கிறார் அம்மை. அற்புதத் திருவந்தாதியின் முதற்பாடலில் ‘நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே’ என்று சிவனை விளிக்கிறார். ஞாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். அண்டவெளியில் அந்தரித்துத் தொங்கிக்கொண்டிருப்பதால் இந்த உலகுக்கு ஞாலம் என்று பெயர். அந்த ஞாலத்தின் சுழற்சியால் ஞால்

மைஞ்ஞான்ற கண்டம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 1) Read More »

இருப்பது இருளா? ஒளியா?

இருள்மேல் ஒளி படர்தலால்தெரிவதோ –ஒளி தொடாது விட்ட இடங்களில்இருள் கவிவதால் வெளிப்பதோ –இக்காட்சி? இருப்பதுஇருளா?ஒளியா? வெளியின் இடையில் பொருள் தோற்றினாளோகாளிஇல்லை,பொருளின் சதை பிதுக்கி வீசி வெளி சமைத்தாளோ? இருப்பதுபொருளா?வெளியா? பாறை கொண்டு யானையின் சிலை வடித்தானோ?இல்லையானையை மறைத்த பாறையின் துகள் களைந்தானோ? இருப்பதுபாறையா?யானையா? – மதுரன் தமிழவேள்14.02.2024 By the spread of light over darkness,Is it revealed?In places untouched by lightWhere darkness weaves its presence, is it unveiled?This scene?

இருப்பது இருளா? ஒளியா? Read More »

வெற்றிக்கழகம்: ஒற்றுப்பிழை தவிர்த்தல்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவரது கட்சிப்பெயர், அத்தொடர்பில் வெளியாகியிருக்கும் அறிக்கை ஆகியன குறித்து அண்மையில் முகநூலில் எழுதிய மூன்று பதிவுகள்: முதலாம் பதிவு: ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘ என்ற வள்ளுவ நெறியை வழிகாட்டும் தொடராக விஜய் அறிவித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. அதே நேரம், எழுத்துத் தமிழின் அடிப்படை தெரிந்த ஒருவரை ஊடகப் பரப்புரைக்கு அவர் வைத்துக்கொள்வது நலம். கட்சியின் பெயரில் தொடங்கி (வெற்றி’க்’ கழகம்), அறிக்கை எங்கணும் வரவேண்டிய இடங்களில் வல்லின ஒற்று விடுபட்டுள்ளது.

வெற்றிக்கழகம்: ஒற்றுப்பிழை தவிர்த்தல் Read More »

காணொளியா? காணொலியா?

வினைத்தொகை: காலங்கலத்தல், காலங்கடத்தல், காலங்கரத்தல் – தமிழின் இலக்கணமும் மெய்யியலும் – சில சிந்தனைகள் — (முகநூலில் எழுதியவற்றின் தொகுப்பு) 1. வீடியோ (video) என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் எது? காணொளியா? காணொலியா? காணொளி என்பதே சரி. காணொலி என்று எழுதற்க. காண் ஒளி – வினைத்தொகை. முக்காலமும் உணர்த்தும் / காலத்தை மறைக்கும். (கண்ட, காண்கின்ற, காணும் ஒளி). இக்காரணம் பற்றி வினைத்தொகையைக் காலங்கரந்த பெயரெச்சம் என்றும் இலக்கணிகள் சொல்வர். கரத்தல் – மறைத்தல். அழிபசி

காணொளியா? காணொலியா? Read More »

அஞ்சலி: காலங் கவர்ந்த செந்நெறியாளர்

எனது தாய்மாமனும் கம்யூனிச இயக்கச் செயற்பாட்டாளராக இருந்தவரும் சிந்தனையாளருமான குணேந்திரதாசன் கந்தையா (தொல்புரம், கந்தர்மடம், இடைக்காடு) காலமானார். இறந்தபோது அவருக்கு 77 வயது. அரசியலில் முனைப்புடன் ஈடுபட்ட அக்காலத்தைய இளைஞர்களில் பலரைப் போலவே தனது வாழ்வின் இளமைக்காலத்தைச் சமூகப்பணிக்காகத் தந்திருந்தவர் சின்ன மாமா. சோஷலிசக் கற்கைக்காகக் கட்சியால் தெரிவு செய்யப்பட்டு எழுபதுகளில் (24ம் அகவையில்) சோவியத் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டவர். மாஸ்கோ, லெனின் கிராட், ஜார்ஜியாவில் உள்ள காக்ரா, சைபீரியாவில் உள்ள நொவோசிபேர்ஸ்க் என்று பல இடங்களுக்கும் சென்று

அஞ்சலி: காலங் கவர்ந்த செந்நெறியாளர் Read More »

கூண்டுக்கிளி

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை

காகாவென் றேகரையும் காக்கைக்குத் துன்பில்லைவாகாஞ்சொல் பேசும் மடக்கிளியோ – நாகாவாக்குற்றத்தால் கூண்டடையும்! கூர்மதியால் ஓர்ந்தாய்ந்தேஉற்றுத்தேர் இஃதே உலகு – மதுரன் தமிழவேள் கவிஞர் சூழ் புலனக் குழுமமொன்றில் நாசாவில் பணிபுரியும் தமிழ்வல்ல நல்லறிஞர் முனைவர் நா. கணேசனார் மேலேயுள்ள படம் தந்து வெண்பா எழுத வேண்டினார். அப்போது யாத்த வெண்பா இது. முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் எழுதிய வெண்பாவுக்கும் (கீழே உள்ளது) என்னதுக்குமான மறுமொழியாக “இந்தியாவில் நிகழ்ந்த மொழியியற் புரட்சியின் சூக்குமம் சொல்லியுள்ளீர்கள். இரு செம்மொழி

வெண்பா: கூண்டில் உழலும் கிள்ளை, வேண்டும் இடமெலாம் திரியும் காக்கை Read More »

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை

அமிதசாகரர் 11ம் நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்பெறும் யாப்பிலக்கண நூல் ‘யாப்பருங்கலக்காரிகை’. தமிழ் யாப்பின் தலையாய நூல்களுள் ஒன்று இது. இந்த நூல் அடங்கிய சிதைவுண்ட ஏட்டுச்சுவடியின் (1800-1850 காலப்பகுதிக்குரியது) எண்ணிமப்படியை பிரித்தானிய நூலக வலைத்தளத்தில் இன்று கண்டேன். யாழ்ப்பாணம், கோண்டாவிலில் இருந்து மீட்கப்பட்ட ஏட்டுச்சுவடியை நூலக நிறுவனம் (noolaham.org) எண்ணிமப்படுத்தியிருக்கிறது (Digitization). அழியும் ஆபத்துள்ள பனுவல்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய நூலகத்தின் பெருந்திட்டத்தின் கீழ் 1500க்கும் மேற்பட்ட தமிழ் ஏட்டுச்சுவடிகள் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இசுபானியம் (Spanish), ஆங்கிலம் (English),

அழியும் நிலையிலுள்ள பனுவல்கள் – இலண்டன் பிரித்தானிய நூலகத்தில் யாப்பருங்கலக்காரிகை Read More »

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள்

(உரையாடற் பின்னணி: ஆங்கிலப் பெருங்கவிஞன் ஷெல்லியின் To a Skylark என்ற கவிதையை அண்மையில் இமயவரம்பன் (இரா. ஆனந்த்) அழகுறத் தமிழ்ப்படுத்தியிருந்தார். ஆற்றொழுக்குப் பிசகாத அகவற்பாவாக (அகவற்பா = ஆசிரியப்பா) அத்தமிழாக்கம் அமைந்திருந்தது.  இப்பாடலில் வெண்டளை மிகையாக வருவதன் பொருத்தப்பாடு குறித்து முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் புலனக் குழுமம் ஒன்றில் உரையாடலைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து மரபின் மைந்தன் திரு முத்தையா, முனைவர் நா கணேசன் ஆகியோரும் வெவ்வேறு கோணங்களை முன்வைத்தனர். எனது தரப்பாக முன்வைத்த

ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள் Read More »

ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்)

பாரதியின் மனம் கவர்ந்த மகாகவிஞன் ஷெல்லி. ஆங்கிலத்தில் ஷெல்லி இயற்றிய ‘To a Skylark’ என்னும் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு டாக்டர். கணேசன் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க நான் எழுத முயன்ற மொழிபெயர்ப்பை இங்கே அளிக்க விரும்புகிறேன். இமயவரம்பன் (இரா. ஆனந்த்) English Original : https://www.poetryfoundation.org/poems/45146/to-a-skylark ஒரு வானம்பாடிக்கு – தமிழ் மொழிபெயர்ப்பு (நிலைமண்டில ஆசிரியப்பா) 1. கட்டிலாக் களிப்பின் உயிர்ப்பே வாழி! பறவையென் றுன்னைப் பகர்தற் கரியாய்!

ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்) Read More »

தேங்காயும் சிவனும் ஒன்று

மூன்று கண், உச்சிக் குடுமி, நீர் ஓடு இறையியல்பு இவை இருப்பதால் தேங்காயும் சிவனும் ஒன்று என்று காளமேகப் புலவர் பாணியில் நேற்று ஒரு வெண்பா எழுதியிருந்தேன். தொகாப்பியர் பேரவைப் புலவர் காளியப்பன் ஐயா அவர்களின் வெண்பாவைப் படித்த பிறகு ஏற்பட்ட உந்துணர்வில் – தொடையின்பம் தோன்றப் பாடலாமே என்று எண்ணி – எழுதியது (இறையியல்பு தவிர்ந்த ஏனைய ஒப்புமைகள் அவர் பாட்டிலும் வருகின்றன). இறையியல்பு – தேங்காயைக் கருதினால் சிதறும் இயல்பு. இறைதல் – சிதறுதல்.

தேங்காயும் சிவனும் ஒன்று Read More »

The buddha in the tamil land

(English translation of my latest post on FB – Madhuran Thamilavel) The newly released logo of Sri Lankan archaeology department featuring Buddhist stupa has caused agitation among Tamils on social media platforms. The essential understanding that Tamils need to establish with the Sinhalese is that the presence of Stupa in the logo does not and

The buddha in the tamil land Read More »

ஒரு சொல், ஒரு குறள்: 51-90

மூன்று நாள்களுக்கு முன் முகநூலில் விளையாட்டாக இந்தத் தொடர் உருப்பெறத் தொடங்கிய கதையையும் முதல் 50 குறள் வெண்பாக்களையும் இங்கே படிக்கலாம். செய்தியின் சுருக்கம் இதுதான்: தமிழ் ஒலிப்புள்ள சொல்லொன்று தந்தால் நான் உடனுக்குடன் குறள் வெண்பா யாத்துத் தருவேன். குறள்வெண்பா தமிழின் பழைய செய்யுள் வடிவங்களுள் ஒன்று. இரண்டு அடிகளில், ஏழு சீர்களில் வெண்டளை பிறழாமல் அமைவது. கீழே உள்ளவை 51 முதல் 90 வரையான குறட்பாக்கள். நூறு பாக்களோடு இந்தத் தொடரை நிறைவு செய்ய

ஒரு சொல், ஒரு குறள்: 51-90 Read More »

சொல் தந்தால் குறள் தருவேன்: முதல் 50 பாக்கள்

முக நூலில் நேற்று விளையாட்டாக ஒரு குறள்வெண்பாத் தொடர் தொடங்கியிருந்தேன். தமிழ் ஒலிப்புள்ள ஒரு சொல் தந்தால் – அது ஒருவருடைய பெயராகக்கூட இருக்கலாம் – உடனே ஒரு குறள் வெண்பா எழுதித் தருவேன். இது தான் நான் வெளியிட்ட அறிவிப்பு. ஒரு நாள் இடைவெளியில் 50 குறட்பாக்கள் யாக்கப் பெற்றிருக்கின்றன! பலர் தம் மக்கள் பெயரைத் தந்திருந்தனர். குழந்தைகளை வாழ்த்தி ஆசியளிப்பதை விடப் பேரின்பம் வேறேது? எனவே இவற்றில் உள்ளவை பலவும் வாழ்த்துப் பாக்களே! பொருளில்லாமல்

சொல் தந்தால் குறள் தருவேன்: முதல் 50 பாக்கள் Read More »

வலைக்கண்ணில் குதறலாகத் தெரியும் தமிழ் எழுத்துகளைச் சரி செய்வது எப்படி ?

மேற்கோள் காட்டுகையில் / சமூக வலைத்தளங்களில் பகிர்கையில், குளறுபடியாக, வலைக்கண் URL மாறிவிடுகிறது. உதாரணமாக, https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/​என்னும் பதிவு https://madhuramoli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/ என மாறும். குதறிவிடும் எழுத்துகளின் பெயர் இது தான்: https://en.wikipedia.org/wiki/Numeric_character_reference இக் குதறலைத் தடுக்கும் வழி:(1) வலையுலாவியில், URL மீவரியில், http:// அல்லது https:// அடுத்து வரும் எழுத்துகளை, நோட்பேடில் ஒட்டவும்.(2) பின்னர், https:// அல்லது http:// சேர்த்து விடுக.(3) இப்பொழுது, நோட்பேடில், வலையுலாவியில் என்ன பார்க்கிறீர்களோ அதுவே தெரியும். அதனை வாட்ஸப், கூகுல்குரூப், … போன்றவற்றில்

வலைக்கண்ணில் குதறலாகத் தெரியும் தமிழ் எழுத்துகளைச் சரி செய்வது எப்படி ? Read More »

கணந்தோறும் நிறம்மாறும் நினைவுப் பறவை

கார்ட்டீசிய மெய்யியலில் இருந்து பௌத்தப்பள்ளி நோக்கி – ராவணன் தர்ஷனின் ‘நினைவோ ஒரு பறவை’ கவிதைத்தொகுப்பை முன்வைத்துச் சில சிந்தனைகள் “தர்க்கத்தை மீறிய மீ உணர்வு சொல்லப்படும்போது தர்க்கத்தின் உடன் பிறப்பான ஒழுங்கு சீர்குலைந்து பிறழ்வு நேர்ந்துவிடக்கூடாது என்பது கருதி ஆதி காலத்தில் கவிதை தனக்கான வாகனமாகச் செய்யுளை ஏற்றுக்கொண்டது” நினைவுப் பறவை என்பது – நினைவை ஒரு பறவையாகச் சொல்வது – கச்சிதமான உருவகம். கடந்த காலம், எதிர்காலம் என்ற இரண்டு கோடுகளுக்கிடையில் தத்தித் தாவியபடி

கணந்தோறும் நிறம்மாறும் நினைவுப் பறவை Read More »

வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள்

எனது கவிதைகளைத் தொகுத்து நூலுருவிற் கொண்டுவரும் முயற்சியை முதன் முதலாக 2003ம் ஆண்டு தொடங்கினேன். அப்போது எனக்கு அகவை 20. திண்டுக்கல்லைச் சேர்ந்த பதிப்பகத்தார் ஒருவர் நூலை வெளிக்கொணர முன் வந்தார். எனது தந்தையாரும் உந்துதலாக இருந்தார். 16ம் அகவையில் இருந்து 20ம் அகவை வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்துத் தந்தேன். இப்போதுபோல அசுரத்தனமாக நூல்களை அச்சிட்டு வெளித்தள்ளும் வசதியும் வழக்கமும் அக்காலத்தில் இருக்கவில்லை. கவிதைகளைக் கையளித்து ஈராண்டின் பின்னர்த் தமிழகத்தில் இருந்து மெய்ப்புப் பார்ப்பதற்கான முதற்படி

வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள் Read More »

எது வள்ளலார் பூமி?

நல்லறிஞர், இடதுசாரிச் சிந்தனையாளர், தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களுடன் முக நூலில் நடந்த உரையாடல் கீழே உளது. பொதிகைச்சித்தருடனான இவ்வுரையாடலைக் கண்டு வேண்டாத முன்முடிவுகளுக்கு வர உந்தப் பெறுவோர் ” சிவைதாவும் உவேசாவும் ஆறுமுகத்து நாவல்லோனும் ‘வரலாறில்லாத் தமிழ’னெனும் வசைகிழித் திசைபடச் சங்க இலக்கிய இலக்கண உரைகள் மீட்டெடுத்திங்கே நாட்டி விட்டாரே” என்று நாவலர் திறத்தை நவின்றபடியே தனது கண்டனத்தைப் பதியும் அவர்தம் சான்றாண்மை உணர்க. வீண் உரை தவிர்த்திடுக! தோழர் வே.மு. பொதியவெற்பன்: இது இராமலிங்க பூமி!

எது வள்ளலார் பூமி? Read More »

பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல்

சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த உரையாடல்களில் கூறிவை – அகழ் ஆய்வின்றி விரைந்தெழுதித் தொகுத்தவை பழியுரை 1:  பாரதி ‘ஆரிய பூமி, ஆரிய ராணி’ என்றெல்லாம் பாடினான். எனவே அவன் தமிழருக்கு எதிரானவன். பழியுரை 2: கடலூரில் சிறைவைக்கப்பட்ட சமயம் ஆங்கிலேய ஆளுனருக்கு பாரதி எழுதிய கடிதத்தில் அவனது பார்ப்பன மேட்டிமை தெரிகிறது. மறுப்பு: குருஞான சம்பந்தர் ‘சொக்கநாத வெண்பா’ என்றொரு நூல் புனைந்துள்ளார். 94 நேரிசை வெண்பாக்கள் அதன்கண் இடம்பெற்றுள்ளன. வானுலகோர் போற்றும் தாமரைப் பாதங்களைக் கொண்டவனே

பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல் Read More »

பாரதி மீது இரு வெண்பாக்கள்

பாட்டுத் திறத்தாலே பாழாம் அடிமைகைப்பூட்டுத் திறந்த புலவன்,ஒளி – காட்டிஎனையாண்ட நாதன் இனியார் அகத்தைத்தனையாள ஏற்கும் தமிழ் காணிநிலம் கேட்ட கவிஞனுக்குப் பூவனைத்தும்பேணி ஒளிசெய்யும் பேறளித்தாய் – வாணீ!நினைத்தலை சாய்த்துப் பணிகின்றேன் நின்தாள்நினைத்தலைச் செய்கஎன் நெஞ்சு (2004) பாரதி – எட்டயபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, ஏட்டியல் புரத்துக் கலைவாணி வாணீ – விளி என்பதால் நீண்டது.. வருக்க எதுகை வாராத ஓசைக்காகக் குறுக்கிப் படித்தாலும் குறையன்று. – மதுரன் தமிழவேள்

பாரதி மீது இரு வெண்பாக்கள் Read More »

அசை யாப்பிலக்கணம்

இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம்

அஞ்சலி (13), சித்தார்த் (9) இருவரும் போன ஆண்டு கோவையில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து சென்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். ஆங்கில வழியில் கல்வி கற்பவர்கள். ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் குழந்தைகள் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்பது தமிழார்வம் மிக்க அவர்தம் தந்தையாரது பெருவிருப்பு. பேரா மயில்சாமி மோகனசுந்தரம் ஐயா அவர்கள் அறிமுகப்படுத்தியதன் பேரில் குழந்தைகள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களாக இணையம் வழியாகத் தமிழ் சொல்லித் தருகிறேன். எழுத்திலக்கண அடிப்படைகளோடு சேர்த்து யாப்பிலக்கணமும் கற்பித்து வருகிறேன்.

இளையோருக்கு யாப்பிலக்கணம்: கற்பித்தல் அனுபவம் Read More »

நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்

(இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலாக அமைந்த அறிஞர் முனைவர் நா கணேசன், மரபின் மைந்தன் திருவளர் முத்தையா ஆகிய பெரியோர்க்கு மிகு நன்றி. தொடர்புடைய செய்திகள் கட்டுரையின்கண் சொல்லப்பட்டுள்ளன) கற்றலுக்குக் கற்பித்தலே மிகச்சிறந்த வழி என்றுணர்ந்த காரணத்தால் கடந்த மூன்றாண்டுகளாக இணையம் வழியாக யாப்பிலக்கணம் கற்பித்து வருகிறேன். வழக்குரைஞர், மருத்துவர், பல்துறைப் பேராசிரியர், கல்லூரி மாணவர் என்று பலதரப்பட்டோரும் இந்த வகுப்புகளில் பங்கேற்றுப் பயின்று வருகிறார்கள். (கற்போர் கருத்து இங்கே உளது) உறுப்பியலில் குறில், நெடில், ஒற்று, அளபெடை,

நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர் Read More »

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம்

Gossip எனப்படும் வீண்பேச்சை அறவே தவிர்க்க வேண்டும் என்பதைப் பத்துக் குறள்களில் வலியுறுத்துகிறார் வள்ளுவர் (பயனில சொல்லாமை). இரண்டு குறட்பாக்கள்: நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பிற்சொற் பல்லா ரகத்து பொருள்: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். (மு.வ) நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

நயன்தாரா நிலை: திருக்குறள் விளக்கம் Read More »

போரின் புதிய முகங்கள்: வே. தொல்காப்பியன்

நேற்று இத்தளத்தில் வெளியான ‘தனிமைக்கு எதிராக எழுதுதல்‘ மொழிபெயர்ப்புப் பற்றி வந்த மின்னஞ்சல் கீழே. வே. தொல்காப்பியன் அவர்கள் எழுதியது. கூடவே தனது தளத்தில் எழுதிய பதிவொன்றையும் பகிர்ந்திருந்தார். உலக அமைதி குறித்து அக்கறை கொண்டுள்ள எல்லோரும் சிந்தையில் பதிக்க வேண்டிய முக்கியமான கருத்துகள் சிலவற்றை அதில் முன்வைத்திருந்தார். அப்பதிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன். முழுமையான பதிவைப் படிப்பதற்கான இணைப்பும் முடிவில் தரப்பட்டுள்ளது. அன்புள்ள ஐயா, வணக்கம். மொழிபெயர்ப்பு கடினமான பணி. முற்போக்கு, இடதுசாரி சிந்தனையாளர்களின்

போரின் புதிய முகங்கள்: வே. தொல்காப்பியன் Read More »

தனிமைக்கு எதிராக எழுதுதல் – எடுவார்டோ கலியானோ நேர்காணல்

1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான The Progressive இதழிலும் அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு வெளியான Louder than Bombs: Interviews from the Progressive Magazine நூலிலும் இடம்பெற்ற நேர்காணலின் தமிழ் வடிவம் ஆங்கிலம் வழி தமிழில்: மதுரன் தமிழவேள் (2013 பெப்ரவரி காலச்சுவடு இதழில் மொழிபெயர்ப்பாளரின் இயற்பெயரோடு வெளியானது) யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் போர்களைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடை கிட்டாத அதே கேள்வியை நான் எப்போதும் திரும்பத்

தனிமைக்கு எதிராக எழுதுதல் – எடுவார்டோ கலியானோ நேர்காணல் Read More »

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும்

பொறுப்புத் துறப்பு: ஆங்கில வார்த்தைகளை அள்ளித் தூவித் திரைபாடல்கள் எழுதுவதை வரவேற்பவன் அல்லன் நான். என்றாலும் அப்படியான பாடல்களே அளவு கணக்கற்று வெளியாகின்றன – அவைதாம் இளையோரை ஈர்க்கின்றன என்ற வாதத்தோடு. சரி, அப்படி ஈர்க்கப்படுபவர்களிடத்தில் அஃதை வைத்தே தமிழ் பேசலாம் என்ற நினைப்பில் முகநூலில் எழுதிய பதிவு இது: சிலம்பரசன் ‘புல்லட்டு சாங் (bullet song)’ பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பாடியிருக்கிறார். அது பற்றி வேடிக்கையான ஓர் அறிவிப்புக் காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள்

சிலம்பரசனின் புல்லட்-டுப் பாட்டும் குற்றியலுகரமும் Read More »

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு

கொஞ்சம் பழைய பிணக்குத்தான். சொற்கடலில் சுழியோடிக் கொண்டிருந்த வேளை தோன்றி மின்னித் தெறித்திருப்பது புதிய பொறியென்பதால் பகிர்கிறேன். இதன் மூலவராக இருந்த கவிஞர் மகுடேசுவரன் பெயரெச்சம் தொடர்பாக இரண்டொரு நாள்களுக்கு முன்னர் நடந்துகொண்டிருந்த முகநூல் உரையாடலில் முன்வைத்த கேள்விகளைப் பொறுக்கமாட்டாமல் என்னை நட்பு நீக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார். இங்கு முன்மொழியும் புதிய தீர்வை அவர் படிக்க மாட்டார் என்பது சோகம். பழைய பிணக்கு இதுதான்: கிளப்ஹவுஸ் (Clubhouse) செயலியின் வரவு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் வழமை

கிளம்பிட்டாய்ங்கய்யா.. கிளம்பிட்டாய்ங்க: பழைய பிணக்கு, புதிய கணக்கு Read More »

மொழிக்கல்வி: இன்றைய தேவை

வைதீக மேலாதிக்க மரபு போலப் புலவர்/பண்டிதர் மேலாதிக்க மரபு என்ற ஒன்றும் நம்மிடையே உண்டு. ஞானத்துக்கான முற்றதிகாரம் கொண்டவன் நானே – கடவுளை அடைவதற்கும் கருவறைக்குள் நுழைவதற்குமான உரித்து எனக்கு மட்டுமே உளது என்று எப்படி வைதீக மரபின் பூசாரி வாயிலை அடைத்துக்கொண்டு நிற்பாரோ, அப்படியே ‘மொழி நுணுக்கங்கள் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் உனக்கென்ன அருகதை இருக்கிறது?’ என்று கேட்டபடி தமிழ் மரபின் இலக்கணப் புலவரும் உங்களிடத்துத் தாழ்வுணர்ச்சியை உண்டு பண்ணவும் ஏளனம் செய்யவும் முனைந்து கொண்டே

மொழிக்கல்வி: இன்றைய தேவை Read More »

குற்றியல் உகரம் என்றால் என்ன?

குறில், நெடில் நமக்குத் தெரியும். அ – குறில் ஆ – நெடில் இ – குறில் ஈ – நெடில் உ – குறில் ஊ – நெடில் குறில் என்ற அளவில் உகரம் (‘உ’ என்ற எழுத்தொலி) ஏனைய குற்றெழுத்துகள் போலவே ஒரு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும். செக்கன், நிமிடம் முதலானவை போல மாத்திரை என்பதும் ஒரு நேர அலகு (unit of time). ஒரு மாத்திரை = கண்ணிமைக்கும் நொடிப்பொழுது. குறில்

குற்றியல் உகரம் என்றால் என்ன? Read More »

அருஞ்சொல்: திணைக்களம்

இலாகா/துறை/பிரிவு ஆகிய சொற்களுக்கு இணையாக இலங்கையில் ‘திணைக்களம்’ என்ற தொடர் பயன்பாட்டில் உள்ளது. இவ் அருஞ்சொல் எவ்விதம் தோன்றியது என்று பன்னாள் சிந்தித்ததுண்டு. இன்று திருக்குறள் ‘இறைமாட்சி’ அதிகாரத்தின் (பொருட்பால் – அரசியல்) குறட்பாக்களுக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய உரையைப் படித்துக்கொண்டிருக்கும்போது ‘அரசியல் திணைக்களங்கள்’ என்று அதே பொருளில் அவர் எடுத்தாண்டிருப்பதைக் கண்டேன்! இராசேந்திர சோழனின் செப்பேடுகளிலும் உள்ளமை தேடிப்பார்த்தபோது தெரிந்தது: ‘புரவுவரித் திணைக்களத்து வரிப்பொத்தக நாயகன்’

அருஞ்சொல்: திணைக்களம் Read More »

ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம்

ஆறாத அனல்சுட்ட காயம் – நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்?ஆறாத அனல்சுட்ட காயம் – நம்அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்? கந்தகம் படிந்த வெந்தணல் நதியில்கரைந்ததோ எங்களின் கனவுசந்ததம் நெஞ்சில் சஞ்சலம் விஞ்சித்தளருமோ விடியலின் நினைவு? (ஆறாத…) மானுட நீதி தாழுதல் கண்டுவையகம் விழித்துயிர் பெறுமோ?ஊனிடர் பட்டும் உளம்குலை வுற்றும்உழல்பவர் விழித் துயர் அறுமோ? (ஆறாத) பேய்க்களம் ஆடித் தீர்த்தவர் செய்த‌பிழைகளைப் பொறுக்குமோ உலகம்?ஆய்க்கினை நீள இருள்வெளி சூழ‌அரண்டிடும் நிலையென்று விலகும்? (ஆறாத) எத்தனை எத்தனை நிணப்புதை

ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம் Read More »

சின்னக் கலைவாணர் x சின்ன கலைவாணர்: எது சரி?

சின்னத்தாய் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா? கவிஞர் மகுடேசுவரனின் கட்டுரையை முன்வைத்துச் சில இலக்கணச் சிந்தனைகள் அண்மையில் தினமலர் இதழில் கவிஞர் மகுடேசுவரன் ஓர் இலக்கண விளக்கக் கட்டுரை எழுதியிருந்தார். ‘சின்னக் கலைவாணர்’ போன்ற சொற்றொடர்களில் வல்லொற்று மிகல் ஆகாது; சின்ன கலைவாணர் என்றே எழுத வேண்டும் என்பது அச் சிறுகட்டுரையின் சாரம். அதனை முகநூலிலும் பகிர்ந்திருந்தார். மறைந்த நடிகர் விவேக் பெயரில் அவர் வாழ்ந்த தெருவுக்குத் தமிழக அரசு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று

சின்னக் கலைவாணர் x சின்ன கலைவாணர்: எது சரி? Read More »

wellness, reed, relaxation-3318709.jpg

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது..

1 நிமிட வாசிப்பு இலங்கையின் தற்போதைய சூழலை முன்வைத்து: கர்மா – புத்தரின் வார்த்தையில் சொல்வதென்றால் கம்மா – என்பது நம்மில் அநேகர் நினைப்பதுபோல் ‘கெட்டது செய்தால் கெட்டது நடக்கும்’ என்பதான நேர்வழிச் சூத்திரம் அன்று. ஒவ்வொருவர் செய்யும் நற்செயலையும் தீச்செயலையும் வானத்தில் இருக்கும் ஒரு சித்திரகுப்தனார் கணக்கெடுத்து வைத்துக்கொண்டு தக்க நேரத்தில் ஆகூழையும் போகூழையும் விதிப்பதும் இல்லை. உண்மையில் நமது ஆழ்மனமே அந்தச் சித்திரகுப்தனார். தனக்குச் சாதகமான சூழலில் கொடுங்குற்றமொன்றை முழுச்சுதந்திரத்தோடு (with total immunity)

கர்மா குறித்து: அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது.. Read More »

தமிழணங்கு 

கரிய நிறத்தவள் காண் எங்கள் அன்னை – அடர் காட்டில் உலவிக் களி நடம் புரிவாள் அரிய திறத்தவள் காண் எங்கள் அன்னை – உடல் ஆவிக்(கு) அமுதென அன்பைச் சொரிவாள் ஐந்து திணைகளிற் செழித்தவள் அன்னை – தன் ஆதி மனிதர் கனவுருக் கொண்டாள் நைந்து மடிந்திடும் மொழிகளின் நடுவில் – என்றும் நலிவி லாத பெருநிலை கண்டாள் உயிரொலி ஐந்தும் மந்திரம் ஆகும் – அவை உடலொடு சேரச் சன்னதம் தோன்றும் இயலிசை நாடகம்

தமிழணங்கு  Read More »

“கள்” பெற்ற பெருவாழ்வு

– டாக்டர் மு. வரதராசன், ‘மொழியியற் கட்டுரைகள்’ நூலில் இருந்து        எதற்கோ தொடங்கிய முயற்சி வேறு எதற்கோ பயன்படுவது உலகியற்கை. வெண்கதிரைக் குறிக்க ஏற்பட்ட ‘திங்கள்’ என்னுஞ் சொல் இன்று அப்பொருளை அவ்வளவாக உணர்த்தாமற் கிழமையையும் மாதத்தையும் உணர்த்தப் பயன்படவில்லையா? அதுபோல் அஃறிணையாகிய குழந்தைகளை உணர்த்த ஏற்பட்ட ‘மக்கள்’ என்னும் சொல் காலப்போக்கில் உயர்திணையாகிய மனிதரை உணர்த்துவதாயிற்று.   ‘கள்’ மிகப் பழையது; நெடுங்காலத்திற்கு முன்பே இருந்தது. ‘மக்கள்’ தோன்றிய பழங்காலத்திலேயே ‘கள்’ இருந்தது. ஆனால் பழங்காலத்தில் அதற்கு

“கள்” பெற்ற பெருவாழ்வு Read More »

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தமிழுக்கு என்ன தந்தது? எனக்கு இசை நுணுக்கங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இசை என்ன செய்யக் கூடுமென்று உணர்ந்திருக்கிறேன். ‘அலை பாயுதே’ படத்தில் வரும் ‘ஸ்நேகிதனே’ பாடலை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன். அதன் ஆரம்பத்தில் வரும் ‘கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கருவம் அழிந்ததடி’ என்ற வரி தமிழின் மிகப்பழம்பெரும் பா வடிவமான குறள் வெண்பாவின் இலக்கண அமைப்புக்குள் அடங்கக் கூடியதாய் இருப்பதை நேற்றுத்தான் எதேச்சையாகக் கவனித்தேன்.

வள்ளுவர், வைரமுத்து, வாலி, ரஹ்மான், ராஜா Read More »

பாரதியின் ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின் அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக்-களித் தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ! அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை ஆசன விளிம்பில் உங்களைக் கொண்டு வந்து வைக்கின்ற ஓர் investigative crime thriller; அடுக்குகள் நிறைந்த ஆழமான கவிதை; ஞானத்தை நோக்கிய மானச யோகம் – இவை மூன்றிலும் பொதுவாகக் கிடைக்கக் கூடிய அனுபவம் என்ன? இதோ – அறுதியான முடிவை, எல்லாவற்றுக்கும்

பாரதியின் ஊழிக்கூத்து Read More »

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும்

மணிரத்னம் ஒரு epic filmmaker. எந்த அர்த்தத்தில் என்றால் அவர் சொல்ல விழைகிற கதைகள் காவியக் கருப்பொருள் கொண்டவை. தளபதி, ராவணா நேரடியாக இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டு மறு ஆக்கம் செய்யப்பட்ட கதைகள். அக்னி நட்சத்திரத்தின் கார்த்திக், மௌன ராகத்தின் ரேவதி ஆகியோரின் மனக்கொந்தளிப்புகளும் கூட எனக்கு முறையே கர்ணன்/விதுரனையும் அம்பையையும் நினைவு படுத்துபவை. காவியச்சுவை கொண்ட கதைகளை நாடுகின்ற மனப்பாங்குதான் மணிரத்னத்துக்கும் ஜெயமோகனுக்கும் ஒத்திசைவைத் தந்திருக்கக் கூடும் என்றும் நான் எண்ணிக்கொள்வதுண்டு. செக்கச் சிவந்த வானத்தைத்

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் சிலப்பதிகாரமும் Read More »

போட்டி மனப்பான்மை அவசியமா?

1 நிமிட வாசிப்பு – போட்டி போடுவது என்பது முதிராத நிலையில் இருந்த முதலாளித்துவம் தன்னை முன் தள்ளுவதற்காக மனிதர்களிடையே வளர்த்து விட்ட மனப்பண்பு. ஓயாத மனித உழைப்பு அசுரத்தனமாகப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாயை. நுண்மனமும் கூர் அறிவும் கொண்டவர்களுக்கு இன்றைய நவீன உலகில் போட்டி மனப்பான்மை உபயோகம் தராத ஒன்று. இன்று அவசியமானது கூட்டு நன்மைக்காக ஒவ்வொருவரும் தத்தமது தனி ஆற்றலை – தனித்துவமான ஆற்றலை – ஒருங்கிணைத்துச் செயல்படுவது. விளைவாகக் கிடைக்கும்

போட்டி மனப்பான்மை அவசியமா? Read More »

மொழி பற்றிய சில சிந்தனைகள்

ஜூன் 13, 2021 முகநூலில் எழுதியது: தமிழனாக இருப்பதொன்றே பெருமை என்று நான் நினைப்பதில்லை. தமிழ் பற்றிய எனது பெருமிதத்துக்கு அந்த மொழிவழி சிந்திக்கும்தோறும் அடைகிற அக அனுபவத்தின் செழுமை காரணமாகிறது. அதனது விரிவும் ஆழமும் ஆழிபோல் மிகுந்திருக்க, என்னால் அறிந்து கொள்ள முடிவது கடுகளவு என்பதை உணரும்போது உருவாகும் வியப்பால் பெருகுவது அப் பெருமிதமும் உடன்வரும் உவகையும். அதன் ஆழத்தையும் விரிவையும் உணரும் பொருட்டு ஒரு துரும்பைத்தானும் கிள்ளிப்போடாமல் தமிழன் தமிழன் என்று மார்தட்டுவதால் நன்மை

மொழி பற்றிய சில சிந்தனைகள் Read More »

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை

நிறையவே பாடுபட்டு ஒரு மலை உச்சியை அடைந்து விடுகிறீர்கள். அடுத்து என்ன? உச்சியை அடைந்தவருக்கு இனிமேல் எட்டுவதற்கு என்று ஓர் உயரம் இருக்காது. கீழே இருப்பது அதல பாதாளம். ஓர் ஆட்டத்தில்  வெற்றி அடைந்த பிறகு அடுத்து என்ன செய்வது என்பது சிக்கலான கேள்வி. வெற்றி என்ற மலையுச்சியை அடைந்து விட்டவர் எதிர் நோக்கும் அபாயம் பற்றித் தாவோயிசம் பேசுகிறது. வெற்றியின் போதை நமது கூர்மதியை மழுங்கச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்

வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை Read More »

பாரதியின் பேராசை: அசைவறு மதியும் ஆசைப்பெருக்கும்

அசைவுறு பேரண்டத்தை அசைவறு மதி கொண்டு நோக்க இயல்வதே கடவுள் நிலை. “Everything is in constant flux” – அனைத்தும் மாறாத ஓட்டத்தில் உள்ளன. ‘ஒரே ஆற்றில் நீங்கள் இருமுறை இறங்க முடியாது’ என்பது கிரேக்க மெய்யியல் ஞானி ஹெரக்லைடஸ் சொன்னதாகக் கூறப்படும் புகழ்பெற்ற வாக்கியம். ஏனென்றால், அந்தக் கணம் கடந்து விடும். அடுத்த கணம் அது புதியவோர் ஆறு. மாற்றம் அப்பேர்ப்பட்ட வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பது. சுப்பிரமணிய பாரதியை நாம் மகாகவியாக – பெருங்கவிஞனாகக் – கொண்டாடுவதற்கு அவனிடம் இருந்த பேராசையும் ஒரு

பாரதியின் பேராசை: அசைவறு மதியும் ஆசைப்பெருக்கும் Read More »

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே?

எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆளரவமற்ற ஓர் இடத்தில் இருந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பிட்சு விரும்பினார். மடாலயத்திலிருந்து புறப்பட்ட அவர் தூரத்தில் இருந்த குளத்தடிக்குச் சென்று கரையிலிருந்த படகில் ஏறினார். தானே துடுப்பு வலித்தவாறு குளத்தின் மையப்பகுதிக்குச் சென்றார். தனிமையில் கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். சுற்றி வர எவருமில்லை. அடுத்த சில மணி நேரம் நிசப்தம் மட்டுமே சூழலை நிறைத்தது. ஆழ்ந்த தியானம். மெய் மறந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரம் திடீரென்று

கோபம் குடிகொண்டிருப்பது எங்கே? Read More »

கொரோனா கால உள்ளிருப்பு – சில மனப்பதிவுகள்

ஓசோன் படல ஓட்டை, பருவ நிலை மாற்றம், வளி மாசு இன்னோரன்ன பலவற்றையும் ஆய்ந்து பேச எத்தனையோ அனைத்துலக மா நாடுகள் கூட்டப்பட்டபோதும் அவை எதுவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாதத் தெரியவில்லை.
தான், தனது என்ற மாயத் தன்னுணர்வை (ego) மீறி இயற்கையோடும் பிரபஞ்சத்தோடும் இயைந்த கூட்டு மனமாகத் தன்னை ஆக்கிக்கொள்ள மனிதனால் இதுவரை இயலவில்லை.

கொரோனா கால உள்ளிருப்பு – சில மனப்பதிவுகள் Read More »

×